Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உதவி அளிக்கும் வகை

    உதவி அளிப்பதற்குரிய வழிவகைகளை ஜெபத்துடனும், கவனத்துடனும் ஆராய வேண்டும. நாம் படைத்த மானிடருக்கு எத்தகைய உதவி அளிப்பதென்று கடவுளே அறிவார். அவர் மனிதரைப் போல் குறுகிய பார்வையுடையவரல்லர். நாம் ஞானமடைவதற்கு கடவுளைத் தேட வேண்டும். தங்கள் உதவியைப் பெற விரும்புகின்ற எவருக்கும் பாரபட்சமின்று சிலர் உதவுகின்றனர். இது தவறு, தேவைப் பட்டோருக்கு உதவியளிக்கும்போது அவர்களுக் கேற்ற நல்லுதவி அளித்தல் வேண்டும். உதவி அளிக்கப்படுவதால் தங்களை எப்பொழுதும் உதவி வேண்டுகிறவர்களாக்கிக் கொள்ளுகிறவர்களும் உண்டு. அதாவது உதவி கிடைக்கிறவரைக்கும் அவர்கள் அதையே சார்ந்திருப்பர். இத்தகையோருக்கென்று நமது கவனத்தையும் நேரத்தையும் செலவிடுதல் சோம்பலையும், சக்தியின்மையும் வளர்ப்பதாகும். CCh 241.3

    தரித்தரருக்கு உதவியளிக்கும்போது நாம், “நான் வீண் செலவை வளர்க்கின்றேனோ? நான் உதவியளிப்பதால் அவர்களுக்கு கெடுதி நேரிடுகின்றதோ?” என்று யோசிக்க வேண்டும், தன்னுடைய ஜீவனத்திற்காக உழைக்கக் கூடிய எவனும் பிறரை நம்பி வாழக்கூடாது.CCh 242.1

    ஞானமும் பகுத்தறிவுமுள்ள ஆண்களும பெண்களுமாகிய தெய்வ மக்கள் தரித்திரரையும் தேவையுள்ளோரையும் விசாரிப்பதற்கு நியமனம் பெற்ற, முதன் முதலாக விசுவாச வீட்டரின் காரியங்களை விசாரிக்க வேண்டும். அவர்கள் இது விஷயத்தில் சபைக்கு அறிக்கை செய்து, என்ன செய்யப் பட வேண்டுமென்று ஆலோசனைக் கூறவேண்டும். 6T.277.278.CCh 242.2

    இத்தூதை ஏற்கும் ஏழைக்குடும்பங்கள் ஒவ்வொன்றின் பாரத்தையும் நமது சகோதரர்கள் சுமக்க வேண்டுமென்பது கடவுகளின் கட்டளையல்ல. அவ்வாறு செய்தால் புதிய இடங்களில் வேலை ஆரம்பிப்பதற்கு அவசிமான பணம் விரயமாகும். சுறுசுறுப்பின்மையினாலும், சிக்கன மின்மையினாலும் அனேகர் தரித்திரராகியுள்ளனர். பொருளைப்பயன் படுத்தும் விதத்தை இவர்கள் அறியாதிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வது கேடு செய்வதாகும். சிலர் எப்பொதும் தரித்திரராகவே இருப்பார்கள். மிகவும் சிறந்த வாய்ப்புகள் அளிக்கப்பெற்றாலும் அவர்களுக்கு விமோசனம் கிடையாது. வரவு அதிகமானாலும் குறைவு பட்டாலும் அவர்கள் தாங்கள் பெறும் அனைத்தையும் தீர்க்காலோசனையின்றி செலவு செய்து விடுகிறார்கள்.CCh 242.3

    இத்தகையோர் தூதை ஏற்றுக்கொள்ளும்போது தங்களைப் பார்க்கிலும் செல்வரான தங்கள் சகோதரர்கிளடமிருந்து தங்களுக்கு உதவியளிக்கப்படுவது நியாயமென்று எண்ணுகின்றனர். அதற்கிடங்கொடாவிடில் அவர்கள் சபையைக்குறை கூறி தங்கள் சகோதரர் அவர்களுடைய விசுவாசத்திற் கேற்ப வழங்கவில்லை என்றும் குற்றப்படுத்துகின்றனர். இவர்கள் காரியத்தில் யார் கஷ்டத்தை ஏற்க வேண்டும்? தேவ சேவைக்கான காரியம் உறிஞ்சப்பட்டு ஏழைகளான, இவ்வகைய்பட்ட பெரிய குடும்பத்தினரின் பொருட்டு கடவுளுடைய பொக்கிஷசாலைகள் வறண்டு போதல் அவசிய கடவுளுடைய பொக்கிஷசாலைகள் வறண்டு போதல் அவசிய மாமோ? அல்ல, அப்பெற்றோர்களே தங்கள் துன்பத்திற்கு பொறுப்பாளிகள். ஓய்வுநாள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளுவதற்குமுன் அவர்களுடைய கஷ்ட நிலை இருந்த பிரகாரமே இப்போழுதும் இருந்து வருமேயன்றி புதியதாக எதுவும் அவர்களுக்கு நேர்ந்து விடாது. T.272,273.CCh 243.1

    கடவுள் தரித்திரரை நமது சபைகளின் எல்லைகளிலெங்கும் வைத்திருக்கின்றார். அவர்கள் எப்பொழுதும் நம்மிடமே இருப்பார்கள். சபையங்கத்தினர் ஒவ்வொருவர்மீதும் அவர்களைக் கவனிக்க வேண்டிய தனிபொறுப்பு சுமருகின்றது. நம்முடைய சொந்தப் பொறுப்பை பிறர் செய்து நிறைவேற்றுவதற்கு நாம் இடமளிக்கலாகாது. நமது ஸ்தானத்தில் கிறிஸ்துவானவர் இருந்தால் எத்தகைய அன்பும் அனுதாபமும் அளிப்பாரோ அதே விதமான அன்பை நமது எல்லைகிளலுள்ள இவர்களிடம் நாம் காட்ட வேண்டும்.இவ்வாறு நாம் நம்மைக் கட்டுப்படுத்தி, ஆண்டு கிறிஸ்துவின் ஊழியங்களில் பங்கு பெறுவதற்கு ஏற்ற ஆயத்தமடைய வேண்டும். 6T.272.CCh 243.2