Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-20

    சபைக்குச் சாட்சியாகமங்கள்

    உலக முடிவு நெருங்கி, உலகத்திற்கு கடைசி எச்சரிப்பைக் கொடுக்கும் வேலை வளர்ந்து வரும்போது, நிகழ்கால சத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்கள், மூன்றாம் தூதனின் தூது சம்பந்தமான வேலை ஆரம்பமானது முதல், அதோடு தெய்வாதீனமாக இணைக்கப்பட்டிருக்கிற சாட்சியாகமத்தின் செல்வாக்கையும் தன்மையையும் பற்றிய தெளிவான அறிவு பெற்றிருக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியமானது.CCh 273.1

    பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாகவும், அப்போஸ்தலர்கள் மூலமாகவும் மனிதர்களுக்குத் தேவன் திருவுளம் பற்றி யிருக்கின்றார். இக்காலத்திலே அவர் தமது ஆவியானவர் அருளும் ஆலோசனைகளின் மூலமாய் அவர்களிடம் பேசுகின்றார். ஒரு காலத்திலும் இல்லாத பிரகாரமாக அவர்கள் செல்ல வேண்டிய பாதையையும் தமது சித்தத்தையும் மிகுந்த அக்கரையுடனே அவர் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.CCh 273.2

    தவறு செய்கின்ற ஏழாம் நாள் அட்வெந்திஸ்தருக்கு இவ்வாலோசனைகள் அளிக்கப்படுவதற்கு காரணம், அவர்கள் பேர்க்கிறிஸ்தவ சபைகளின் அங்கமாக விளங்கும் பிற கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் குற்றமுடையவர்கள் என்பதினாலும் அல்ல .......அவர்கள் பெரிய வெளிச்சத்தையுடையவர்களாகவும், கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட விசேஷித்த ஜனமாகவும் தங்கள் இருதயங்களில் தேவப் பிரமாணங்கள் எழுதப் பெற்றவர்களாகவும் விளங்குவதே அதற்குக் காரணம்.CCh 273.3

    அனேக தனிப்பட்ட நபர்களுக்கு நான் எழுதி அளித்தத் தூதுகள் அவர்களுடைய அவசர வேண்டு கோளுக்கிணங்கி அனுப்பப்பெற்றவை ஆகும். வேலை வளர்ந்த போது, இப்பணி என் ஊழியத்தில் முக்கியமானது சிரமத்தைக் கொடுப்பதாகவும் இருந்தது.CCh 273.4

    “இருபது வருடங்களுக்கு முன்பாக (1871) எனக்கு அளிக்கப் பட்ட ஒரு காட்சியில், பேசுவதிலும், எழுதுவதிலும் சில பொது விதிகளை ஏற்படுத்தவும், அதே சமயத்தில் யாவரும் கண்டனை, எச்சரிப்பு, ஆலோசனைப் பெறத்தக்கதாக சிலருடைய அபாயங்களையும், குறைகளையும், பாவங்களையும் குறிப்பிடவும் வேண்டுமென்று கட்டளை பெற்றேன். பிறர் திருத்தப்படும்போது அதே தவறுதல்களை தாங்களும் செய்ததில்லையோ என்றும் அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட எச்சரிப்புகள் தங்களுக்கும் பொருந்தாதோ என்றும், யாவரும் தங்கள் இருதயங்களை உய்த்து ஆராய வேண்டு மென்பதை நான் கண்டேன். டூந்தப் பிரகாரமாக, அவர்கள் அவ்வாலோசனைகளும் எச்சரிப்புகளும் தங்களுக்கே நேரடியாக எழுதப்பட்டவை யென்று மதித்து அவற்றை பின் பற்ற வேண்டும்.CCh 274.1

    கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகக் கூறும் அனைவரின் விசுவாசத்தையும் பரிசோதிக்கத் தேவன் திட்டம் செய்திருக்கின்றார். தங்கள் கடமை இன்னதென்று அறிய ஊக்கமுடன் விரும்புவதாகத் தேவனிடம் ஜெபிக்கின்ற ஒவ்வோருவரின் உண்மையையும் அவர் பரிசோதிப்பார். அவர் கடமையைத் தெளிவு படுத்துவார். தங்கள் இருதயங்களில் இருப்பதை அவர்கள் விருத்தி செய்வதற்குப் போர்ந்த சந்தர்ப்பமும் அளிப்பார்.CCh 274.2

    அவருடைய பிரமாண்ங்களைக் கைக் கொள்ளுவதாகக் கூறுகின்ற ஒவ்வொருவரையும் அவர் கடிந்து கொண்டு சீர்படச் செய்கின்றார். சகல பாவத்தையும், பொல்லாங்கையும் அவர்களிடமிருந்து அகற்றி, தெய்வ பயத்தோடே பரிசுத்த நடக்கையை அவர்கள் பூரணப்படுத்தத்தக்கதாக அவர்களுடைய பாவங்களை அவர் சுட்டிகாட்டி அவர்களுடைய அக்கிரமங்களை வெளியரங்கமாக்குகின்றார். அவர்கள் பரிசுத்தமடைந்து, சீர்பொருந்தி, உயர்வடைந்து, முடி வாகத் தமது சிங்காசனத்தண்டைக்கு உயர்த்தப் படத்தக்கதாக, கடவுள் அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டனஞ் செய்து, திருந்தச் செய்கிறார். 5T. 654-662.CCh 274.3