Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் உள்ள மாபெரும் போரின் தரிசனம்

    1858-ம் ஆண்டு மார்ச்சு மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில், வட அமெரிக்காவின் கீழ்ப்பகுதியின் கிராமப்பள்ளிகூடம் ஒன்றில், சபையார் ஓர் ஆராதனைக்காக கூடியிருந்தனர். இளைஞன் ஒருவனின் அடக்க ஆராதனையை எல்டர் ஜேம்ஸ் உவைட் நடத்தினார். அவர் பேசி முடிந்ததும், உவைட் அம்மையார், துக்கத்தில் மூழ்கியிருப்பவர்களுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் பேசிவிரும்பினர். அவர் எழுந்து இரண்டொரு நிமிஷம் பேசிவிட்டு அமைதியாய் நின்றனர். அடுத்தபடியாக அவர் என்ன பேசப் போகிறார் என்று ஆவலோடு அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். தேவனுக்கு மகிமை, தேவனுக்கு மகிமை, தேவனுக்கு மகிமை என்று மூன்று தடவை அம்மையார் மென்மேலும் அழுத்தமாய்க் கூறியதைக் கேட்டு, அங்கிருந்தவர் சிறிது வியப்பு அடைந்தனர். அவருக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று.CCh 17.1

    அம்மையாருக்கு அளிக்கப்படும் தரிசனங்களைப்பற்றி எல்டர் ஜேம்ஸ் உவைட் அங்குக்கூடியிருந்தவர்களுக்கு விளக்கிக் கூறினார். பதினேழாவது வயது முதல் அவர்களுக்குத் தரிசனம் கிடைத்து வந்தது. தரிசனம் காணும்பொழுது அவர் கண்கள் திறந்திருந்த போதிலும் நெடுந்தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளைக் கூர்ந்து கவனிப்பதுபோல் தோன்றும். தரிசனம் முடியும் வரை, தம் அண்டையிலும், தம்மைச் சுற்றிலும் நடப்பவை ஒன்றும் அவருக்குத் தெரியாது. அவர் தரிசனங் காண்பதற்குச் சான்றாக, தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வ வல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும் போது கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது, என்ற வசனங்களாஇ (எண் 24:4, 16.) எடுத்துக் காட்டினார்.CCh 17.2

    தானியேல் தீர்க்கதரிசங் கண்டபோது உண்டான அனுபவத்தையும், அம்மையாரின் அனுபவத்தைய்ம், ஒப்பிட்டுக் காட்டினார். இனி என்னில் பெலன் இல்லை, என்னில் மூச்சும் இல்லை (தானி. 10:17.) அம்மையார் தரிசனங்காணும் பொழுது மூச்சுவிடுவதில்லை. அங்கு இருந்தவர்களிடம் அதைச் சோதித்துப் பார்க்கும்படி, எல்டர் ஜேம்ஸ் உவைட் கேட்டுக் கொண்டார். தரிசன வேளையில் அம்மையாரைச் சோதிக்க விரும்பும் எவரையும் அவர் தடுப்பதில்லை. மருத்துவர் ஒருவர் உதவியுடன் அவரைச் சோதிப்பது அவருக்கு மிகவும் விருப்பம்.CCh 18.1

    அங்குக் கூடியிருந்தவர்களில் அவரைச் சோதிக்க விரும்பிய சிலர் நெருங்கிக் கவனித்தார்கள். அவர் மூச்சிவிலவில்லை. இருதயத் துடிப்பு ஒழுங்காக இருந்தது. கன்னங்கள் இயற்கை நிறம் மாறாமல் இருந்தன. ஒரு கண்ணாடி கொண்டு வந்து மூக்கின் நேராகப் பிடித்தனர். ஈர ஆவிபடியவில்லை. மெழுகுவர்த்திக் கொளுத்தி மூக்கருகில் காட்டினர். மெழுகுவர்த்திச் சுவாலை சிறிதும் அசையவில்லை. அவர் சுவாசிக்கவில்லையென்று மக்கள் அறிந்து கொண்டனர். அவர் அந்த அறையில் அங்கும், இங்கும் உலாவினார். தரிசனத்தின் போது வெளிப்படுத்தப்பட்டனவற்றின் கருத்துக்களைக் காட்டும் வியப்பு சொற்கள் இடையிடையே வெளிப்பட்டன. காட்சிக் கேற்றவாறு கரங்கள் பொருத்தமாக அசைந்தன. தானியேலைப் போல் தம் பலம் இழந்து உன்னத பலத்தை அடைந்தார். தானி. 10:7, 8, 18, 19.CCh 18.2

