Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மக்களுக்குக் கற்பியுங்கள்

    ஆரோக்கிய சீர்திருத்த ஒழுங்குகளில் மக்கள் பயிற்சி பெறும்படி அதிக சிரத்தை எடுக்க வேண்டும். சமையற் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு சுகத்திற்கேற்ற ஆகாரத்தைச் சமைக்கும் கலையில் வீட்டுக்கு வீடு போதனை கொடுக்கப்பட வேண்டும்க். அதிக எளிய முறையில் எப்படிச் சமைப்பதென்று வயோதிபரும் வாலிபரும் கற்க வேண்டும். எங்கெங்கே சத்தியம் கொடுக்கப்படுகின்றதோ, அங்கே விரும்பப்படத்தக்க வகையில், எளிய முறையில் எப்படி உருசிகரமான ஆகாரம் ஆயத்தம் செய்வதென மக்கள் கற்பிக்கப்பட வேண்டும். மாமிச உணவுகளின் உபயோக மின்றி, சத்துள்ள ஆகாரம் தயார் பண்ணக் கூடுமென்று அவர்களுக்குக் காட்ட வேண்டும்.CCh 606.2

    பிணியை எப்படிக் குணமாக்குவதென அறிவதை விட சுகத்தைப் பேணுவது எப்படியென்று அறிவது நல்லது என மக்கட்குப்படித்துக் கொடுக்க வேண்டும். நமது வைத்தியர்கள், எல்லாரையும் தங்கள் இஷ்டப்படியே நடந்துகொள்வதை எச்சரித்து, சரீரமனோ சீர் கேட்டைத் தடுக்க தேவன் புசிக்க வேண்டாமென்ற விலக்கினவைகளிலிருந்து விலகியிருத்தலே ஒரே ஒரு வழி என்று காட்டத்தக்க ஞானமுள ஆசிரியர்களாயிருத்தல் வேண்டும்.CCh 606.3

    ஆரோக்கிய சீர்திருத்த வாதிகளாயிருக்கக் கற்பிக்கிறவர்கள் இதற்கு முன் தங்களுடைய ஆகாரமாயிருந்த வற்றிற்குப் பதிலாக சத்துள்ள ஆகாரம் ஆயத்தம் செய்வதில் மிகுந்த சாமர்த்தியத்தையும் அறிவையும் கையாள வேண்டும். தேவனிடத்தில் விசுவாசம், நோக்கத்தில் ஊக்கம், ஒருவருக்கொருவர் உதவி செய்ய விருப்பம் அவசியப்படுகிறது. சரியான சத்துள்ள தாதுப் பொருள் குறைவுபட்ட ஆகாரம் ஆரோக்கிய சீர்திருத்த வேலையின் பேரில் நிந்தையைக் கொண்டு வருகிறது. நாம் சாவுக்கேதுவானவர்கள், ஆதலால், நமது சரீரத்திற்கு ஏற்ற போஷணையையளிக்கும் ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும்.CCh 607.1