Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையை விருத்தி செய்தல்

    இள வயதினருக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு இடைவிடாத விழிப்பும் தாழ்மையான பிரார்த்தனையுமே. இவை அன்றித் தாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கலாம் என்று அவர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். சாத்தான் தன்னுடைய சோதனைகளையும் தன்னுடைய உபாயங்களையும் ஒளியின் வேஷத்தினால் மூடிக்கொண்டு, கிறிஸ்துவை வனாந்தரத்தில் கிட்டிச் சேர்ந்தது போலவே கிட்டிச் சேருகின்றான். அப்பொழுது அவன் பரம தூதரில் ஒருவன் போன்ரு காணப்பட்டான். பரலோக விருந்தினர் போன்று நமது ஆத்துமாவின் எதிரி நம்மைக் கிட்டிச் சேருவான். தெளிந்த புத்தியும் விழிப்புமே அச்சமயத்தில் நமது பாதுகாப்பு ஆகுமென்று அப்போஸ்தலன் சிபார்சு சொல்கின்றார். கவலையீனத்தினாலும், ஆலோசனை யின்மையாலும் தங்கள் கிறிஸ்தவ கடமைகளில் தவறும் இளைஞர் கிறிஸ்துவைப் போல் சாத்தானை ஜெயிக்காமல் மீண்டும், மீண்டும் சோதனைகளில் அகப்படுகின்றார்கள். 3T 374.CCh 492.1

    கர்த்தருடைய பட்சத்தில் இருப்பதாகக் கூறும் அனேகர் அங்கே இல்லை. அவர்களுடைய கிரியைகளின் பளு அல்லது பாரம் சாத்தானின் பட்சத்தில் உள்ளது. யார் பட்சத்தில் இருக்கிறோமென்று எவ்விதமாக நாம் தீர்மானிப்போம்? அவர் பட்சத்தில் இருக்க யாருக்கு உள்ளம் இருக்கின்றது? நம்முடைய எண்ணங்கள் யார் பட்சத்தில் இருக்கின்றன? யாருடனே சம்பாஷிக்க நாம் விரும்புகின்றோம்? நம்முடைய அனல் மிகுந்த ஆசைகளும் நமது மிகச் சிறந்த சக்திகளும் யாரைப் பற்றியுள்ளன? நாம் கர்த்தர் பட்சத்தில் இருந்தால் நம் எண்ணங்கள் அவரோடே இருக்கும். நமது மகா இனிய நினைவுகள் அவரைப்பற்றியே இருக்கும். உலகத்துடனே நமக்கு சினேகிதம் இல்லை. நமக்கு இருக்கும் யாவு, நாமும் அவருக்கு அர்ப்பணமாவோம். அவருடைய சாயலைத் தரித்துக் கொள்ளவும் அவருடைய ஆவி நெஞ்சில் நிரம்பப் பெறவும் அவர் சித்தப்படியே செய்து யாவிலும் அவரைப் பிரியப்படுத்தவும் வாஞ்சையாயிருப்போம்.CCh 492.2

    பிரயோஜனமான பலனைப் பெறுவதற்கு நம்முடைய சக்திகளைப் பயன்படுத்தும் வல்லமையே மெய்க் கல்வி ஆகும். மார்க்க அப்பியாசத்திற்கென்று நாம் ஏன் அத்தனை சொற்ப கவனம் செலுத்துகின்றோம்? நம்முடைய மூளை பலமும், எலும்பு, மாம்சத்தின் பலம் அனைத்தும் உலகத்திற்குச் சொந்தமாக இருக்கின்றதே. உலகத்தில் சார்பில் நமது பட்சம் முற்றுமாகச் சார்ந்திருப்பதே இதற்குக் காரணம். உலக அலுவலை ஊக்கமுடனும் வல்லமையுடனும் நிறைவேற்றுவதற்கு நாம் பயின்றதால், மனது உலக அலுவல்களில் பழக்குமுடையதாகிவிட்டது. இக் காரணத்தினாலேயே கிறிஸ்தவர் மார்க்க அப்பியாசத்தைக் கடினமென்றும், உலகப் பிரகாரமான அலுவல்கள் இலகுவென்றும் கருதுகின்றனர். ஏனெனில் மனதின் சக்திகள் அவற்றை நிறைவேற்றுவதில் பயிற்சி பெற்றுள்ளன. கடவுளுடைய திருமொழியாகிய சத்திய வசனத்தை ஏற்றுக்கொள்ள மனதின் வெறும் சம்மதம் மட்டும் கிடைத்திருக்கின்றது. அவற்றை அனுபவ வாழ்வில் அப்பியாசித்து, நன் மாதிரியினால் அவற்றிற்கு விளக்கம் அளிப்பது இல்லை.CCh 493.1

