Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-28

    அவிசுவாசியை மணந்துகொள்ளாதே

    கிறிஸ்துவ உலகில், கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளை மணந்து கொள்வதைக் குறித்து தேவ வசனம் கூறுகின்ற அறிவுரை பற்றி ஆச்சரியப்படத்தக்க பயங்கரமுள்ள அலட்சியம் நிலவுகின்றது. கடவுளிடத்தில் அன்பு கூர்ந்து, அவருக்குப் பயந்து நடக்கிறதாகச் சொல்லிக்கொள்ளுகிறவர்கள் பலர், அளவிடப்படாத அவரது ஞானமுள்ள ஆலோசனயை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் சொந்த மனம் பின்பற்றும் வழியையே தெரிந்து கொள்ளுகின்றார்கள். இருதிறத்தினருக்கும், இம்மையிலும் மறுமையிலும் இன்பமும் சுக வாழ்வும் பற்றிய முக்கியமான காரியத்தில், பகுத்தறிவையும் நிதானத்தையும் தெய்வ பயத்தையும் ஒருபுறம் ஒதுக்கி விடுகின்றார்கள்; குருட்டுத்தனமான மனக் கிளர்ச்சிக்கும், முரட்டுப் பிடிவாதத்திற்கும் கட்டுப்பட இடங்கொடுக்கின்றார்கள்.CCh 362.1

    மற்றக் காரியங்களில் அறிவும் உனர்ச்சியுமுள்ள ஆடவரும் மகளீரும் இந்தக் காரியத்தில் கூறும் அறிவுரைக்குச் செவியை அடைத்துக்கொள்ளுகின்றார்கள். நண்பர், உறவினர், தேவ ஊழியர்களின் முறையீட்டிற்கும், வேண்டுகோளுக்கும், செவிடராய் இருக்கின்றார்கள். அவர்கள் விழிப்பும் எச்சரிப்பும் பற்றி பேசுகின்ற பேச்சை முறையற்ற தலையீடு என்று மதிக்கின்றார்கள். தங்களைத் தடுத்துரைக்கும் உரிமையும் உண்மையுமுள்ள நண்பரைப் பகைஞர் போல் நடத்துகின்றார்கள். சாத்தான் விருப்பத்தின் படியே இவை எல்லாம் நடைபெறுகின்றன. அவன் ஆத்துமாவை சூழ்ந்து மாய வலை வீசுகின்றான். அது மந்திர சக்தி என்பது போல் அறிவை மயக்கி முட்டாள் ஆக்குகின்றது. தன்னடக்கம் என்னும் கடிவாளத்தை இச்சை என்னும் பிடரியிலிருந்து பகுத்தரிவு தளர விடுகின்றது. தூய்மையற்ற காம இச்சைக்கு இரையாக அடித்துக்கொண்டு போகப்பெற்றவர். நிர்ப்பாக்கியமும் அடிமைத்தனமும் சூழ்ந்த வாழ்க்கையின் நடுவில் விழித்தெழும்பும் பொழுது, காலம் பிந்திப் போகின்றது. இது கற்பனை புனைந்து வரைந்துள்ள ஓவியப்படம் அன்று; உண்மை நிகழ்ச்சிகளை ஒழுங்காக எடுத்துரைக்க கட்டுரையே, தாம் தெளிவாக எடுத்துக்கூறி விலக்கியுள்ள ஐக்கியத்தில் சேர்ந்துகொள்ளக் கடவுள் அனுமதி கொடார்.CCh 362.2

    ஆண்டவர் பண்டை இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றுலும் வாழ்ந்திருந்த விக்கிரகாராதனைக்காரர்களுடனே கலப்பு மணம் செய்துகொள்ளக்கூடாதென்று கட்டளையிட்டார். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமல்ம், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரர்க்குக் கொள்ளாமலும், இருப்பாயாக. (உபா 7:3,4) காரணம் கூறியுள்ளார். அவரது அளவிடப் படாத ஞானம் அவ்வகைக் கலப்பு மணத்தின் பலன்களை முன்னறிந்துள்ளது. அவர் விளம்பியது:- என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள் மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம்; பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்கு சொந்தமாயிருக்கும்படி தெரிந்து கொண்டார். உபாகமம் 7:6, 14:2.CCh 363.1

