Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “நான் உங்களில் அன்பு கூர்ந்துபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்”

    மனித இரட்சிப்புக்காகத் தேவன் தம்முடைய பாகத்தைச் செய்து முடித்திருக்கின்றார். இப்பொழுது சபையின் ஒத்துழைப்பைக் கேட்கின்றார். ஒரு புறத்தில் கிறிஸ்துவின் இரத்தமும், சத்திய வசனமும், பரிசுத்த ஆவியும் இருக்கின்றன. மறுபுறத்தில் அழிவிலருக்கும் ஆத்துமாக்கள் இருக்கின்றனர். பரலோகம் ஏற்படுத்தியிருக்கிற ஆத்துமாக்கள் இருக்கின்றனர். பரலோகம் ஏற்படுத்தியிருக்கிற ஆசீர்வாதங்களை மனுஷர் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்வதில் கிறிஸ்துவின் பின்னடியார் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்த வேலையை நாம் செய்திருக்கிறோமாவென்று ஒவ்வொருவரும் நம்மை ஆராய்ந்து பார்ப்போமாக. நமது ஜிவியத்தின் உள்ளான நோக்கங்களையும் ஒவ்வொரு கிரியைகளையும் சீர்தூக்கிப் பார்ப்போமாக. மனதில் நினைவு மண்டபத்தில் இன்பமற்ற பல சித்திரங்கள் தொங்குகின்றனவல்லவா? இயேசுவின் மன்னிப்பு உனக்கு அடிக்கடி தேவைப்பட்டதல்லவா? அவருடைய கருணையையும் அன்பையும் நீ எப்பொழுதும் சார்ந்திருக்கின்றாய். என்றபோதிலும் கிறிஸ்து உனக்குச் செய்த பிரகாரமாக நீ பிறரிடம் நடந்துகொள்ளவில்லையல்லவா? விலக்கப்பட்ட வழிகளில் ஒருவன் துணிந்து செல்வதைக் கண்டும் நீ அவனுக்காக பாரமடைந்ததுண்டா? நீ அவனைப் பட்சமாக கடிந்துகொண்டாயா? நீ அவனுக்காக அழுது அவனோடும் அவனுக்கென்றும் ஜெபித்தாயா? நீ அவனை நேசித்து, அவன் இரட்சிப்படைய வாஞ்சிப்பதை உன் இரக்கமான வார்த்தைகளாலும், பட்சமான கிரியைகளாலும் காண்பித்தாயா?CCh 225.1

    குறறஞ்செய்து தங்களுடைய பலவீனமான தன்மை, தவறான பழக்கங்கள் ஆகியவற்றால் தட்டுத்தடுமாறி நிற்கிறவர்களுடன் நீ கூட்டுறவுகொள்ளும்பொழுது, நீ அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவனாயிருந்தும் அவர்களைத் தனித்துப்போகும்படி விட்டுவிட்டாயா? உலகம் அவர்கள் பக்கத்தில் நின்று உடனடியான அனுதாபம் காண்பித்து, அவர்களைச் சாத்தானுடைய வலைக்குட்படுத்த எத்தனித்தபோது, கடுமையாகச் சோதிக்கப்பட்ட இவர்களை நீ கடந்து சென்றதில்லையா? நீ காயீனைப்போல “என் சகோதரனுக்கு நான் காவளாளியோ” என்று சொல்ல ஆயத்தமாயிருக்கவில்லையா? (ஆதி4:9)CCh 226.1

    திருச்சபையின் மாபெருந் தலைவர் உன் ஜீவியத்தின் கிரியைகளை எப்படி மதிக்க வேண்டும்? தமது இரத்தக் கிரயத்தால் ஆத்துமாக்களை விலைக்குக் கொண்டவர், சரியான வழியிலிருந்து விலகி போகிறவர்களிடம் நீ காட்டும் அலட்சியமான போக்கை எவ்வாறு கவனிப்பார்? நீ அவர்களை விட்டுவிட்டது போல அவரும் உன்னை விட்டுவிடுவார் என்ற பயம் உனக்கில்லையயோ? ஒவ்வொரு நெகிழ்ச்சியையும் தேவனுடைய வீட்டின் மெய்க்காவலாளர் குறித்து வைத்திருக்கிறார் என்று நிச்சயமாக அறிந்துகொள்.CCh 226.2

    கடந்த கால நெகிழ்ச்சிகளைச் சரிப்படுத்துவதற்கான வேளை இன்னும் பிந்திப் போகவில்லை. ஆரம்பத்தில் உன்னிடத்தில் காணப்பட்ட அன்பின் ஆர்வம் மீண்டும் பொங்கித்ததும்புவதாக. நீ விரட்டியடித்த ஆத்துமாவைத் தேடி மன்னிப்புக் கேட்பதின் மூலம் நீ உண்டுபண்ணிய காயங்களைக்கட்டு. இரக்கமுள்ள அன்பின் பேரிருதயமுடையவரைக்கிட்டிச் சேர்நது தெய்வீக மன துக்கம் உன்னிருதயத்தில் பாய்நது, பிற இருதயங்களுக்கும் ஊடுருவிப் பாயட்டும். இயேசு தமது சொந்த ஜீவியத்தில் காட்டிய கிருபை, இரக்கம் ஆகியவகைளின் மாதிரியின்படி நாம் நம்முடைய உடன் மனிதரை நடத்தவும் கிறிஸ்துவில் சகோதரராயிருப்பவரை விசேஷமாக கவனிக்கவும் வேண்டும். வாழ்வின் பெரும் போராட்டத்தில் சிக்கி அதைரியமடைந்து அனேகர் மயங்கி விழுந்திருக்கின்றனர். அவர்களுக்கு பட்சமும் தைரியமுமான வார்த்தை பெலனளித்து வெற்றியடையச் செய்திருக்கும். ஒருபோதும், ஒருபோதும் குற்றறப்படுத்துகிறவனாகவும் பட்ச மற்றவனாகவும் இரக்கமற்றவனாகவும் அனலற்றவனாகவும் இராதே. நம்பிக்கை ஊட்டி, தைரியமடையச் செய்வதற்கு ஒரு வார்த்தை சொல்லத்தக்க சந்தர்ப்பம் எழுமானால் அதை நெகிழ விடாதே. நம்முடைய பட்சமிகுந்த மிருதுவான சொற்களும் பாரத்தை இலகுவாக்க கிறிஸ்துவைப் போல் நாம் செய்யும் முயற்சிகளும் எத்தகைய நற் பயனுள்ளதாயிருக்கும் என்று நாம் கூற முடியாது. சாந்தமும் கனிவும் கிருபையும் பொருந்திய ஆவியினாலன்றி மற்றெவ்விதமாகவும் குற்றம் புரிந்தோரைச் சீர்திருத்த முடியாது. 5T. 610-613.CCh 226.3