Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-50

    மாமிச உணவுகள்

    பின் சந்ததியார் என்ன ஆகாரத்தைப் புசிக்க வேண்டுமென்று தேவன் நியமித்தாரோ, அதையே நமது ஆதிப் பெற்றோருக்குக் கொடுத்தார். எந்த உயிர்ப் பிராணியையும் கொல்லுவது அவருடைய திட்டத்துக்கு மாறானது. ஏதேனில் மரணமே இருந்திருக்க வேண்டியதில்லை. மனுஷனுக்குத் தேவையான ஆகாரம் தோட்டத்திலுள்ள மரக்கனிகள், ஜலப்பிரளயம் வரை மாமிச உணவு மனிதனுக்குக் கடவுள் அனுமதிக்கவில்லை. மனிதன் புசிக்கத் தக்க யாவும் அழிந்து போயின; ஆதலால் கர்த்தர் நோவாவுக்குத் தன்னுடன் பேழைக்குள் எடுத்துச் சென்ற சுத்தமான மிருகங்களின் மாமிசத்தை தங்கள் அவசியத்தினிமித்தம் புசிக்க அனுமதித்தார். ஆனால் மாமிச உணவு மனுஷனுடைய ஆரோக்கியத்துக்கு ஏற்ற சிரேஷ்ட ஆகாரம் அல்ல.CCh 589.1

    ஜலப்பிரளயத்திற்குப் பின், ஜனங்கள் பெரும்பாலும் மாமிச உணவைப் புசித்தார்கள். மனிதன் தன் இருதய ஆசையைப் பின்பற்றி, சிருஷ்டிகளுக்கு விரோதமாக மேட்டிமை கொண்டு, தன்னைத்தான் உயர்த்தி, தன் வழிகளைக் கெடுத்துக்கொண்டான் என்று தேவன் கண்டார். தங்கள் பாவ ஜீவன்களைக் குறைத்துக்கொள்ளும்படி நெடுங்காலம் ஜீவித்த சந்ததிக்கு மாமிச உணவைப் புசிக்கக் கொடுத்தார். ஜலப்பிரளயத்துக்குப் பின் மனுக்குலம் வயதிலும், வளர்த்தியிலும் அதிக விரைவாகக் குறைய ஆரம்பித்தது. CD 373.CCh 589.2

    ஏதேனில் கடவுள் மனுஷனுடைய ஆகாரத்தைத் தெரிந்தெடுப்பதில் எது மேலான உணவு எனக் காண்பித்தார்; இஸ்ரவேலருக்காக ஆகாரத்தைத் தெரிந்தெடுத்த விஷயத்திலும் அதே பாடத்தை அவர் கற்பித்தார். அவர்கள் மூலமாய் அவர் உலகத்துக்குப் போதித்து, அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். அவர் அவர்களுக்கு மாமிச உணவையல்ல, இந்த நோக்கத்துகாக சரிப்படுத்தப்பட்ட வானத்தின் அப்பமாகிய மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார். அவர்கள் எகிப்தின் மாமிச உணவுக்காக முறுமுறுத்து அதிருப்தியாயிருந்ததால், சொற்ப காலத்துக்கு மாமிச உணவைக் கொடுத்தார். அதன் உபயோகம் வியாதியையும் ஆயிரக் கணக்கான பேருக்கு மரணத்தையும் கொண்டு வந்தது. என்றாலும், மாமிசமில்லாத உணவை அவர்கள் ஒரு போதும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளவில்லை. பகிரங்கமாகவோ இரகசியமாகவோ இதுவே அதிருப்திக்கும் முறுமுறுப்புக்கும் காரணமாக இருந்து வந்தது. இந்த உணவை அவர் அவர்களுக்கு நிரந்தரமாகக் கொடுக்கவில்லை.CCh 589.3

    அவர்கள் கானானில் குடியேறினபோது, இஸ்ரவேலர் மாமிச உணவைப் புசிக்க அனுமதிக்கப்பட்டனர். மாமிச உணவினால் உண்டாகும் தீமையான பலனைக்குறைக்குமாறு, எவைகளைப் புசிக்கலாமென்று சட்டதிட்டங்களைக் கொடுத்தார். பன்றியின் மாமிசம் விலக்கப்பட்டது போல், அசுத்தமான மற்ற மிருகங்கள், பறவைகள், மச்சங்களின் மாமிசமும் விலக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட மாமிசத்தை இரத்தத்தோடும் கொழுப்போடும் சாப்பிடக்கூடாதென்று கண்டிப்பாய் கட்டளையிடப்பட்டது.CCh 590.1

    நல்ல சுகமுள்ள மிருகங்களின் மாமிசமே உணவாக உபயோகிக்கப்பட வேண்டும். தானயச்செத்ததையும், பீறுண்டதையும், அல்லது இரத்தம் வடியவிடப்படாத எந்த மிருகத்தின் மாமிசத்தையும் புசிக்கக்கூடாது.CCh 590.2

    தெய்வ திட்டத்தின்படி அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஆகாரத்தை விட்டு இஸ்ரவேலர் விலகிப் போனபடியால், அவர்கள் மிகுந்த நஷ்டத்தையடைந்தனர். மாமிச ஆகாரத்தை விரும்பி, அதன் பலன்களை அறுத்தார்கள். அவர்கள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றி, அவருடைய குண இலட்சியத்தை அடையவில்லை. அப் பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். சங். 10615. அவர்கள் ஆவிக்குரியதைவிட உலகத்திலுள்ளவைகளை மதித்து, அவர்களுக்காக வைத்திருந்த புனித உன்னத நிலைமையை அடையாமற் போனார்கள்.CCh 590.3

    மாமிசம் புசிப்பவர் காய் கறிகளையும், தானிய தவசங்களையும் இரண்டாம் கைப்பட்ட முறையில் உண்ணுகின்றனர். ஏனென்றால் மிருகம் தன் ஆகாரத்தைப் புல் பூண்டு வகைகளிலிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்கிறது. நாமோ மிருக மாமிசத்தைப் புசிப்பதன் மூலம் அச்சத்தைப் பெற்றுக்கொள்கிறோம். கடவுள் நமக்காக உண்டாக்கி வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக உட்கொண்டால் எவ்வளவு நலமாயிருக்கும்.CCh 591.1