    புதிய ஏற்பாட்டில் இவ்வகையாகவே கிறிஸ்தவர்கள் அவபத்தியுள்ள மக்களுடனே கலந்து மணஞ் செய்யக்கூடாது என்று விலக்கியிருக்கின்றது. பவுல் அப்போஸ்தலர் கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்தில் பகர்ந்துள்ளது:--- மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்கும் காலமள வும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறான்; தன் புருஷன் மரித்த பின்பு, தனக்கு இஷ்டமானவனாயும், கர்த்தருக்குட்பட்டவனாயும் இருக்கிற எவனையாகிலும் விவாகம் பண்ணிக்கொள்ள விடுதலையாய் இருக்கிறான் மீண்ட்ம் தம் இரண்டாம் திருமுகத்தில் அவர் வரைந்துள்ளது:--- அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம் பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்குப் பிதாவாய் இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாய் இருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.CCh 363.2

    கடவுள் மக்கள் ஒரு போதும் விலக்கப்பட்ட நிலத்தில் பிரவேசிக்கத் துணியலாகாது. விசுவாசியும் அவிசுவாசியும் மணஞ் செய்துகொள்ளக்கூடாது என்று கடவுள் விலக்கியுள்ளார். ஆனாலும், மிகப் பெரும்பாலும், குணப்படாத இருதயம் தன் சொந்த விருப்பங்களைப் பின்பற்றிப் போய், கடவுள் அனுமதிக்காத மணங்கள் நடைபெறுகின்றன. இக்காரணத்தினால், உலகில் ஆடவரும் மகளீரும் பலர் நம்பிக்கை இல்லாதவர்களும், கடவுள் அற்றவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்களுடைய மேன்மையுள்ள ஆசைகள் உயிரற்றுப் போயின; கால இடச் சூழ்நிலைச் சங்கிலியினால் அவர்கள் சாத்தானுடைய வலையில் கட்டுண்டிருக்கின்றார்கள். காம் இச்சை, உள்ளக் கிளர்ச்சி, இவற்றின் ஆட்சிக்குட்பட்டவர் கள், இவ்வுலக வாழ்க்கையில் கசப்புள்ள பலனையே அறுப்பார்கள்; அவர்கள் போக்குத் தங்கள் ஆத்தும நஷ்டத்தில் போய் முடியும்.CCh 364.1

    சத்தியத்தை அறிக்கையிடுவோர் அவிசுவாசிகளை மணந்து கொள்வதினால் கடவுள் சித்தத்தை காலின் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அவர்கள் அவருடைய தயவை இழந்து மனந்திருப்புதலுக்காகக் கசப்புள்ள முயற்சி செய்கின்றார்கள். அவிசுவாசிமுள்ளவர்கள் மிகச் சிறந்த நல்லொழுக்கப் பண்புடையவர்களாய் இருக்கலாம். என்றாலும் அவனாவது அவளாவது கடவுள் கட்டளைகளை நன்கு மதியாமல், இவ்வளவு பெரிய இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருக்கின்றார்கள் என்னும் உண்மை, அத்தகைய ஐக்கியத்தை நிறைவேற்றி வைக்கக் கூடாது என்பதற்குப் போதிய நியாயம் ஆகும். அவிசுவாசமுள்ளவர்கள் நடக்கை, உன்னிடத்தில் ஒரு குறை உண்டு என்று இயேசு கூறிய வாலிபன் நடக்கை போன்றது; தேவையானது அது ஒன்றே.CCh 365.1