Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-24

    ஜெபக்கூட்டங்கள்

    நாம் நடத்தும் கூட்டங்கள் யாவிலும் ஜெபக்கூட்டங்கள் மிகவும் எழுப்புதலான கூட்டங்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும் இவை திறமையற்ற விதமாக நிர்வகிக்கப்படுகின்றன். அனேகர் பிரசங்க ஆராதனைக்கு வருகிறார்கள். ஜெபக்கூட்டத்திற்கு வருவதில்லை. இது சிந்தனைக்குரிய விஷயம். கூட்டங்களை எழுப்புதலும் கவர்ச்சியுமுடையனவாக நடத்துவதற்குக் கடவுளிடம் ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்தின் உதவியினால் அவற்றை நடத்தத் திட்டஞ்செய்ய வேண்டும். ஜுவ அப்பத்திற்காக அனேகர் பசியாயிருக்கின்றனர். ஜெபக் கூட்டங்களில் ஜீவ அப்பம் அருளப்படுமானால் அவர்கள் கூட்டங்களுக்கு வந்து அதைப் பெற்றுக்கொள்ளுவார்கள்.CCh 314.1

    நீண்ட பிரசங்கங்களும் அலுப்புண்டாக்கும் ஜெபங்களும் எவ்விடத்திற்கும் குறிப்பாக, சமூக உறவுக் கூட்டங்களுக்கும் பொருந்த மாட்டா. முன் வந்து எப்பொழுதும் பேசுவதற்கு சித்தமாயிருக்கின்றவர்கள், கூச்சமும் பின் நிற்கின்ற தன்மையுமுடையவர்களுக்குச் சந்தர்பமளிக்கிறதில்லை. ஆழமற்ற அனுபவமுடையவர்களாயிருப்பவர்களே பொதுவாக அதிகமாப் பேசுகின்றார்கள். அவர்களுடைய ஜெபங்கள் நீண்டவை. இயந்திர இயக்கம் போன்றவை. அவர்களுடைய ஜெவங்களைக் கேட்கிறவர்களுக்கும் தூதர்களுக்கும் கூட அவை அலுப்புண்டாக்குகின்றன. நம்முடைய ஜெபங்கள் சுருக்கமும் விசேஷித்த முக்கியத்துவமும் உடையனவாக இருக்க வேண்டும். யாராவது நீண்ட ஜெபம் பண்ண வேண்டியதாக இருக்குமானால், அறை வீட்டில் செய்யும் ஜெபத்திற்தாக இருக்குமானால், அறை வீட்டில் செய்யும் ஜெபத்திற்கென்று அவற்றை வைத்து வையுங்கள். தேவ ஆவி உங்கள் இருதயங்களில் பிரவேசிக்க இடமளியுங்கள். சகல வறண்ட வெளியாசாரங்களையும் பரிசுத்த ஆவியின் வல்லமை அப்புறப்படுத்தும். 4T. 70, 71.CCh 314.2