    இக்காட்சி இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த இரண்டு மணி நேரத்திற்கு இடையே ஒரு தடவையாவது அம்மையார் சுவாசித்ததில்லை. காட்சி முடிந்ததும் ஆழ்ந்த மூச்சு வாங்கினார். சுமாராக ஒரு நிமிஷத்துக்குப்பின் அவ்வாறே மூச்சு வாங்கினார். பின் சாதாரணமாய் சுவாசிக்க ஆரம்பித்தார். சுற்றுலும் நடப்பவைகளைப் பற்றிய உணர்ச்சி உண்டாயிற்று.CCh 18.3

    திருமதி மார்த்தாள் அமதான் என்பவர் உவைட் அம்மையார் தரிசனங் கண்ட பலதடவைகளில் அவரோடு இருந்ததுண்டு. அவர் கண்ட தரிசனங்களைப் பற்றி அவர் கூறுகின்றார்:-CCh 19.1

    “அவர் தரிசனம் காணும்போது அவர் கண்கள் திறந்திருக்கும். அவர்களுக்கு மூச்சு இராது. சில வேளைகளில் தாம் காணும் காட்சிக்கு இசைவாக அவருடைய தோளும், கையும் பொருத்தமாக அசையும். ஆனால் மற்றவர் எவரும் அந்த வேளையில் அவர் புயத்தையோ கையையோ ஒரு சிறிதேனும் அசைக்க முடியாது. சில வேளைகளில் பரத்தைப் பற்றியோ இகத்தைப்பற்றியோ தாம் காணும் தரிசனத்தைத் தனிப் பதங்களாலும், வாக்கியங்களாலும் தம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் அறியும் படியாக வெளியிடுவார்.”CCh 19.2

    அவர் தரிசனங் கான ஆரம்பிக்கும்பொழுது மகிமை என்று வார்த்தை முதலில் வெளிப்படும். அக் குரல் பக்கத்தில் கேட்பதுபோல் தோன்றும். பின் அது நெடுந் தொலைவில் கேட்பதுபோல் தோன்றும். சில சமயங்களில் இது திரும்பத் திரும்ப நிகழும்.CCh 19.3

    “தரிசனங் காணும்போது அவர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சமோ கிளர்ச்சியோ உண்டாவதில்லை. அப்பொழுது அவ்விடத்தில் அமைதியும் பயபக்தியும் நிலவி நிற்கும்.CCh 19.4

    “தரிசனம் முடிவடையும்போது பரலோக ஒளி மறையும். திரும்பவும் பூவுலகிற்கு வருவதாக அவருக்குத் தோன்றும். இ- - ரு- -ள் என்று கூறிக்கொண்டே ஆழ்ந்த மூச்சு வாங்குவார். மிகவும் களைப்பும் பலவீனமும் அடைந்திருப்பார்.”CCh 19.5

    பள்ளிக்கூடக்கட்டிடத்தில் உண்டான இரண்டு மணி நேரத்தரிசனத்தை மீண்டும் கவனிப்போம்.CCh 19.6

    “கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் நீண்டகாலம் நடந்து வருகின்ற பெரும் போராட்டத்தைப்பற்றிப் பத்து வருஷங் களுக்குமுன் நான் கண்ட அந்தக் காட்சி திரும்பவும் எனக்குத் தோன்றி அக்காட்சியை எழுதிவைக்க வேண்டும் என்றும் எனக்குக் கட்டளை பிறந்தது.CCh 19.7

