Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பொழுது போக்குகள் பற்றிய மனப்பான்மை

    வியாதிப்பட்ட மனக் கிளர்ச்சியுள்ளவர்களுக்கு மார்க்கம் இருப்புக் கோளாட்சி புரியும் கொடுங்கோல் மன்னன் ஆகும். அப்படிப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் சீர்கேடு பற்றிப் புலம்பி, ஏதோ தீமை என்று தாங்கள் எண்ணும் அக் காரியத்தையிட்டு பெருமூச்சு செறிவார்கள். அவர்கள் இருதயங்களில் அன்பு குடிகொண்டிருக்கவில்லை; அவர்கள் முகங்களில் சதா மூர்க்கம் தாண்டவமாடும். பாலியர் அல்லது வேறு எவரும் மாசற்ற புன்னகை செய்தால், இவர்கள் அதைரியமடைகிறார்கள். எல்லா பொழுது போக்குகளும் கேளிக்கைகளும் பாவம் என்பது, மனம் சதா கண்டிப்பாகவும், கடுமையாகவுமிருக்க வேண்டுமென்பதும் அவர்கள் மனப்பான்மை. இது ஒரு மித மிஞ்சிய போக்கு. மற்றொரு சாரார் ஆரோக்கியம் அடையும்படி மனம் சதா பல மகிழ்ச்சியூட்டும் கேளிக்கைகளையும் மாறுதல்களையும் கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்கள். இவர்கள் உள்ளக் கிளர்ச்சிகளில் சார்ந்திருக்கக்கற்று, அவையின்று அமைதியற்றிருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள் மெய்க் கிறிஸ்தவர்கள் அல்ல. இவர்கள் மற்றொரு மித மிஞ்சிய போக்குக் காரர்கள். கிறிஸ்து மார்க்கத்தின் மெய் லட்சியங்கள் அளவிடப்படமுடியா உயரம், ஆழம், நீளம், அகலமுடைய சந்தோஷத்தை யாவருக்கும் திறக்கிறது.; 1T. 514.CCh 442.4

    தேவ மகிமைக்குத் தங்கள் சரீர மானத சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கத்தோடு தங்கள் ஆவியையும் சரீரத்தையும் பலப்படுத்த மாசற்ற பொழுது போக்கான கேளிக்கைகளைக் கண்டுபிடிப்பது கிறிஸ்தவ சிலாக்கியமும் கடமையுமாகும். நமது நேரப்போக்குகள் வரட்டுச் சிரிப்புகள் காணப்படும் இடங்களாகவோ, புத்தியீனமான விதத்திலோ இருக்கக் கூடாது. நம்முடன் சகவாசஞ் செய்கிறவர்களுக்கு அது பயன் அளித்து உயர்த்தி, நம்மையும் அவர்களையும் வெகுசித்திகரமாக கிறிஸ்தவர்களாகிய நம் கடமைகளை நடத்தும்படி உதவ வேண்டும். A. H. 493.CCh 443.1

    ஓய்வு நாள் ஆசரிப்போர் மாறுதலின்றியும் ஓய்வின்றியும் கடினமான வேலை செய்கிறவர்களாக எனக்குக் காட்டப்பட் டது. சரீர உழைப்பாளிகளுக்கு ஆரோக்கிய நேரப்போக்கு அவசியம், அதை விட மனசை உபயோகிப்போருக்கு அதிக அவசியமாகும். இடையறா மிதமிஞ்சிய மன உழைப்பு, மார்க்க விஷயங்களிலேயுங் கூட, நமது இரட்சிப்புக்கும். தேவ மகிமைக்கும் அவசியமானதன்று. 1T. 514.CCh 443.2

    சரீர அப்பியாசத்திற்கு செலவிடப்படும் நேரம் வீணாவதில்லை. எல்லா அவயவங்களும், சத்துவங்களும் பயன்படுத்தப்படுவது ஒவ்வொன்றுக்கும் சிறந்த நலந் தருவதாகும். இதர அவயவங்கள் அலுவலின்றியிருக்க, மூளை மட்டும் இடையறாமல் வேலை செய்தால், சரீர மானத பலம் குன்றும். சரீர ஆரோக்கிய நிலைக்குப் பங்கம் நேரிட்டு, மனசும் புத்துணர்ச்சியும் வலிமையும் இழந்து, ஆரோக்கியமற்ற வெடுவெடுப்பு காணப்படுகிறது.CCh 444.1

    நித்திரைக்கும் உழைப்புக்குமான வேளை பற்றி திட்டமான ஒழுங்குகள் செய்யக் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். இளைப்பாறவு, ஆரோக்கிய பொழுது போக்குக்காகவும், சிந்தனை செய்யவும் வேளைகள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். மித வாழ்க்கையின் இலட்சியங்கள் அனேகர் எண்ணுவதைக் காட்டிலும் விசாலமானது.CCh 444.2

    கற்பவர்களுக்கு ஆரோக்கிய நேரப்போக்கு வேண்டும். ஒரே சிந்தனையில் மனம் கட்டுப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் மெல்லிய மன இயந்திரம் பழுதுபடும், மனமும், சரீரமும் அப்பியாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். ------ A. H. 494, 495.CCh 444.3