Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கீழ்ப்படிவத்தின் மூலம் பலம்

    தூது முடிவடையும் இந் நாட்களில், சத்தியத்தை அறிந்தவர்கள் துரிதமாய்ச் செய்யப்பட வேண்டிய வேலைக்கு ஆயத்தப்படவும், அவர்களுடைய ஜீவியங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு சுத்திகரிக்கப்படவும், அவர்களுடைய எல்லாக் கிரியைகளும் அவர்களுடைய விசுவாசத்தோடு ஒத்திருக்கவும், ஒரு பக்தி வினயமான பொறுப்பு அவர்கள் மேல் சார்ந்திருக்கிறது. போஜனப்பிரிய ஆசையில் செலவிட அவர்களுக்குப் பலமும் சமயமும் கிடையாது. ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந் திரும்பிக் குணப்படுங்கள் (அப் 3, 19, 20) என்ற வார்த்தைகள் இப்பொழுது நம்மை ஊக்குவிக்க வேண்டும். நம்மில் அனேகர் ஆவிக்குரியவற்றில் குறைவுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முழுவதுமாக மனத்திரும்பாத பட்சத்தில், நிச்சயமாகவே கெட்டுப்போவார்கள். இரட்சிப்பை இழந்துவிடச் செய்யும் இக் காரியங்களைக் குறித்து நி அசட்டையாயிருக்கக்கூடுமா?CCh 599.3

    தம்முடைய பிள்ளைகள் எப்பொழுதும் தேர்ச்சியடைய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆத்தும சுத்திக்கும் மன அபிவிருத்திக்கும் போஜனப் பிரியத்தைப் பேணுவது பெரிய இடையூறு என நாம் அறிய வேண்டும். ஆரோக்கிய சீர்த்திருத்தத்தைப் பற்றிய நமது எல்லாப் போதனையோடுங்கூட, நம்மில் அனேகர் தகாத விதமாய்ப் புசிக்கின்றனர்.CCh 600.1

    சரீரமும் மனமும் தளர்ச்சியடைவதற்கும், பவவீனப்படுவதற்கும் அகால மரணத்துக்கும், பெரும்பாலும் அடிப்படையான பெரிய காரணம் போஜனப் பிரியமே. ஆவியில் சுத்தமாயிருக்க நாடுபவர் போஜனப் பிரியத்தை அடக்க கிறிஸ்துவுக்குள் சக்தி உண்டென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவாராக. CCh 600.2

    மாமிச உணவுகளுக்கான ஆசையைப் பேணுவதினால் நாம் பிரயோஜனம் அடையக் கூடுமானால், நான் இந்த வேண்டுகோளை உங்களுக்கு விடுக்க மாட்டேன். ஆனால், நாம் பிரயோஜனமுடைய்ட மாட்டோமென்ரு நான் அறிவேன். மாமிச உணவு சரீர நலனுக்கு கேடுள்ளது; அவைகளை உபயோகிக்காமல் இருக்கப் படிக்க வேண்டும். மரக்கறி ஆகாரம் கிடைக்கக்கூடிய இடத்திலிருந்து, தங்கள் இஷ்டப்படி புசித்துக் குடித்து, தங்கள் சொந்த விருப்பங்களையே பின்பற்றத் தெரிந்துகொள்ளுகிறவர்கள், கர்த்தர் அருளிய மற்ற நிகழ்கால சத்திய உபதேசங்களைப் பற்றி படிப்படியாக கவலைத் தாழ்ச்சி அடைந்து, சத்தியம் என்ன என்பதைப் பற்றிய தங்கள் அறிவை இழந்து விடுவார்கள்; நிச்சயமாகத் தாங்கள் விதைத்ததையே அறுபார்கள்.CCh 600.3

    நமது பள்ளிகளுலுள்ள மாணவர்களுக்கு மாமிச உணவு களையாவது, ஆரோக்கியத்துக்கு அனுகூலமல்ல என்று அறிந்த பொருட்களால் ஆயத்தம் செய்யப்பட்ட ஆகாரத்தையாவது பரிமாறக்கூடாதென்று நான் போதிக்கப்பட்டேன். கிளர்ச்சியூட்டும் பொருட்களை விரும்ப ஏவும் ஒன்றையும் சாப்பாட்டு மேசைகளின் மேல் வைக்கக்கூடாது. வாலிபருக்கும், வயோதிகருக்கும், நடுப்பிராயமுள்ளவர்களுக்கும் நான் வேண்டுதல் செய்கிறேன்; உங்களுக்குத் தீமையை விளைவிக்கும் போஜனப்பிரிய பதார்த்தங்களை வெறுங்கள்; தியாகத்தினால் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.CCh 601.1

    மாமிச ஆகாரங்களில்லாமல் காலங்கழிக்க முடியாதென்று எண்ணுகிறவர்கள் அனேகர் உண்டு. ஆனால், அப்படிப்பட்டவர்கள் தங்களையே கர்த்தருடைய பட்சத்தில் வைத்து, அவர் காட்டும் வழியில் நடக்க உறுதியாய் தீர்மானித்தால், அவர்கள் தானியேலைப் போலும், அவனுடைய தோழரைப் போலும் ஞானத்தையும் பலத்தையும் பெற்றுக் கொள்வார்கள். கர்த்தர் தங்களுக்கு நல்ல நிதானத்தைக் கொடுப்பார் என்று அவர்கள் கண்டுகொள்வார்கள். தற்தியாக செய்கைகளினால் தேவனுடைய வேலைக்காக எவ்வளவு சேமிக்கப்படக் கூடும் என்று பார்க்கமுடியுமானால், அனேகர் பிரமிப்படைவார்கள். தியாகமில்லாமல் கொடுக்கப்பட்ட பெரிய ஈவுகள் செய்து முடிப்பதைவிட, தியாகக் கிரியைகளினால் சேமிக்கப்பட்ட சிறு தொகைகள் தேவனுடைய ஊழியத்தைக் கட்டுவதில் பெரிய காரியத்தைச் செய்யக்கூடும்.CCh 601.2