    ஆரம்ப காலம் முதல் நடந்தவை யாவும் தம் கண்முன் நிகழ்வதுபோல் அவர் கண்டார். அவர் பரலோகத்தில் இருந்தார். அங்கே பாவம் உற்பத்தியானதும், லூசிபர் அங்கிருந்து தள்ளப்பட்டதும், உலகம் உண்டாக்கப்பட்டதும், ஆதிப்பெற்றோர் ஏதேனில் வாழ்ந்ததும், சர்ப்பத்தின் வார்த்தைகளுக்கு இடம் கொடுத்துச் சோதனையில் விழுந்ததும், ஏதேனிலிருந்து அவர்கள் துரத்தப்பட்டதும், முதலிய வேத சரித்திர நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவர் கண்முன்னே கடந்துபோயின. முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் அடைந்த அனுபவங்களையும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், அவரது பாடு, மரணம், உயிர்த்தெழுதல் முதலியவற்றையும், அவர் பரத்துக்குச்சென்றதையும், அங்கு பிரதான ஆசாரியனாக இருந்து, நமக்காகச் செய்யும் வேலை முதலியவைகளையும் கண்கூடாகக் கண்டார் சுவிசேஷத்தைப் எங்கும் பரப்புகிறதற்காக சீஷர்கள் செய்த முயற்சிகளைக் கண்டார். எவ்வளவு துரிதமாக மார்க்கத் துரோகமும், இருண்ட காலமும், தொடர்ந்ததும், சீர்திருத்தவாதிகள் ஆண்களும் பெண்களும் எழும்பினதும், அவர்கள் மரணத்தையும் பொருட் படுத்தாமல் சத்தியத்திற்காக உறுதியாய் நின்றதையும் கண்டார். பரலோகத்தில் 1844-இல் ஆரம்பித்த நியாய விசாரணையும், நமது காலம் வரைக்கும் நடக்கும் சம்பவங்களையும் காணப் பெற்றார். கிறிஸ்து மேகங்களில் வருவதையும் ஆயிர வருஷ அரசாட்சி நடப்பதையும், வானமும் பூமியும் புதுப்பிக்கப் படுவதையும் கண்டார்.CCh 20.1

    இத்தகைய உள்ளம் அள்ளும் காட்சிகளோடு தம் வீடு சென்றபின் தாம் கண்ட தரிசனத்தை எழுதினர். ஆறு மாதங்களுக்குப்பின் அது அச்சிடப்பட்டு 219 பக்கங்கள் கொண்ட நூலாக, The Great Controversy Between Christ and His Angles and Satan and His Angels. (கிறிஸ்துவுக்கும் அவர் தூதர்களுக்கும், சாத்தானோடும் அவன் தூதர்களோடும் நிகழ்ந்த மாபெரும் போராட்டம்) என்னும் பெயருடன் வெளியாயிற்று.CCh 20.2

    கடைசிப் போரில் சாத்தான் சபையை வஞ்சிக்கும் முறைகளும், அதற்காக அவன் வகுத்திருக்கும் திட்டங்களும், அந்நூலின் விளைவாகக் காட்டப்பெற்றுள்ளதால், மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு அந் நூலை வரவேற்றார்கள். தேவன் தாம் சொன்ன வாக்கின்படி, கடைசி காலத்தில் வாழும் மக்களிடம் தீர்க்கதரிசன ஆவி மூலம் பேசினதற்காக அட்வெந்திஸ்டர் எவ்வளவு நன்றியுடையவராயிருந்தார்கள்!CCh 21.1

    அந் நூலில் சுருக்கமாகத் தொகுத்துள்ள மாபெரும் போராட்ட வரலாறு, பிற்காலத்தில், ஆரம்பகாலத் தரிசனங்கள் (Early Writings) என்னும் நூலின் பிற்பகுதியாக, ஆவிக்குரிய வரங்கள் (Spiritual Gifts) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.CCh 21.2

