Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தாய்க் கடமைகள் இலகுவாக்கப்படவேண்டிய வேளை

    குழந்தைகள் பிறக்கு முன் ஒரு பெண்ணுக்கு யாதொரு கவனமும் அவசியமில்லை என்பது தவறு. இச் சமயம் தாயின் வேலை குறைக்கப்பட வேண்டும். அவள் உடலில் பல மாறுதல்கள் நடக்கின்றன. அதற்கு அதிக இரத்தம் தேவை; எனவே நல்ல சத்துள்ள ஆகாரம் வேண்டும், சத்துள்ள ஆகாரம் கொடுக்கப்படாவிடில், அவள் பலமிழந்து, பிறக்கும் சந்ததியின் சக்தியும் குன்றிப்போகும்.CCh 405.2

    அவள் ஆடையும் கவனிக்கப்பட வேண்டும். உடல் சீதோஷ்ண நிலை சமமாகக் காக்கப்பட வேண்டும். ஆடைக் குறையினால் அனாவசியமாக சக்திகள் உடம்பின் மேற் பரப்புக்குக் கொண்டு வரப்படுகின்றன. சக்தி பெறும்படி தாயானவள் தக்க ஆகாரம் பெற வேண்டும். இல்லாவிடில், இரத்த ஓட்டம் மிகக் குறைவுபட்டு, குழந்தை பாதிக்கப்படும். அதனால் பிறக்கும் குழந்தை ஆகாரத்தைச் சரிவர உட்கொண்டு பயன் படுத்தும் சக்தியை யிழந்து விடும். தாய் சேய் இருவரின் நலம் கால நிலைக்கேற்ற நல்ல ஆடைகளையும், சத்துள்ள ஆகாரத்தையும் பொருத்திருக்கிறது.CCh 405.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents