Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நமது ஸ்தாபனங்களுக்கு நாம் அளிக்க வேண்டிய தார்மிக ஆதரவு

    ஆசிரியருடனே பிதாக்களும் அன்னைமாரும் ஒத்துழைத்து தங்கள் பிள்ளைகள் மனந்திரும்புமாறு வாஞ்சையுடனே உழைக்க வேண்டும். ஆவிக்கடுத்த யாவும் புதுமைப் பொலிவுடனும் ஆன்ம ஆரோக்கியத்தை அபிவிருத்தி செய்வதாகவும் விளங்குவதுடனே கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு பகுதி நேரத்தைப் பிள்ளைகளுடனே சேர்ந்து கற்கிறதற்கு செலவிட வேண்டும். இவ் வாறு கல்விப் பயிற்சிக்கென்று செலவிடப்படுகின்ற ஒரு மணி நேரம் பிரயோஜனமாகவும் இன்பமாகவும் பயன்படும். இவ்வாறு தங்களுடைய பிள்ளைகளுடைய இரட்சிப்பைத் தேடும் பொழுது பெற்றோருடைய நம்பிக்கை அதிகரிக்கின்றது. 6T 199.CCh 539.2

    மாணவர்கள் சிலர் முறு முறுப்புடனும் குற்றம் சாட்டுதலுடனும் வீடு திரும்புகின்றனர். அவர்களுடைய பெற்றோரும் சபை அங்கத்தினரும் அவர்களுடைய மிகைப்படுத்தப்பட்ட, ஒருதலைப் பட்சமான வாக்கு மூலங்களைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கின்றனர். நடந்ததெல்லாவற்றிற்கும் இருதலைப் பட்சமான வாக்கு மூலங்கள் உண்டென்று அவர்கள் ஆலோசிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் கலக்கமான இவ்வறிக்கைகள் அவர்களுக்கும் கல்லூரிக்கு மிடையே ஒரு வேலியை உண்டாக்கி விடத்தக்கதாக அவற்றை அனுமதிக்கின்றனர். அப்புறமாக கல்லூரி நடத்தப்படுகின்ற விதத்தைப் பற்றிய பயங்களையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றனர். அத்தகைய செல்வாக்கு பெருந்தீங்கு விளைவிக்கின்றது. அதிருப்தி நிறைந்த வாக்கு மூலங்கள் தொற்று நோய் போல் பரவி, மனதிலே பதிந்த எண்ணங்களை அழிப்பது கடினமாகிவிடும். திரும்பத்திரும்ப இவ்வறிக்கையும் குறித்துப் பேசுகையில் அறிக்கை விரிவடைந்து, மலைபோல் காணப்படுகின்றது, தீர விசாரித்துப் பார்த்தால், உபாத்திமார்களிடமும், பேராசிரியர்களிடமும் தவறில்லை என்ற உண்மை விளங்கும். பள்ளிக்கூட விதிகளை அமல் நடத்துவதிலே அவர்கள் தங்கள் கடமைகளையே செய்திருப்பார்கள். அவ்வாறு பள்ளிக்கூட விதிகளை அமல் நடத்தாவிட்டால், அங்கே சன் மார்க்ககேடு அதிகமாகி விடும்.CCh 540.1

    நூற்றுக் கணக்கான மாணவர்கள் அடங்கிய ஒவ்வொரு வகுப்பையும் அதே எண்ணிக்கையுள்ள விதவிதமான மனதுகளையும் சமாளித்து, நல்லொழுக்கப் பயிற்சி அளிப்பது எவ்வளவு கஷ்டமானது என்று பெற்றோர் உணர வேண்டுமானால், அவர்கள் தங்களை உபாத்திமார்களின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். அப்பொழுது காரியங்கள் அவர்களுடைய பார்வைக்கு வித்தியாசமாகத் தோன்றும், வீட்ட்ல் ஒழுக்கப் பயிற்சி அடையாத பிள்ளைகள் சிலர் பள்ளியில் இருப்பார்கள் என்பதையும் அவர்கள் யோசிக்க வேண்டும். மிகுந்த பரிதாபமான முறையிலே உண்மையற்ற பெற்றோர்களால் அசட்டை பண்ணப்பட்ட பிள்ளைகளுக்காக ஏதாவது செய்யப்பட்டாலன்றி, அவர்கள் ஒரு போதும் இயேசுவானவரால் அங்கீகரிக்கப்படமாட்டார்கள், ஆண்டு நடத்தும் ஏதே ஒரு அதிகாரம் அவர்களை நெருக்கினாலன்றி, இவ்வுலகில் பிரயோஜனமான வாழ்வை நடத்துவதற்கும் வரப்போகும் எதிர்கால வாழ்வில் யாதொரு பங்குமில்லாமலிருப்பார்கள். 4T 428, 429.CCh 540.2

    அனேக பிதாக்களும் அன்னையரும் உத்தம ஆசிரியரின் முயற்சிகளுக்கு இணங்காதே போகின்றனர். கிரகிப்பதிலும், நிதானிப்பதிலும் குறைவுள்ள வாலிபரும் பிள்ளைகளும் உபாத்திமார்களுடைய திட்டங்களையும் வழிமுறைகளையும் எப்பொழுதும் அறிந்து கொள்ளவியலாதிருக்கலாம் என்றா போதிலும், பள்ளிக்கூடத்தில் சொல்லப்பட்டதையும் செய்யப்பட்டதையும் குறித்து இவர்கள் வீட்டிற்கு அறிக்க கொண்டு வரும்பொழுது, தங்கள் வீடுகளிலிருந்து பெற்றோர் இவற்றை விவாதித்து ஆசிரியருடைய போக்கை அளவு மீறிக் குற்றப்படுத்துகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது பிள்ளைகள் ஒரு காலும் மறக்கக்கூடாத பாடங்களை அதின் மூலம் கற்றுக் கொள்ளுகின்றனர். தாங்கள் வழக்கப்படுத்தப்பட்டிராத கட்டுப்பாட்டிற்குள் அடங்க வேண்டியதாகிர போதோ, அன்றி கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதாகிற போதோ தங்களுடைய தவறான நிதானமுள்ள பெற்றோரிடத்தில் அனுதாபத்தையும் செல்லமளிக்கப்படுவதற்கும் வேண்டுகின்றனர். இவ்வாறு அமைதியில்லாத அதிருப்தியுடைய தோர் ஆவி ஊக்கப்படுத்தப்பட்டு சன்மார்க்கக் கேடான அத்தகைய செல்வாக்கினால் பள்ளியானது பாதிக்கப்படுகின்றது. ஆசிரியரின் மீது சுமந்துள்ள பாரம் அதிக பாரமாக்கப்படுகின்றது. பெற்றோர் இவ்வாறு தவறு செய்வதால் ஏற்படும் பெரும் நஷ்டம் பிள்ளைகளுக்குரியது. சரியான பயிற்சியின் மூலம் திருத்தப்படக்கூடிய குறைபாடு வருடக் கணக்கில் திருத்தாமல் விடப்பட்டு பலமடைந்து அக் குறைபாடுகளை உடையோரின் உபயோகத்தைக் கெடுத்து அழித்துப் போடுகின்றது. FE 64, 65.CCh 541.1