Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பள்ளி ஆசிரியரின் தகுதிகள்

    உங்கள் பள்ளியின் தலைவராக நல்ல பலவானாகிய ஒருவரை நியமியுங்கள். திருந்திய நல்லொழுக்கப் பயிற்சியைப் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கு அவருடைய சரீர பலம் அவருக்குத் துணையாக இருக்கும். ஒழுங்கான பழக்க வழக்கங்களும் சுத்தமும் உழைப்பும் உடையவர்களாக மாணவர்களை பயிற்சிப்பதர்குத் தகுதியுடையவராக அவர் இருக்க வேண்டும். என்ன செய்த போதிலும் திருந்தச் செய்யுங்கள். வாழ்க்கை நடைமுறைக் கல்வியை நீங்கள் உண்மையாகக் கொடுத்தால், அனேக மாணவர் விற்பனையாளராகவும் புத்தக ஊழியராகவும் சுவிசேஷர்களாகவும், ஊழியத்திலே நேரிடையாகப் பிரவேசிக்கக் கூடும். எல்லா ஊழியர்களும் உயர்ந்த தரமான கல்வி கற்கவேண்டுமென்று நாம் எண்ணுவதில்லை. CT 213, 214.CCh 544.1

    உபாத்திமார்களைத் தெரிந்து கொள்ளுவதில் நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கையையும் கையாள வேண்டும். போதக ஊழியத்திற்கு ஆட்களைத் தெரிந்துகொள்ளுவது போலவே இத் தெரிந்துகொள்ளுதல் பக்திவினயமானது என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். குணங்களைப் பகுத்தறியக் கூடிய ஞானமுள்ள மனிதர் உபாத்திமாரைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளவயதினருக்குப் பயிற்சி அளித்து, அவர்கள் மனதை உருவாக்குவதற்கு கிடைக்கக் கூடிய மிக நல்ல தாலந்துகள் தேவையாகின்றன. நம்முடைய சபை பள்ளிக் கூடங்களில் செய்யப்படவேண்டியதாகிர அனேக பிரிவான வேலைகளை சித்திகரமாக செய்வதற்கு இப்படிப்பட்டவர்களே தேவை. இளமையும், அனு பவக்குறைவு, திறமைக் குறைவும் உள்ள ஆசிரியர்களைப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க நியமிக்காதிர்கள். ஏனெனில் அவர்களுடைய முயற்சிகள் ஒழுங்கைச் சீர் குலைக்கும். CT 174, 175.CCh 544.2

    சோதித்துப் பரிட்சித்து, ஒருவர் தெய்வத்தை நேசித்து, அவர் தவறு இழைக்கப் பயப்படுகிறார் என்ற அத்தாட்சி காணப்பட்டாலொழிய, ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப் படக்கூடாது. ஆசிரியர்கள் தெய்வத்திடம் கற்று கிறிஸ்துவின் பள்ளியில் அன்றாடம் கற்கிறவர்களாயிருந்தால் மாத்திரமே, கிறிஸ்துவானவரைப் பின்பற்றி, அவர்கள் வேலை செய்வார்கள். அவர்கள் கிறிஸ்துவுடனே சேர்ந்து ஆதாயப்படுத்துகிறவர்களாயிருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் இளவயதினரும் விலையேறப் பெற்றவர்கள். FE 260.CCh 545.1

    ஒரு ஆசிரியரின் வழக்கங்களும் இலட்சியங்களும் அவர் பெற்றிருக்கும் பட்டங்கள் அல்லது யோக்கிதா பத்திரங்களை விடவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். சரியான செல்வாக்குடையவராக அவர் விளங்குவதற்கு தன்னை அவர் பூரணமாக அடக்கியாளக் கூடியவராகவும், தன்னுடைய மாணவர்கள் நிமித்தம் இருதயத்திலே அன்பு நிறைந்தவராகவும், அவருடைய பார்வை, அவருடைய வார்த்தை, கிரியை ஆகியவற்றால் இதை விளங்கச் செய்கிறவராயிருக்க வேண்டும். FE 19.CCh 545.2