    நாள் செல்லச் செல்லச் சபையும் வளர்ந்தது. பின்னே கிடைத்த தரிசனங்களில் திருப்போரின் வரலாறு அம்மையாருக்கு மிகவும் விரிவாகக் காண்பிக்கப்பட்டது. அவைகளை 1970-ம், 1884-ம் ஆண்டுகள் நடுவில் நான்கு சிறு தொகுதிகளாக வெளியிட்டார்கள். தீர்க்கதரிசன ஆவி என்று பெயர் பெற்ற நூல்கள் (spirit of Prophecy) அவைகள். அந் நூளிலிருந்து தெரிந்தெடுத்த திருப்போரின் முக்கியமான பகுதிகளைக் கொண்டது. இரட்சணிய சரிதை (Story of Redemption) இதனைப் பல்வேறு மொழிகளில் பெயர்த்து வெளியிட்டமையால், போரின் வரலாறு உலகத்தின் பற்பல நாடுகளிலுள்ள மக்களும் அறிந்து கொள்ள உதவியாயிற்று. அதற்குப்பின்பு அம்மையார் யுகங்களின் போராட்டத்தொகுதிகள் (Conflict of the Ages Series) என்ற ஐந்து தொகுதிகளை வெளியிட்டார். அவை முற்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும் (Patriarchs and Prophets), தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும் (Prophets and Kings), யுகங்களின் வாஞ்சை (The Desire of Ages), அப்போஸ்தலர் நடபடிகள் (Acts of the Apostles), மாபெரும் போராட்டம் (The Great Controversy) என்ற அழைக்கப்படுகின்றன. மாபெரும் போரின் முழு விபரங்களும் இந் நூல்களில் தெளிவாய்க் காணலாம்.CCh 21.3

    திருமறைக்கு இணக்க இந் நூல்கள் உலகப்படைப்பு முதல் கிறிஸ்துவ நூற்றாண்டு வரையிலும், அதுமுதல் தொடர்ந்து கடைசிக்காலம் வரையிலும் உள்ள நிகழ்ச்சிகளை விளக்கி, கிறிஸ்துவின் அடியார்களுக்குச் சிறந்த தெய்வ ஒளியை அளித்து, அவர்களுக்கு ஊக்கம் விளைக்கின்றன. இத்தொகுதிகள் ஏழாம் நாள் அட்வெந்திஸ்தரை வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் மக்களும் ஆக உதவி புரிகின்றன. கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் (ஆமோச் 3:7.) என்ற வாக்கின் நிறைவேறுதலை இந்த அனுபவ மூலம் நாம் காண்கிறோம்.CCh 22.1

    இந் நூல்களில் கூறியுள்ள மாபெரும் போர் வரலாறு, தமக்கு எவ்வாறு வெளிப்பட்டது என்பதை உவைட் அம்மையார் கூறியுள்ளார்:- இப்பக்கங்களை எழுதியவருக்கு நீண்ட காலமாக நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போரைப்பற்றி பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தியிருக்கின்றார். பற்பல காலங்களில் நமது இரட்சிப்பின் காரணரும் ஜீவாதிபதியுமாகிய கிறிஸ்துவுக்கும், பாவத்திற்கு காரணனும் கடவுளின் பரிசுத்த கற்பனையை முதல் முதலாக மீறினவனும் தீவினைகளுக்கு அதிபதியாகிய சாத்தானுக்கும் இடையே நடக்கும் மாபெரும் போராட்டத்தைப் பற்றி இடைக்கிடையே எனக்கு காட்சிகள் காட்டப்பட்டன.CCh 22.2

    “தேவ ஆவி தெய்வீக வசனங்களால் சொல்லிய பெரிய சத்தியங்களை என் மனதில் பதியவைத்து, கடந்த காலங்களில் நடந்தவைகளையும், இனிமேல் நடக்கப் போகிறவைகளையும் எனக்குக்காண்பித்தார். அவைகளை மற்றவர்கட்கு அறிவிக்கவும் எனக்குக் கட்டளையிட்டார். கடந்த காலங்களில் நிகழ்ந்த வரலாற்றை வெளியிடுவதால், மிகவும் தீவிரமாய் நெருங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் போராட்டத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் ஓரளவு அறிந்து கொள்ளுவார்கள்.”CCh 23.1