Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உலக அலுவல்களினின்று இளைப்பாறும் நாள்

    தன்னுடைய அற்பமும் அநித்தியமுமான காரியங்கள் நலன் குன்றிப் போகாதிருக்க சர்வவல்லவர் தன்னோடு ஒப்புரவாகும்படி சாகும் தன்மையுடைய மனிதன் முயற்சிப்பது பெருந் துணிகரச் செயலாகும். வேளா வேளைகளில் லெளகீக காரியங்களுக்காக ஓய்வு நாளை உபயோகப்படுத்திக்கொள்வது அதை முழுவதுமாகப் புறக்கணிப்பதாகும். ஏனெனில் அங்ஙனம் செய்வது தங்கள் வசதிக்கேற்ப பிரமாணத்தை பயன்படுத்துவதாகும். சீனாய் மலையினின்று நான் எரிச்சலுள தேவனாயிருக்கிறேன் என கடவுள் முழங்குனார். தம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்து, பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று சொல்லுகிறவர் அறைகுறையான கீழ்ப்படிதலையோ பிளவுபட்ட நாட்டத்தையோ அங்கீகரிக்கமாட்டார். தன் அயலானைக் கொள்ளையிடுவது சிறு காரியமன்று; அப்படிச் செய்வதை கேவலமென்று கூறும் ஒருவன் தேவனால் பிரத்தியேகப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த நேரத்தை தானே திருடும்பொழுது வெட்கமின்றி பரமபிதாவைக் கொள்ளையிடுகிறேன். 4 T. 249-250.CCh 102.2

    நமது வார்த்தைகளும், நினைவுகளும் காக்கப்பட வேண்டும். தொழிலைப்பற்றி பேசி அதற்கான திட்டங்களை ஓய்வு நாளில் வகுப்பது அத்தொழிலை அன்று செய்ததாகவே கடவுள் கருதுகின்றார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிப்பதர்கு உலகக் காரியங்களின் சிந்தனையே ஆகாது. 2 TT. p.185.CCh 103.1

    கடவுள் கூறிய வண்ணம் மனிதன் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்வது அவனுக்கு வசதிதானோவென்று அவர் கேட்கிறதில்லை. மனிதனுடைய கீழ்ப்படியாமையினி மித்தம் அவனை மீட்கும்படி நிந்தையையும், அவமானத்தையும், நீச மரணத்தையும் அடைவதற்கென்று பரலோகத்தை விடு துக்கமும் பாடும் நிறைந்தவராக சஞ்சரிக்க வந்தபொழுது மகிமையின் ஜீவாதிபதி அவருடைய சந்தோஷத்தையும், செளகரியத்தையும் கவனிக்கவில்லை. மனிதன் பாவங்களில் நிலைத்திருக்க அல்ல, பாவங்களிலிருந்து மீட்கப்படவே இயேசு மரித்தார். கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றுவதற்கு மனிதன் தன் தீய வழிகளை விட்டு எத்தியாகத்தையும் பொருட்படுத்தாமல் அவருக்குக் கீழ்ப்படிந்து, தன்னை வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும்.CCh 103.2

    உலக லாபங்கருதி ஓய்வுநாளில் வேலைசெய்யச் சூழ்நிலை சாக்காகாது. கடவுள் ஒருவனுக்கு விதி விலக்குச் செய்தால் எல்லாருக்கும் அவ்விதம் செய்ய வேண்டியதாகும். ஏழைச் சகோதரன் ஒருவன் தான் ஓய்வுநாளில் - வேலை செய்வதின் மூலம் தன் குடும்பத்தை நன்றாக சம்ரட்சணை செய்யக் கூடுமென்றால் அவன் ஏன் அப்படிச் செய்யக்கூடாது? பிற சகோதரரும், நாமுங்கூட ஏன் நமக்கு வசதியாயிருக்கும்போதுமட்டும் ஓய்வுநாளை ஆசரிக்கக்கூடாது? சீனாய் மலையில் பேசிய சத்தம் இதற்கு விடையளிக்கிறது. ஆறு நாளும் நீ வேலை செய்து உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். யாத்.20:9:10.CCh 103.3

    தெய்வ கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்கள் வயது சாக்குப் போக்காகாது. ஆபிரகாம் தம்முதிர் வயதில் கடுமையாக சோதிக்கப்பட்டார். வயது முதிர்ந்த ஆபிரகாமுக்கு கர்த்தருடைய வார்த்தைகள் பயங்கரமும் எதிர்பார்க்கப்படாததுமாயிருந்தன. ஆயினும் அவைகளின் நீதியைக் குறித்து சந்தேகிக்காமலும், கீழ்ப்படிய தாமதிக்காமலுமிருந்தார். வயது முதிர்ந்த் காலத்தில் தன் வாழ்க்கையின் இன்பமாக கருத்தப்பட்ட தன் மகனைப் பலியிடுவது கூடாத காரியமென முறையிட்டுருக்கலாம். மகனைப் பற்றி முன் அருளப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு முரணாக இக் கட்டளை இருக்கிறது என்று அவர் கர்த்தருக்கு ஞாபகப்படுத்தி யிருக்கலாம். அப்படியில்லாமல் ஆபிரகாமின் கீழ்ப்படிதல் முறுமுறுப்பும் நிந்தையுமற்றதாயிருந்தது. அவர் தேவன் பேரில் சற்றும் தயங்கா நம்பிக்கைகொண்டிருந்தார். 4T. 250 - 253.CCh 104.1

    ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க தவறுகிறவர்களை கடிந்து கொள்ளிகிறவர்களாக இயேசுவின் ஊழியக்காரர் இருக்க வேண்டும். ஓய்வுநாளில் உலக சம்பாஷணைகளில் ஈடுபட்டுத் தாங்கள் ஓய்வு ஆசரிப்போர் எனக் கூறிக்கொள்பவர்களை அவர்கள் பட்சத்தோடும், பக்தி வினயத்தோடும் கடிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த நாளில் பக்தி வளர்ந்தோங்க ஊக்க வேண்டும். பரிசுத்த நேரத்தை பலனற்ற முறையில் செலவிட தங்களுக்கு உரிமையுண்டென எவர்ம் எண்ணலா காது. ஓய்வுநாளில் அதிக நேரம் நித்திரை செய்வது தேவனுக்கு அருவருப்பு. அப்படி நித்திரை செய்கிறவர்கள் சிருஷ்டிகரைக் கனவீனம் பண்ணி இப்படிப்பட்ட தங்கள் முன் மாதிரியினால் இதர ஆறு நாட்களிலும் நித்திரை செய்வதில் நேரம் செலவிடுவது மிகவும் நஷ்டமென சொல்லுகிறார்கள், ஆறு நாட்களின் நித்திரையைக் கெடுத்தாயினும் பொருள் சேர்க்க எண்ணி, இழந்த இளைப்பாறுதலை ஈடு செய்ய ஓய்வுநாளில் நித்திரை செய்கிறார்கள். ஓய்வுநாள் இளைப்பாறுதலுகென கொடுக்கப்பட்டது; எனவே ஆராதனைக்குப் போய் என் இளைப்பாறுதலைக் கெடுக்கமாட்டேன் என்று தங்களைச் சபை கூடுதலிலிருந்து நீக்கிக் கொள்கிறார்கள். பரிசுத்த நாளை இவர்கள் தகாதவிதமாய்ச் செலவிடுகின்றனர். அந்த நாளில் விசேஷமாய் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு சிலராகவோ பலராகவோ ஒன்றுகூடி தேவ சபையில் கலந்துகொள்ளும்படி உற்சாகமளிக்க வேண்டும். ஓய்வுநாள்மீது தங்கும் தெய்வீக செல்வாக்கு வார முழுவதும் அவர்களோடிருக்கத் தக்கதாக ஓய்வுநாளில் தங்கள் நேரத்தையும், சக்தியைய்ம் ஆவிக்குரிய காரியங்களில் பிரயோகிக்கவேண்டும். வார நாட்களில், ஓய்வுநாளைப் போல் தெய்வீக எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ற நாள் வேறோன்றில்லை. 2 T.704.CCh 104.2

    மக்கள் எக்காலத்தும் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரித்திருப்பார்களானால், உலகில் நாஸ்திகராவது விக்கிரக ஆராதனைக்காரராவது ஒருக்காலும் இருந்திருக்க் முடியாது. ஏதெனில் தோன்றிய ஓய்வுநாள் நியமம் இவ்வுலகம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. உலகப் படைப்பு முதல் இதுகாரும் முற்பிதாக்கள் அனைவரும் அதை ஆசரித்து வந்திருக்கின்றார்கள். எகிப்தின் அடிமைத்தன காலத்தில் இஸ்ரவேலர் ஓய்வுநாளை மீறும்படி ஆளோட்டிகளால் பலவந்தம் செய்யப்பட்டார்கள். அவர்கள் அப்பொழுது பெரும்பாலும் அதன் பரிசுத்தத்தைப்பற்றிய அறிவை இழந்திருந்தனர். சீனாய் மலையில் கடவுள் நியாயப்பிரமாணத்தைக் கூறியறிவித்தபோது, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க CCh 105.1

    நினைப்பாயாக என்ற நான்காம் கற்பனையின் முதல் வாக்கியமே ஓய்வுநாள் அன்று நியமிக்கப்படவில்லை என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. அது வெகு காலத்திற்கு முன்பே உலக படைப்புடன் தோன்றியது என்பதை அவர் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றர். கடவுளைப்பற்ரறிய மெய்யறிவை மக்கள் மனதிலிருந்து நீக்குவதற்காக சாத்தான் இந்த மாபெரும் ஞாபக சின்னத்தை தகர்த்துப்போட நோக்கங்கொண்டான். மக்கள் சிருஷ்டிகரை மறக்கும்படி அவர்களை ஏவிவிடக் கூடுமானால் அவர்கள் தீமையின் வல்லமையை எதிர்க்க முயலாமல் தனக்கு இறையாகிவிடுவார்கள் என்பது சாத்தானின் எண்ணம். P.P.336.CCh 106.1