Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒற்றுழைப்பு

    புதிய இடங்களில் வேலை ஸ்தாபிக்கப்படும்பொழுது, வேலையின் நுட்பங்களை அறியாதவர்களைப் பொறுப்பாளிகளாக நியமிக்க அடிக்கடி அவசியம் ஏற்படுகிறது. இவர்கள் பல பிரதிகூலங்களின் மத்தியில் உழைக்கிறார்கள்; இவர்களும், இவர்களுடைய உடன் ஊழியரும் சுயநலமின்றி, ஊக்கத் தோடு கர்த்தருடைய ஸ்தாபனத்தில் உழைத்தாலன்றி, வேலையின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்.CCh 168.3

    அனேகர் தாங்கள் செய்யும் வேலை தங்களுக்கே உரியது, பிறர் தங்களுக்கு யாதொரு ஆலோசனையும் கொடுக்கக் கூடாதென எண்ணுகிறார்கள். இவர்களே வேலை செய்வதற்கு நல்ல வழி முறைகள் தெரியாதவர்களாயிருக்கலாம்; அப்படியிருந்து, ஒருவன் அவர்களுக்கு ஆலோசனை சொல்லத்துணிந்தால், அவர்கள் அதிகமாய்த் தங்கள் சொந்தப் போக்கில் நடக்கத் தீர்மானிக்கிறார்கள். இது நிற்க, சில ஊழியர்கள் தங்கள் உடன் ஊழியருக்கு உதவவோ அல்லது ஆலோசனை கொடுக்கவோ முன் வருவதில்லை. அனுபவ மற்ற மற்றவர்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்த விரும்புவதுமில்லை; ஏனெனில் அவர்கள் அகந்தை அவர்களை ஆலோசனை கேட்கவிடுவதில்லை.CCh 169.1

    இத்துன்பத்தின் அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது சிரமமல்ல; ஊழியர்கள் தனித்த நூல் பிரிகள் போலிருக்கிறார்கள்; ஆனால் முன்மாதிரியை பூர்த்தி செய்ய தாங்களும் சேர்ந்து உதவும் நூல்பிரிகளாக இருக்க வேண்டும்.CCh 169.2

    இம்மாதிரியான காரியங்கள் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தும். நாம் ஒருவரை யொருவர் அறிந்துகொள்ள வேண்டுமென தேவன் விரும்புகிறார். பரிசுத்தமாக்கப்படாத சுய போக்கு, தேவன் நம்மோடு உழைக்கக் கூடாத நிலையில் நம்மை நிறுத்துகிறது. இப்படிப்பட்டக் காரியங்களில் சாத்தான் மகிழ்ச்சி யடைகிறான்.CCh 169.3

    கர்த்தருடைய வேலை முன்னேற்றத்திற்காகவோ, அல்லது தன் காரியங்களைச் செய்வதிலோ எதில் ஈடுபடுகிறான் என ஒவ்வொரு ஊழியனும் பரிசோதிக்கப்படுகிறான்.CCh 169.4

    தன்னை வஞ்சிக்கும் அபிப்பிராய அகந்தையே நம்பிக்கையற்றது, சொஸ்தமாக்கப் படக் கூடாததுமான பாவம். எல்லா வளர்ச்சிக்கும் இது இடற்கட்டை. குணக் குறைவுகளுள்ளவன், அதைக் கண்டுகொள்ளாமற்போகிறான். தான் சகல நிறைவு முடையவனென்றெண்ணி, தன் பிழைகளைக் காணக்கூடாதிருக்கையில், அவன் எப்படி சுத்தமாக்கப்படக்கூடும்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுக முள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. மத். 9:!2.CCh 169.5

    தான் பூரணனென ஒருவன் எண்ணும்போது அவன் எப்படி முன்னேறக்கூடும்?CCh 170.1

    முழு மனதுடைய கிறிஸ்துவனேயன்றி வேறு எவனும் பூரண புருஷனாக இருக்க முடியாது. 7T. 197-200.CCh 170.2