Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவ ஊழிய ஆதரவும் நமது சொத்தும்+

    தேவனை உண்மையாய் நேசிக்கிற, செல்வந்தருக்கு நான் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வேலையை ஆதரிக்க உங் கள் பொருட்களைக் கொடுப்பதற்கு இதுவே காலம். மடிந்து போகும் ஆத்துமாக்கள் மீட்கப்பட போதகர்கள் செய்யும் தற்தியாக ஊழியத்தில் அவர்களைத் தாங்குவதற்கு இதுவே காலம். உங்கள் உதவியால் மீட்கப்பட்டோரை நீங்கள் பரலோக ராஜ்யத்தில் சந்திக்கும்போது, மகிமையான பலனை அடைவீர்களல்லவா!CCh 158.2

    ஒருவரும் தங்கள் காசுகளைக் கொடுக்காமலிருக்கக் கூடாது; அதிகமுள்ளவர்கள் அழியாத பொக்கிஷத்தைத் பரலோகத்தில் சேர்கக கூடுமென்பதில் மகிழ்ச்சியடைவார்களாக. தேவனுடைய ஊழியத்தில் செலவிடப்படாத பணம் அழியும். இதற்குப் பரலோக வங்கியில் வட்டி கொடுக்கப்படுவதில்லை.CCh 159.1

    எங்குமுள்ள ஏழாம் நாள் அட்வெந்திஸ்தர்கள் தங்கள் தங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப, தங்களையும் தங்கள் உயர்தர சேவையையும் தம்முடைய ஊழிய உதவிக்கென படைக்கும் படி கர்த்தர் அழைக்கிறார். அவருடைய ஆசீர்வாதங்களையும், இரக்கங்களையும் பாராட்டி தங்கள் நன்றியறிதலை கொடைகளாலும், காணிக்கைகளாலும் அவர்கள் வெளிக்காட்டும்படி விரும்புகிறார். 9T. 131, 132.CCh 159.2

    உபத்திரவ காலத்திற்கு நம் தேவைக்கான திட்டங்களைச் செய்துகொள்ள வேண்டுமென்பது வேதத்துக்கு முரண்பாடானது. பரிசுத்தவான்கள் உபத்திரவ காலத்திற்கென தங்களில்லத்திலாவது வயலிலாவது ஆகாரத்தைச் சேர்த்து வைத்திருந்தாலும், நாட்டில் பட்டயம், பஞ்சம், கொள்ளை நோய் முதலியன வரும்போது, அவையாவும், அவர்களிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அவர்கள் வயல்களை அன்னியர் அறுத்துக்கொண்டு போவார்கள் என்றும் கண்டேன். அப்பொழுது நாம் முற்றிலுமாய்க் கடவுளைத்தான் நம்ப வேண்டும்; அவர் நம்மை ஆதரிப்பார். அப்பொழுது நமது அப்பமும் தணணீரும் நிச்சயமாய் கிடைக்கும் என்றும், நாம் பசியடையோமென்றும், தேவன் வனுந்தரத்தில் நமக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்த வல்லவராதலால் இப்படியாகும் என்றும் காட்டப்பட்டது அவசியமானால் எலியாவைப் போஷித்து, இஸ்ரவேலருக்குச் செய்தது போல மன்னாவையும் பெய்யச் செய்வார்.CCh 159.3

    உபத்திரவகாலத்தில் பரிசுத்தவான்களுக்கு நிலங்களும் வீடுகளும் பயன்படா; ஏனெனில் அப்பொழுது அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேவ ஊழியத்திற்குக் கொடுக்க முடியாமல், கொள்ளைக் கூட்டத்திற்குப் பயந்து ஓடுவார்கள். தங்களை நெருங்கி இருக்கும் பாரமான யாவற்றையும் பரிசுத்தவான்கள் உபத்திரவ காலத்திற்கு முன்பே தகர்த் தெறிந்து, பலியினாலே தேவனோடு உடன் படிக்கைச் செய்ய வேண்டுமென எனக்குக் காட்டப்பட்டது. அவர்கள் தங்கள் சொத்துக்களை பீடத்தின் மீது படைத்து, தங்கள் கடமைகளைப் பற்றி தேவனிடம் கேட்டால், அவைகளை எப்பொழுது, எப்படி முடிவு கட்ட வேண்டுமென அவர்களுக்குக் கற்பிப்பார். அப்பொழுது அவர்கள் தங்களுக்குப் பாரமானது ஒன்றுமில்லதபடியால் உபத்திரவ காலத்தில் துன்பமின்றியிருப்பார்கள். E.W. 56,57.CCh 160.1