Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-57

    தேச சட்டங்கள், அதிகாரிகளோடு நம் உறவு

    அரசியல் அதிகாரிகளுக்கு முன்பாக நாம் எவ்வித மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்பதை பேதுரு அப்போஸ்தலன் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள இராஜாவுக்கானாலுஞ்சரி, தீமை செய்கிறவர்களுக்கு ஆக்கினையும், நன்மை செய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மை செய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. சுயாதீனத்தை துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள். தேவனுக்குப் பயந்திருங்கள்; இராஜாவைக் கனம் பண்ணுங்கள்.” 1 பேதுரு 2:13-17; AA 522.CCh 663.1

    நமக்கு மேலாக அதிகாரிகளும், ஜனங்களை பரிபாலிக்க சட்டங்களும் இருக்கின்றன. இச்சட்டங்கள் இல்லாவிடில், உலகத்தின் நிலை தற்சமயமிருப்பதிலும் அதிக கேடாக இருக்கும். தேச சட்டங்களில் பல நன்மைக் கானவைகளும், சில தீமைக் கானவைகளுமாகும். தீமைக்கேதுவானவைகள் பெருகுகின்றன. நாம் மிகவும் இக்கட்டான கட்டங்களுக்குள் கொண்டு செல்லப்படலாம். தேவனுடைய ஜனம் உறுதியாக இருந்த, அவரது வார்த்தையின் இலட்சியங் களின்படி ஜீவித்தால் தேவன் தம் ஜனத்தைத் தாங்குவார். 1T 201.CCh 663.2

    தேவன் சீனாய் மலையில் கேட்கத்தக்க விதமாகாக் கூறி அறிவித்துப் பின் கற்பலகைகளில் தம் விரலால் எழுதிய மேலான சட்டத்திற்கு எதிரிடையாக இல்லாதிருக்கும் சகல தேசச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து நடப்பது நமது கடமையெனக் கண்டேன். “நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனுயிருப்பேன். அவர்கள் என் ஜனமாய் இருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” எரே. 31 : 33. CCh 664.1

    தேவனுடைய பிரமாணம் உள்ளத்தில் எழுதப்பட்டிருப்பவன் மனிதனுக்குக் கீழ்ப்படிவதை விட தேவனுக்குக் கீழ்ப்படிவான். தேவனுடைய பிரமாணத்தில் சிறியதான ஒன்றை மீறத் தூண்டும் எவருக்கும் கீழ்ப்படியாமை காட்டுவதற்கு தயங்கான். தேவனுடைய ஜனம், ஆவியின் சத்தியத்தினால் போதிக்கப்பட்டு, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் நல் மனச்சாட்சியினாலும் நடத்தப்பட்டு ஜீவித்து, உள்ளங்களில் எழுதப்பட்டிருக்கும் தேவனுடைய பிரமாணத்தை தாங்கள் கீழ்ப்படிவதற்கான அங்கீகாரம் பெற்ற சட்டமென அறிந்துகொள்வார்கள். தெய்வீக பிரமாணத்தின் ஞானம், அதிகாரம் மிகவும் மேலானது. 1T 361.CCh 664.2

    இயேசு வாழ்ந்த காலத்திய அரசாங்கம் கறைப்பட்டதும் கொடுமையுள்ளதுமாக இருந்தது. எப்பக்கமும் கண்ணீர் விடுவதற்கான துர்ப்பழக்கங்களும், கொள்ளையும், மதத்துவேஷமும், கொடுமையும் இருந்தன. என்ற போதிலும் இரட்சகர் அரசியல் சீர்திருத்தம் செய்ய முற்படவில்லை. அவர் தேசீய ஊழல்களையும், தேச விரோதிகளையும் கண்டிக்கவில்லை. அவர் அரசியல் அதிகாரங்களிலும், அதிகாரத்திலிருப்பவர்களின் நிர்வாகங்களிலும் குறுக்கிடவில்லை. நமக்கு முன்மாதிரியான அவர் உலக அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரிந்து நின்றார். DA 509.CCh 664.3

    திரும்பத் திரும்ப தேசச் சட்ட சார்பான காரியங்களிலும், அரசியலுக்கடுத்த கேள்விகளிலும் முடிவு கூறும்படிக் கேட்கப்பட்டார். கிறிஸ்து லௌகீக காரியங்களில் தலையிட மறுத்துவிட்டார். இவ்வுலகில் கிறிஸ்துவானவர் தாம் ஸ்தாபிக்க வந்த நீதியின் இராஜ்யமான பெரிய ஆவிக்குரிய இராஜ்யத்தின் தலைவராக நின்றார். அவர் போதனைகள் அந்த இராஜ்யத்தின் உயர்ந்த, பரிசுத்த இலட்சியங்களைத் தெளிவு படுத்தின. யோகோவாவின் இராஜ்யத்தினைக் கட்டுப்படுத்தும் சக்திகள் நீதி, இரக்கம், அன்பு எனக்காட்டினார். 9T 218.CCh 665.1

    வேவுகாரர் தாங்கள் யதார்த்தமாகவே தங்களது கடமையைத் தெரிந்துகொள்ள ஆசைப் படுகின்றவர்கள் போன்று அவரிடம் “போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவராகையால் எவனைக் குறித்தும் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.” மத். 22 : 16, 17.CCh 665.2

    கிறிஸ்துவினுடைய பதில் அதினின்று த்ப்புவாக அன்றி மிகவும் நேர்மையானதாக இருந்தது. ரோம நாணயத்தை தமது கையில் பிடித்துக்கொண்டு, அதில் பதியப்பெற்றிருந்த பெயரையும், சொரூபத்தையும் காட்டி, ரோம வல்லமையின் கீழ் அவர்கள் தெய்வீக கடமைக்கு பாதுகாப்பு பெற்றிருப்பதால், முரண்படாத வரைக்கும் இராயனுக்குரியதை இராயனுக்குச் செலுத்த வேண்டும் என்றார்.CCh 665.3

    பரிசேயர் கிறிஸ்துவின் பதிலைக் கேட்டபொழுது, “ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களின் மாய்மாலத்தையும், துணிகரத்தையும் கண்டித்தார். அப்படிச் செய்ததின் மூலம் அவர் சர்க்காருக்கும், தேவனுக்கும் செய்ய வேண்டிய எல்லையை வரம்பிட்டு, மனிதனுக்கு ஒரு பெரிய இலட்சியத்தை விளக்கினார். DA 601-603.CCh 665.4