Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாட்சியாகமங்களைக் குற்றம் கண்டுபிடிப்பது பேராபத்து

    அண்மையில் நான் கண்டதோர் கனவில் மிகுந்த பக்தி வினயமான எச்சரிப்பின் ஆலோசனையை என் மூலமாய் பெற்றிருந்த ஒரு கூட்டத்தாரில் சிலர் தங்கள் மனதில் அந்த ஆலோசனை பதியாதிருக்குப்படி செய்ய முற்பட்டதைக் கண்டேன். அவர்கள் கூறினார்கள் நாங்கள் சகோதரி உவைட் அம்மையாருடைய சாட்சியாகமங்களை விசுவாசிக்கிறோம். என்ற போதிஉம் குறிப்பிட்ட ஒருவரின் காரியங்களை நேரடியாக தரிசனத்தில் காணவில்லை என்று அம்மையார் கூறும்பொழுது, பிற மனிதருடைய வார்த்தைகளைக் காட்டிலும் அவற்றை நாங்கள் முக்கியமானதாக மதிக்கவில்லை. கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார். நான் எழுந்து கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைக் கடிந்து கொண்டேன்.CCh 284.1

    பக்தி வினயமான எச்சரிப்புகளைப் பெற்றவர்கள், இது சகோதரி உவைட்டின் சொந்த அபிப்பிராயமே, நான் என்னுடைய நிதானத்தையே இன்னமும் பின்பற்றி ஒழுகுவேன் என்று சொல்லி, எந்த காரியங்களை செய்யக்கூடாது என்று அவர்கள் எச்சரிப்புப் பெற்றிருந்தார்களோ அந்த காரியங்களையே திரும்பவும் செய்து தேவனுடைய ஆலோசனைகளை அலட்சியம் செய்தால், அதின் பலன் சபைக்குக்கேடும் ஆவி காண்பித்திருக்கிறார். தங்களுடைய அபிப்பிராயங்களைப் பலப்படுத்துவதற்காக பலர் இந்த சாட்சியாகமங்களிலிருந்து வாக்குமூலங்களை எடுத்து தங்கள் கட்சிக்கேற்ற விதமான வாதங்களைக் கட்டி எழுப்புவார்கள். ஆயினும், தங்களுடைய போங்கைக் கண்டிக்கும் ஆலோசனைகளையும், தங்கள் அபிப்பிராயங்களுக் கிசையாதவற்றையும் குறித்து, அவை பரத்திலிருந்து அருளப்படவில்லை, அவை சகோதரி உவைட் அம்மையின் அபிப்பிராயங்களே என்று கூறுவர்.CCh 284.2

    இப்பொழுதும் சகோதரரே, தெய்வ மக்களுக்கும் எனக்கும் இடையே நீங்கள் நின்று கடவுள் அவர்களுக்கு அனுப்புகின்ற ஒளியைத்தடை செய்யாதிருக்கக் கேட்டுக்கொள்ளுகின்றேன். நீங்கள் குற்றங்கண்டு பிடிப்பதால் சாட்சியாகமங்கள் வலிமையிழந்து, அவற்றின் முக்கியத்துவம் தாழ்ந்து, சக்தி குன்றிவிடாதபடி பாருங்கள். உங்களுடைய சொந்த கருத்துகளுக்குப் பொருந்தும்படியாக அவற்றைப் பிரித்தெடுத்து, அவற்றுள் பரலோக ஒளி இது வென்றும் கேவலம் மனுஷ ஞானம் இதுவென்றும் பகுத்தறிந்து கூறுமளவிற்கு கடவுள் உங்களுக்குத் திறமையளித்திருக்கிறார் என்று எண்ணிவிடாதிருங்கள். சாட்சியாகமங்கள் தேவ வசனத்திற்கிசைவாக இராவிடில், அவற்றைத் தள்ளிவிடுங்கள். கிறிஸ்துவும், பேலியாளும் இசைந்திருக்க முடியாது. கிறிஸ்துவினிமித்தம், மனிதருடைய கள்ள நியாயங்களினாலும் ஐயவாதங்களினாலும் தெய்வ மக்களின் மனதைக் கலக்கமுறச் செய்து கடவுள் நியமித்த வேலையைப் பலனற்றதாக்காதீர்கள். உங்கள் ஆவிக்குரிய பகுத்தறிவுக்குறைவினாலே அனேகர் இடறுவதற்கும், விழுவதற்கும், கண்ணியில் அகப்படுவதற்கும் ஏதுவாக தேவனுடைய சாட்சியாகமங்களை இடறுதலின் பாறையாக்காதீர்கள். 5T. 687-691.CCh 285.1