Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பயனுள்ள ஜீவியம் பரிசுத்த ஆவிக்குத் தன்னை ஒப்படைப்பதை பொறுத்தது

    நமக்கு முன் இருக்கும் வேலையை நமது சொந்த பெலனால் செய்யும்படி தேவன் கேட்கிறதில்லை, நமது மானிட சக்திகளுக்கு மிஞ்சின தெய்வீக உதவியை அவர் அளித்திருக்கிறார். ஒவ்வொரு நெருக்கடியிலும் நமக்கு உதவி செய்யவும், நமது நம்பிக்கையையும் நிச்சயத்தையும் பெலப்படுத்தவும், நமது மனதை பிரகாசிப்பிக்கவும், நமது இருதயத்தை சுத்தகரிக்கவும் அவர் பரிசுத்த ஆவியை கொடுக்கிறார்.CCh 309.2

    அவருடைய சரீரமாகிய சபை மறுரூபமடையவும், பரலோக வெளிச்சத்தால் பிரகாசிக்கவும், இம்மானுவேலின் மகிமையை உடையதாக இருக்கவும் கிறிஸ்து ஒழுங்கு செய்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய வெளிச்சம், சமாதானம் இவைகளால் சூழப்பட்டவனாக இருக்கச் செய்வது அவரத் நோக்கம். தன்னலத்தை அப்புறப்படுத்தி, தனது ஜீவியத்தில் பரிசுத்த ஆவியானவர் வேலை செய்வதற்கு இடமுண்டாக்கி, முழுவதுமாகத் தன் ஜீவியத்தைத் தேவனுக்கு பிரதிஷ்டை செய்கிறவனால் வரும் பிரயோஜனம் அளவிடப்படாதது.CCh 310.1

    பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டதினால் ஏற்பட்ட பலன் யாது? உயிரோடெழுந்த இரட்சகரின் நற்செய்தி உலகத்தில் குடியேற்றப்பட்ட எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. சீஷர்களுடைய இருதயம் பூரணமாகவும், ஆழமாகவும், எட்டக்கூடியதுமான தயாள குணத்தினால் நிரப்பப்பட்டு, அதினால் அவர்கள் ஊக்கப்பட்டு, உலகத்தின் முனைகளுக்குப் போய் நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராடாதிருப்பேனாக என சாட்சி பகரச் செய்தது. கலா: 6:14. அவர்கள் சத்தியத்தை இயேசுவில் உள்ளபடி கூறியறிவித்த போது, தூதின் வல்லமைக்கு இருதயங்கள் இணங்கின. நாலாபக்கங்களிலுமிருந்து குணப்படவர்கள் தன்னிடத்தில் வந்து கூடினதைச் சபை கண்டது. விலையேறப்பட்ட முத்தை, பாவிக கிறிஸ்தவர்களுடன் இணைந்து தேடினார். சுவிசேஷத்திற்குக் கடும் எதிர்ப்புக் காட்டினவர்களும் சுவிசேஷத்தைப் பரப்புவதில் முதன்மைப் பெற்று விளங்கினர். பெலவீனன் தாவீதைப் போலவும் தாவீதின் வீட்டார் கர்த்தரின் தூதனைப் போலவும் இருப்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் அடைந்தது. தெய்வீகத்திற் கொப்பான அன்பும், சகாயம் செய்யும் குணமும் தங்கள் சகோதரர் ஒவ்வொருவரிலும் இருப்பதை கிறிஸ்தவர்கள் கண்டார்கள். ஒரே ஆசை காணப்பட்டது. முன்னேற்றத்திற்கான விஷயம் பிற விஷயங்களை அமிழ்த்திவிட்டது. விசுவாசிகளுக்கிருந்த ஒரே அவர் கிறிஸ்துவைப் போன்ற குணத்தை வெளிப்படுத்தி, அவருடைய ராஜ்யம் விரிவடைவதற்கென உழைப்பதாயிருந்தது. ஆதி சீஷர்களுக்கொப்ப, இன்று ஆவியானவரைப்பற்றிய வாக்குத்தத்தம் நமக்கும் உரியது. பெந்தேகோஸ்தே தினத்தில் இரட்சிப்பின் வார்த்தையைக் கேட்டவர்கள் மேல் உன்னதப் பெலன் தங்கும்படி செய்தது போல் இன்னும் தேவன் ஆண்கள் பெண்கள்மேல் அப்பெலன் தங்கச் செய்வார். அவருடைய வார்த்தையின்பை, அவரைப் பற்றிக் கொள்ளும் யாவருக்கும் அவர்களுக்குத் தேவையான அவருடைய ஆவியும், கிருபையும் வைக்கப்பட்டிருக்கின்றன். 8T. 1920.CCh 310.2