Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-15

    தவறினவர்களை நடத்தும் முறை

    எல்லாருக்கும் இரட்சிப்பு கிடைக்கும்படி இயேசு வந்தார். இழந்துபோன உலகம் இரட்சிப்பை அடைவதற்கான கிரயத்தை அவர் கல்வாரிச் சிலுவையில் செலுத்தினார். அவர் தம் மைத்தாமே வெறுத்து, தற்தியாகம்செய்து, சுயநலமற்ற ஊழியம் பரிந்து, தாழ்மையுள்ளவராக நடந்து, எல்லாவற்றிற்கும் மேலாக தமது ஜிவனையும் பலியாக படைத்தது இழந்துபோன மனிதன்பேரில் அவருக்கு இருக்கும் அன்பின் ஆழத்தை சுட்டிக் காட்டுகின்றது. இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே அவர் உலகத்திற்கு வந்தார். ஒவ்வொரு ஜாதியிலும், பாஷைக்காரரிலும் உள்ள பாவிகளுக்கும், அதுவும் எல்லா நிலையிலுள்ள பாவிகளுக்கும் சேவை செய்யவே வந்தார். அவர் எல்லாரையும் மீட்டு அதன் கிரயத்தைச் செலுத்தி அவர்கள் தம்மோடு ஐக்கியப்படவும் தமது அனுதாபத்தில் பங்கடையவும் செய்தார். பெரும் பாவிகளையும், கேடாக தவறுகிறவர்களையும் அவர் விட்டுக் கடந்து செல்லவில்லை. யாருக்கு அவரது ஊழியம் அதிகமாகத் தேவைப்பட்டதோ அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தார். யாரிடம் பெரிய அளவுக்குச் சீர்திருத்தம் தேவையாக இருந்ததோ அவர்களிடம் ஆழ்ந்த ஆனுதாபம் காட்டினார்; யாரிடம் அதிக அனுதாபம் காட்டினாரோ அவர்களுக்காக அதிக ஊக்கத்தோடே ஊழியம் செய்தார். யாருடைய நிலைமை முழுவதும் நம்பிக்கையற்றதாகக் காணப்பட்டதோ, அவரது மறு ருபமாக்கும் கிருபை யாருக்கு அதிகமாக தேவைப்பட்டதோ அவர்களுக்காக அவரது பேரன்பின் இருதயம் அதிகமாக, அதன் மகா ஆழத்தின் அடிமட்டும் தூண்டப்பட்டது.CCh 223.1

    சோதிக்கப்பட்டுத் தவறிப்போன ஆத்துமாக்களுக்காக நாம் அன்பற்றவர்களும், ஆழ்ந்த, வாஞ்சை மிகுந்த, ஆத்து மாவைத் தொடத்தக்க அனுதாபமற்றவர்களுமாக இருந்து வருகின்றோம். நம்முடைய உதவி யாருக்கு அதிக தேவையாக இருக்கின்றதோ அவர்களேக் கடந்து செல்லுகிறவர்களாகவும் மிகவும் குளிரடைந்து, பாவத்திற்கேதுவாகவும் நடந்து கொள்ளுகிறேம். புதிதாக மனந்திருப்பின ஆத்துமா தன்னில் நிலைத்துப்போன பழக்கவழக்கங்களையோ அல்லது ஏதாவதொரு குறிப்பிட்ட சோதனையையோ கடுமையாக எதிர்த்துப் போராடுகிறான். மேலும், அதிகக் கேடான துர்இச்சை அல்லது போக்கினால் சோதனையில் தோல்வியுறும் பொழுது, அவன் விவேகமிழந்து, உண்மையில் தவறிழைத்து விடுகிறான். அத்தருணத்தில் தான் ஆவிக்குரிய ஆரோக்கிய நிலைக்கு அவனைத் திரும்பக் கொண்டுவர அவனுடைய சகோதரர் சக்தி, சாதுரியம், ஞானம் என்பவைகளை உபயோகித்தல் அவசியம். இப்படிப்பட்டவர்களுடைய காரியங்களில் அவசியம். இப்படிப்பட்டவர்களுடைய காரியங்களில் தேவனுடைய வசனத்தின் போதனை பொருந்தும்: சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவளைச் சீர்பொருந்துப் பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாத படிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.” கலா.6:1. “அன்றியும் பலமுள்ளவர்களாகிய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” ரோமர் 15:1. 5T. 603-605.CCh 224.1

    கடுந்தண்டனை, கொடுஞ் சொற்கள் முதலியன உபயோகிப்பதைவிட பிறரைச் சீர்படுத்தவும், இரட்சிக்கவும் மிதமான தண்டனை, மெதுவான மாறுத்தரம், பட்சமுள்ள வார்த்தைகள் உபயோகிப்பது அதிக பிரயோஜனமாகுடம். சற்று அளவு கடந்து பட்சமின்மை பிரயோகிக்கப்பட்டால், நீ அண்டக்கூடாதபடி அவர்கள் உனக்குத் தூரமாவார்கள். ஆயின், ஒப்புரவாக்குதலின் ஆவி அவர்களை உன்னிடம் இணைகம். அப்பொழுது நீ அவர்களைச் சரியான பாதையில் நிலைப் படுத்துவாய். உன்னிடத்திலும் மன்னிக்கிற ஆவி கிரியை செய்யட்டும்; நீ உன்னைச் சுற்றியிருப்பவர்களின் நன்னோக்கத்திற்கும் செய்கைகளுக்கும் தகுந்த மதிப்பு கொடுத்து வேலை செய்தல் வேண்டும். 4T.65.CCh 224.2