Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-47

    இச்சையடக்க வாழ்க்கைக்கு அழைப்பு

    ஆரோக்கியம் விலை மதிக்கப்பட முடியாததோர் ஆசீர்வாதம். அனேகர் எண்ணுவதைப் பார்க்கிலும் அது மன சாட்சியுடனும் மார்க்கத்துடனும் நெருங்கிய தொடர்புடையது. ஒருவர் ஊழியஞ் செய்வதற்கு அவசியமான திராணியுடனே அது நெருங்கிய உறவுடையது. நம்முடைய குணத்தைக் காப்பது போலவே நம்முடைய ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். நமது ஆரோக்கியம் எத்தனை நலமுடையதோ அதற்குத் தக்கவாறு தேவனுடைய வேலையை அபிவிருத்தி செய்வதற்கும் மனித வர்க்கத்தை ஆசிர்வதிப்பதற்கென்றும் நாம் எடுக்கும் முயற்சிகளும் நலமுடையதாகவிருக்கும். CT 294.CCh 562.1

    1871-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதியில் ஆரோக்கிய சீர்திருத்த தூது நமது கர்த்தருடைய வருகைக்கென்று ஜனத்தைத் தகுதி பெறச் செய்யும் பெரும் வேலையின் ஒரு கிளையே என்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. ஆரோக்கிய சீர்திருத்தத் தூது மூன்றாம் தூதனின் தூதுடனே, கை சரீரத்துடனே பிணைக்கப்பட்டிருப்பது போலவே, பிணைப்பட்டுள்ளது. பத்துக் கற்பனைகளாகிய பிரமாணம் மனிதனால் அற்பமாக எண்ணப்படுகின்றது. என்றாலும், அதை மீறுவோருக்கு எச்சரிப்பின் தூதை அருளாமல், அவர்களைத் தண்டிப்பதற்கு கர்த்தர் வெளிப்படமாட்டார். மூன்றாம் தூதன் அத் தூதை அறிவிக்கின்றார். மனிதர் தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய வாழ்விலே அதின் போதனைகளைப் பின்பற்றினால் உலகில் பிரளயம் போன்று பரவியிருக்கும் வியாதியாகிய சாபம் இராது.CCh 562.2

    சீர்கெட்ட போஜனப் பிரியத்திலும், மிகுதியான இச்சைகளிலும் தங்களை ஈடுபடுத்தும் பொழுது, இயற்கைப் பிரமாணத்தை மட்டுமின்றி, ஆண்களும் பெண்களும் தேவப் பிரமாணத்தையும் மீறுகின்றனர். எனவே அவர் நம்மில் அமைத்துள்ள பிரமாணங்களை நாம் மீறுகின்ற பாவத்தை நாம் காணத்தக்கதாக ஆரோக்கிய சீர் திருத்த தூதின் ஒளி நமது பேரில் பிரகாசிக்கச் செய்கின்றார். நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் நாம் இயற்கைப் பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தது அன்றி கீழ்ப்படியாதது என்று கண்டுபிடிக்கப்படக் கூடும். மனிதருள் சிலர் அறிந்தும் பலர் அறியாமையினாலும் தாம் அமைத்திருக்கும் இயற்கைப் பிரமாணத்தை மீறி நடந்து, நிர்ப்பந்தமான நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதைக் கிருபையுள்ள நமது பரமபிதா நோக்கிப் பார்க்கின்றார். மனித ஜாதியின்மேல் அன்பும் பரிதாபமும் கொண்டு ஆரோக்கிய சீர்திருத்தத்தின் பேரில் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்கின்றார். இயற்கைப் பிரமாணத்தை அனைவரும் கற்று, அதற்கிசைவாக ஜாக்கிரதையாக வாழுவதற்கென்றே அவர் தமது பிரமாணத்தையும் அதின் மீறுதலுக்குரிய தண்டனையும் அறிவிக்கின்றார். அவருடைய பிரமாணத்தி அவர் தெளிவாகக் கூறியறிவித்து, அதைப் பிரசித்தப்படுத்தி, மலையின் மேல் இருக்கிறதோர் பட்டணம் போலவே விளங்கச் செய்கின்றார். கணக்குக் கொடுக்க வேண்டிய அனைவரும் விரும்பினால், அப்பிரமாணத்தை அறிந்துகொள்ளுலாம். அறிவில்லாதவர் பொறுப்புடனே நடந்துகொள்ளமாட்டார்கள். கர்த்தருடைய வருகைக்கென்று ஓர் ஜனத்தை ஆயத்தப்படுத்துவதற்கு இயற்கைப் பிரமாணத்தைத் தெளிவுபடுத்தி அதற்குக் கீழ்ப்படியுமாறு கோருவது மூன்றாம் தூதனின் வேலையுடனே பிணைப்பட்ட அலுவல். 3T 161.CCh 563.1