    ஆசிரியர் எப்பொழுதும் கண்ணியம் வாய்ந்த ஒரு கிறிஸ்தவனாக நடந்துகொள்ள வேண்டும். தன்னுடைய மாணவர்களுக்கு நண்பனாகவும் ஆலோசனைக்காரனாகவும் அவர் இருக்க வேண்டும். நம்முடைய ஆசிரியர்களும், போதகர்களும் சபை அங்கத்தினர்களும் கிறிஸ்தவ மரியாதைப்பண்ணப் பயின்றால், அவர்கள் ஜனங்களுடைய இருதயங்களை விரைவில் கவர்ந்து கொள்ளுவார்கள். பின்னும் அனேகர் சத்தியத்தை ஆராய்ந்து, அதை ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியனும் தன்னையே மறந்து, தன்னுடைய மாணவர்களில் வெற்றியிலும் சுபீட்சத்திலும் ஆழ்ந்த அக்கரை காட்டி, அவர்கள் கடவுளுடைய சம்பத்தென்பதையும், அவர்கள் மனதின் பேரிலும் குணத்தின் பேரிலும் தான் ஏற்படுத்துகின்ற செல்வாக்கிற்காக தான் கணக்குக்கொடுக்க வேண்டுமென்பதையும் உணரும்பொழுது, தெய்வ தூதரும் வந்து தங்கியிருக்க ஆசிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தை நாம் உடையவர்களாயிருப்போம். CT 93, 94.CCh 545.3

    உயர்ந்த சன்மார்க்க நெறியுடைய ஆசிரியர்கள் நம்முடைய சபை பள்ளிகளுக்குத் தேவை. நம்பப்படத்தகுந்தவர்களும் விசுவாசத்தில் ஆரோக்கியமுடையவர்களும் சாதுரியமும், பொறுமையுமுடையவர்களும், தேவனோடே கூட சஞ்சரித்து, பொல்ல்லாங்காய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு நீங்குகிறவர்களும் தேவை.CCh 546.1

    இளம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்குமாறு பெருமை உடையவர்களையும், அன்பில்லாதவர்களையும் நியமனஞ்செய்வது தீமையாகும். இத்தகைய குணமுடைய ஆசிரியர் விரைவாகக் குணத்தை அபிவிருத்தி செய்துகொண்டிருப்போருக்கு பெருந்தீங்கு விளைப்பார். ஆசிரியர்கள் தெய்வத்திற்கடங்காதவர்களாயிருந்தால், தாங்கள் மேற்பார்க்கின்ற குழந்தைகள் மீது அன்பில்லாதவர்களாயிருந்தால், தங்களை பிரியப்படுத்து கிறவர்களிடத்திலே பட்சபாதமுடையவர்களாயிருந்தால், தங்களைப் பிரியப் படுத்துகிறவர்களைப் பார்க்கிலும் குறைவான கவர்ச்சியுடையோர்களைப் பார்த்து பராமுகமாயிருந்தால், அன்றி அமைதியற்று பரபரப்புடையவர்களிடத்திலே பராமுக மாயிருந்தால், அவர்கள் இந்த அலுவலில் அமர்த்தப்படக் கூடாது. அவர்களுடைய வேலையின் விளைவக ஆத்துமாக்களின் நஷ்டம் கிறிஸ்துவானவருக்கு ஏற்படும், அதிலும் குழந்தைகளுக்கு அமைதியும், பட்சமும், நீடிய பொறுமையும், அன்பும் காண்பிக்க மிகவும் தேவையாகின்றபடியால் அவற்றை அளிக்கக் கூடிய ஆசிரியர்களே தேவை. CT 175, 176.CCh 546.2

    ஜெபத்தின் தேவையை ஆசிரியர் உணர்ந்து, தெய்வத்திற்கு முன்பாக தன் இருதயத்தை தாழ்த்தினாலன்றி, கல்வியின் சார்த்தை அவர் இழந்துவிடுகின்றார். CT 231.CCh 547.1

    ஆசிரியரின் உடல் தகுதியின் முக்கியத்தை நாம் அதிகபடுத்தி மதிப்பிட்டுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஆரோக்கியம் எவ்வளவு நிறைவாக இருக்கிறதோ அந்த அளாவில் வேலையும் நிறைவாக இருக்கும். சரீர சக்திகள் பெலவீனத்தினாலும் நோயினாலும் உண்டாகும் உபாதிகளால் அவதிப் படுகின்ற பொழுது, மனதானது தெளிவாக யோசிக்கவும் பலமாக கிரியை நடப்பிக்கவும் கூடாது. மனதின் வழியாக இருதயம் உணர்த்தப்படுகின்றது. சரீரதிறனின் குறைவினால் மனது உற்சாகத்தை இழந்து விடும்பொழுது, அந்த அளவிற்கு மேலான உணர்ச்சிகளும், நோக்கங்களும் தோன்றுவதற்குரிய வழி அடைப்பட்டு விடும். எது தவறு, எது சரி என்று பிரித்தறிவதற்கு ஆசிரியரால் கூடாதே போகிறது. நோயடைந்த வாழ்வின் விளைவுகளால் துன்பமடையும் பொழுது, பொறுமையாகவும், மனதில் தெம்புடனே நடந்துகொள்வதும் சரியாகவும் நியாய புத்தியுடனும் கிரியை நடப்பிப்பதும் கூடாத காரியம். CT 177.CCh 547.2