Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரண்டு எஜமானருக்கு ஊழியம் செய்தல் கூடாது

    தேவன், உலகம் என்ற இரண்டு எஜமானரை நம்முன் நிறுத்தி, இருவரையும் சேவிப்பது கூடாத காரியமெனக் கிறிஸ்து தெளிவாகக் காட்டுகிறார். இவ்வுலகத்தின் பேரில் நமக்கு அன்பும் ஆவலும் மேலோங்கியிருந்தால், எல்லாவற்றிற்கும் மேலானவைகளைக் குறித்து நாம் பெரிதாக எண்ணமாட்டோம். உலக நேசம் தேவ அன்பையும், உயரிய நாட்டங்களிலிருந்தும் நம்மைப் பிரித்து அவைகளை உலக காரியங்களுக்கும் கீழானதாக்கிவிடும். இவ்விதமாக நம் உள்ளத்தில் தேவனுக்கும் அன்புக்கும் பக்திக்கும் உரிய மேலிடம் கொடுக்காது, உலக காரியங்களுக்குக் கொடுக்கப்படும்.CCh 678.2

    வனாந்திரத்தில் கிறிஸ்துவைச் சோதித்த பின்பு சாத்தான் சர்வ ஜாக்கிரதையுடன் மனிதர்களிடம் நடந்து கொள்ளுகிறான். ஏனெனில் வனாந்திரத்தில் அவன் தோற்றுப்போனான், அவன் தோற்கடிக்கப்பட்ட சத்துரு. அவன் மனிதனிடம் நேரடியாக வந்து, தன்னை வெளிப்படையாக வணங்கும்படி கேட்பதில்லை. உலகத்தின் காரியங்களிலே தங்கள் ஆசை இச்சைகளை வைக்கும்படி மாத்திரம் கேட்கிறான். மனதையும், மன விருப்பங்களையும் பெறுவதில் வெற்றி பெற்றால் பரலோக வாஞ்சைகள் மறைந்துவிடும். அவனுடைய தந்திரமான சோதனைகளுக்குள் விழுதல், உலக நேசம், உத்தியோகம், மதிப்பிற்கான மேலிடம் இவைகள் பேரில் ஆசை, பண ஆசை, பூலோக பொக்கிஷங்களில் மனவிருப்பத்தை செலுத்தல், இவைகளை அவன் மனிதனிடமிருந்து எதிர் பார்க்கிறான். இவைகளை அவன் அடைந்தால் அவன் கிறிஸ்துவை செய்யும்படி வனாந்திரத்தில் தூண்டி ஏவிய யாவையும் பெறுகிறான். 3T 478, 480.CCh 678.3