Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பண விஷயத்தில் புருஷர் மனைவிகளுக்கு ஆலோசனைகள்

    கணக்கு எழுதி வைக்க யாவரும் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் இதை அவசியமில்லை யென அலட்சியஞ் செய்கிறார்கள், ஆனால் இது தவறு. எல்லாச் செலவுகளும் திட்டமாக எழுதப்பட வேண்டும். A. H. 374.CCh 435.5

    நீங்கள் சிக்கனமாயிருக்க வேண்டிய அளவு சிக்கனமாக இருந்திருந்தால், தேவ ஊழியத்திற்கு உதவவும், ஆபத்தில் உதவவும் போதிய பொருள் உங்களிடம் இருந்திருக்கும். வாரா வாரம் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தியந்த தேவை அல்லது கொடுத்தவருக்கே காணிக்கையாக கொடுக்க நேர்ந்தாலன்றி அதைத் தொடக்கூடாது.CCh 436.1

    வியாதியில் செலவழிக்க அல்லது சம்ரஷணைக்காக கொண்டு வரும் சம்பாத்தியம் பாதிக்கப்படும் போது உதவும் படிக்காக ஞானமாய், சிக்கனத்தோடு மீதி பிடிக்கும் முறையில் செலவிட வேண்டும். சிக்கலான ஓரிடத்தில் தடுமாறி நிற்கும் நிலை நேர்ந்தால் அதில் உங்கள் குடும்பம் காலந் தள்ளதக்கதாக கொஞ்சம் இருக்க வேண்டும். A. H. 395, 396.CCh 436.2

    பரஸ்பர உதவ வேண்டும், உன் மனைவிக்குக் கொடாமல் பையை சிக்கென இறுகப் பிடித்திருப்பது பெரும் கண்ணியமென யெண்ணாதே.CCh 436.3

    உன் மனைவி இஷ்டமாக செலவழிக்கும்படி அவள் கையில் கொஞ்சம் பணம் வாரந்தோறும் கொடு. மனைவி இருக்க வேண்டிய நிலையை நீ உணராமல், அவள் தன் இஷ்டப்படி யூகமாகச் செலவழிக்கும் வாய்ப்பை அவளுக்குக் கொடுப்பதில்லை. உன் மனைவி மிகத் திறமை வாய்ந்த சம நிலையான மனமுடையவள்.CCh 436.4

    நீ பெறுவதில் ஒரு பகுதியை அவளிடம் கொடு. அது அவளுக்குச் சொந்தமாகவும், இஷ்டப்படி செலவிடவும் உதவட்டும். அவள் சம்பாத்தியத்தை அவளுக்குட் தெரிந்த சிறந்த முறையில் உபயோகிக இடங்கொடுக்கப்பட வேண்டும். தன் செலவை பற்றி குற்றஞ் சாட்டப்படாதபடியிருக்க தனக்கென்று ஒரு தொகையிருந்தால் அவள் மனப்பாரம் குறையும். A. H. 378.CCh 436.5