    ஆவிக்குரிய எண்ணங்களையும், தேவ பக்தியையும் வளர்ப்பது கல்விப் பயிற்சியின் ஒரு பாகமாக ஏற்படுத்தப்படவில்லை. அனைத்தின் மீதும் இந்தப் பயிற்சி செல்வாக்குடையதாக விளங்கி உடலையும் உள்ளத்தையும் அட்கொண்டுவிட வேண்டும். சரியான காரியத்தைச் செய்யும் பழக்கம் குறைவு, சாதகமான முறையில் சூழ் நிலைகள் இருக்கும் பொழுது, ஊக்கமுடனே கிரியை நடப்பிப்பது, பின்னர் விட்டுவிடுவதுமாக ஆவிக்குரிய முயற்சி நடைபெறுகின்றது. தெய்வ காரியங்களில் இயல்பாகவே சதா சிந்தனை கொள்வது மனதை ஆட்கொள்ளும் இலட்சியமாக விளங்குவதில்லை.CCh 493.2

    இருதய சுத்தத்தில் நாட்டம் கொள்ளுவதற்கு மனது பயிற்சியும் போதனையும் அடைய வேண்டும். ஆவிக்குரிய காரியங்களில் இருக்கும் வாஞ்சைக்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். ஊக்கம் அளிக்கப்பட வேண்டுமென்று மறுபடியும் சொல்லுகின்றேன். அவ்வாறன்றிக் கிருபையிலும், சத்தியத்தைப் பற்றின அறிவிலும் வளருதல் இயலாது. உத்தமத்தையும் மெய்யான பரிசுத்தத்தையும் நாடுவதெல்லாம் சரியே. ஆயினும் அவற்றைத் தேடுவதுடனே நின்று விட்டால், அதினால் பயன் ஏதும் இராது. நல்ல நோக்கங்களுடையவர்களாயிருப்பது சரியே. ஆயினும் நோக்கங்களை நிறைவேற்ற உறுதி கொள்ளாவிட்டால், அவற்றால் பயன்யாதும் இல்லை. கிறிஸ்தவராயிருப்பதற்கு விருப்பமும், கிறிஸ்தவராயிருப்போமென்ற நம்பிக்கையுமுடையவர்களாயிருக்கையிலே தானே அனேகர் தங்களுடைய ஜீவனை நஷ்டப்படுத்திக்கொள்ளுவார்கள். அவர்கள் ஊக்கமான கிரியை நடப்பிக்காதே போனார்கள். தராசில் நிறுக்கப்படும் பொழுது குறைவுடையவர்களென்று அறியப்படுவார்கள். சித்தமானது சரியான திசையில் அப்பியாசிக்கப்பட வேண்டும். நான் முழு இருதயத்தையும் தத்தஞ் செய்த கிறிஸ்தவனாக இருப்பேன். பூரணமான அன்பின் ஆழத்தையும், உயரத்தையும், நீளத்தையும், அகலத்தையும் நான் அறிந்து கொள்ளுவேன் என்று உறுதியாயிருங்கள். இயேசுவானவரின் திருமொழியைக் கேளுங்கள்: நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். மத். 5:6. நீதியின் மேல் பசி தாகமுடைய ஆத்துமாவைத் திருப்தி செய்வதற்காகக் கிறிஸ்துவானவர் வேண்டியவற்றைச் சவதரித்து வைத்திருக்கின்றார். 3T 374.CCh 494.1