Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சந்தேகத்தை உண்டு பண்ணுவது சாத்தானின் நோக்கம்

    அனேகருடைய காரியங்களைக் குறித்து கூறப்பட்ட சாட்சியின் வசனங்கள் முற்றுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாவமும் அதன் இச்சைகளும் தகர்க்கப்பட்டு, தேவனால் அருளப்பட்ட வெளிச்சத்திற்கு இசைவாக சீர்திருத்தம் உடனே ஆரம்பமாயிற்று. வேறு பலருடைய காரியங்களில் பாவ இச்சைகள் பேணப்பட்டு, சாட்சியின் வசனங்கள் தள்ளி வைக்கப்பட்டு அவற்றின்படியே நடவாமலிருந்ததற்கு பொய்க் காரணங்கள் கூறப்பட்டன. உண்மைக் காரணம் கூறுவதில்லை. சன்மார்க்கத்தில் தைரியமும் தேவஆவியால் தீய பழக்கங்களைத் துறப்பதற்கு மனதிற்கவசியமான பலமும் கட்டுப் பாடும் இல்லாமையே காரணமாகும்.CCh 278.2

    குறிப்பான சாட்சியின் வசனங்களை தெய்வம் அனுப்புகிற பொழுது, பிசாசானவன் அவற்றைக் குறித்து சந்தேகங்களை எழுப்பி, ஆட்சேயங்களைக் கிளப்பக் கூடியவனாயிருக்கின்றான். அனேகர் அவிசுவாசத்துடன் கேள்விகளை எழுப்புவதும், உண்மைகளை மறைத்து போக்குச் சொல்வது திறமை யென்றும் புத்தி சாமர்த்தியமென்றும் கருதுகின்றனர். சந்தேகிக்க விரும்புகிறவர்களுக்கு நிறைய இடமுண்டு. அவிசுவாசமடைவதற்குரிய காரணங்கள் அனைத்தையும் நீக்க தேவன் எண்ணுவதில்லை. அவர் அளிக்கும் அத்தாட்சிகளை தாழ்மையான மனதுடனும், கற்கவிரும்பும் ஆவியோடும் சீர்தூக்கிப்பார்த்து அத்தாட்சிகளின் துணைகொண்டு யாவற்றையும் நிறுத்தி தீர்மானிக்க வேண்டும். நேர்மையான திறந்த மனதிற்குப் போதுமான அத்தாட்சிகளை கடவுள் அளிக்கின்றார். ஆயினும், தன்னுடைய குறுகிய மனதிற்கு சிலகாரியங்கள் விளங்காததை முன்னிட்டு அளிக்கப்பட்ட அத்தாட்சிகளை விட்டுவிடுகிறவன், ஆவியை அவித்துப் போடும் அனலற்ற அவநம்பிக்கையிலும், சந்தேகக் கேள்விகளிலும் சிக்கி தன், விசுவாசத்தைச் சேதப்படுத்திக் கொள்ளுகிறான்.CCh 279.1

    கடவுளுடைய மக்கள் சாட்சியாகமங்களில் வைத்துள்ள விசுவாசத்தைப் பலவீனப்படுத்துவதே சாத்தானின் திட்டம். எவ்விதம் தாக்கலாமென சாத்தான் அறிந்திருக் கிறான். வேலையைத் தலைமை தாங்கி நடத்துகிறவர்களுக்கு எதிராகப் பொறாமையையும் அதிருப்தியையும் மனதுகளில் கிளறி வேலை செய்கிறான். அடுத்தப்படியாக வரங்கலைப் பற்றிய சந்தேகமெழுப்புகின்றான். இவ்வாறு தரிசனங்கள் மூலமாய் அளிக்கப்பட்ட ஆலோசனை தள்ளப்பட்டு பயனளிக்காமற் போகிறது. பின்னும், நமது விசுவாசத்திற்கு தூண்களாக விளங்குகின்ற உபதேசங்களையும், வேதவாக்கியங்களையும் சந்தேகிக்குமாறு செய்து, மெதுவாக அழிவுக்கு நேராக நடத்தி விடுகின்றான். சாட்சியாகமங்களை ஒருமுறை விசுவாசித்தவர் சந்தேகித்துப் பின்வாங்கிவிடுகிற பொழுது, இவ்வாறு வஞ்சகத்திற்குட்பட்டு, அத்துடன் நிற்கமாட்டார்கள் என்று சாத்தான் அறிந்து அவர்கள் பகிரங்கமாக கலகம்பண்ணி முடிவில் தேறக்கூட்டமல் அழிவடையுமாறு தன் முயற்சிகளை இரட்டிப்பான். தேவனுடைய வேலையைப் பற்றி அவிசுவாசத்திற்கும், சந்தேகத்திற்கும் இடமளித்து அவநம்பிக்கைகளையும், கொடிய பொறாமையையும் பேணிவைப்பதால் அவர்கள் முழுமையாக வஞ்சகத்திற்குட்படுவர். அவர்களுடைய தவறுகளைக் கண்டித்து, பாவங்களைக் கடிந்து பேசுகிறவர்களுக்கு விரோதமாக மிகுந்த கசப்புணர்ச்சி கொண்டு அவர்களை விரோதிப்பார்கள்.CCh 279.2

    சாட்சியாகமங்களைக் குறித்து சந்தேகங்களையுடையவரும் பகிரங்கமாக அவற்றை தள்ளி விடுகிறவர்களுமே அபாய ஸ்தலத்தில் இருக்கின்றனர் என்று கூறமுடியாது. ஒளியை அவமதிப்பது அதைத் தள்ளி விடுவதேயாகும்.CCh 280.1

    சாட்சியாகமங்களில் உங்களுக்கு நம்புக்கையில்லாதே போகும் பொழுது, வேதாகம் சத்தியங்களை விட்டு நீங்கள் விலகுவீர்கள். பலர் கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவார்களென்று நான் அச்சமடைந்துள்ளேன். உங்களுடைய ஆத்துமாக்களுக்காக நான் முகுந்த துயர் அடைகின்றேன் எனவே, உங்களை எச்சரிக்கின்றேன். எத்தனை பேர் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பீர்கள்? 5T. 672-680.CCh 280.2