Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்தவர் பரம காரியங்களை பற்றிச் சிந்திக்கவும் சம்பாஷிக்கவும் ஞ்சையுடையவர்களாயிருப்பர்

    பரலோகத்திலே தெய்வம் எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கின்றார். அங்கே பரிசுத்தமானது யாவற்றையும் ஆண்டுகொள்ளுகின்றது. கடவுளுடனே பூரண இசைவுடனிருப்பதை கெடுக்கக் கூடிய எதுவும் அங்கே இல்லை. நாம் அதற்கு நேராகப் பிரயாணமாகப் போகிறவர்களானால், பரத்தின் ஆவி இவ்வுலகிலும் நமது இருதயங்களிலே ஆளுகை செய் யும். ஆயினும் இப்பொழுது பரம காரியங்களிலே நாம் பிரியங்கொள்ளாதே போனால், தெய்வத்தைப் பற்றிய அறிவை அடைவதிலே நாம் சிரத்தை காண்பிக்காவிட்டால், கிறிஸ்துவின் சுபாவத்தின் தன்மையை நாம் நோக்கிப் பார்க்காவிட்டால், பரிசுத்த அலங்காரம் நம்மைக் கவர்ந்து கொள்ளாவிட்டால், அப்பொழுது பரலோகத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கை வீணானது என்று நிச்சயிக்கலாம்.CCh 730.2

    தெய்வ சித்தத்திற்குப் பூரணமாக இசைவதே ஒரு கிறிஸ்தவன் தன் முன்னே வைக்க வேண்டிய உயரிய நோக்கம். அவன் தெய்வத்தைக் குறித்தும், இயேசுவானவரைக் குறித்தும், கிறிஸ்துவானவர் தம்மிடத்தில்அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் செய்திருக்கிற புனிதமும் சந்தோஷமுமுடைய வாசஸ்தலத்தைக் குறித்தும் பேசுவதற்கு வாஞ்சையுடையவனாக இருப்பான். இந்தப் பொருட்களின் பேரில் தியானமாக இருப்பதையும், ஆத்துமா கடவுளுடைய ஆசீர்வாதமான வாக்குறுதிகளின் பேரில் தன்னை போஷித்துக் கொள்வதையுமே “இனி வரும் உலகத்தின் பலன்களை ருசி பார்த்து” இருப்பதாக அப்போஸ்தலன் கூறுகின்றார்.CCh 731.1

    பெரும் போராட்டத்தின் முடிவான போராட்டம் நமக்கு முன்பாக இருக்கிறது. சாத்தான் “சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகல வித வஞ்சகத்தோடும்” தெய்வ சுபாவத்தை வேறுபடுத்திக்காட்டி, “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக” செயல் புரிவான், யாராவது பரலோகத்திலிருந்து அதிகப்படியான வெளிச்சம் பெறுவதற்கு அவசியமானால், இந்த ஆபத்துக் காலத்தில் தம்முடைய பரிசுத்தப் பிரமாணங்களை யாரிடம் ஒப்படைத்து உலகின் முனபாகத் தமது சுபாவத்தின் தன்மைக்கு விளக்கமளிக்க யாரை அழைத்துள்ளாரோ அவர்களே அவ்வெளிச்சத்தைப் பெறுவதற்கு ஏற்றவர். அத்தகைய புனிதமான பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் தாங்கள் விசுவாசிப்பதாகக் கூறும் சத்தியங்களினால் ஆவிக்குரிய தன்மையும் உயர்வும் புத்துயிரும் அடைய வேண்டும். 5T 745,746.CCh 731.2