Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விசுவாசமுள்ள ஜெபம்

    நம்முடைய கண்கள் திறக்கப்பட்டு சாவதானமாகவும், பத்திரமாகவும் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்ளுபவர்களிடம் பொல்லாத தூதர்கள் வேலை செய்வதைக் காணும் போது. நாம் பத்திரமாக இருப்பதாக உணர மாட்டோம். ஒவ்வொரு வினாடியும் பொல்லாத தூதர்கள் நம் வழியில் இருக்கின்றனர். பொல்லாத தூதர்கள் நம் வழியில் இருக்கின்றனர். பொல்லாதவர்கள் சாத்தானின் ஆலோசனைப்படி நடக்க தயாராக இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நமது மனம் அவனது பொல்லாத ஆட்களுக்கு எதிராக காவலற்று இருக்கும்போது, அவர்கள் புதிய இடம் பிடித்து, அதிசய கிரியை செய்து, நமது கண் முன் அற்புதங்களைச் செய்கின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் சித்திகரமாக உபயோகிக்கக்கூடிய ஒரே ஆயுதமாகிய வேத வசன்ங்களைக் கொண்டு எதிர்க்க நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?CCh 701.1

    இந்த அற்புதங்கள் தேவனிட்த்திலிருந்து வருவதாக எண்ணி அவைகளை பெற்றுக்கொள்ளும்படி சிலர் சோதிக்கப்படலாம். நமது முன்னிலையில் வியாதிக்காரன் சுகமடைவான். அற்புதங்கள் நாம் காண செய்யப்படும். சாத்தானின் பொய்யான அற்புதங்கள் பூரணமாக வெளிப்பட்டு நம்மை சோதிக்க வருவதாயிருக்க, அதற்கென நாம் ஆயத்தமாக இருக்கிறோமா? அனேக ஆத்துமாக்கள் இக் கண்ணியில் அகப் பட்டு பிடிபடுவார்கள் அல்லவா? தேவனுடைய தெளிவான கட்டளைகளையும், பிரமாணங்களையும் விட்டு விலகி, கட்டுக் கதைகளுக்கு செவி சாயப்பதால், அனேகருடைய மனது இந்த பொய்யான அற்புதங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கு ஆயத்தப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஈடுபடப்போகிற இந்தப் போருக்கு இப்பொழுதே நாம் ஆயுதம் தரித்திருக்கவேண்டும். வேதத்தில் விசுவாசம் கொண்டு, அதை ஜெபத்தோடு பிடித்து, அன்றாட வாழ்க்கையில் அனுஷ்டித்து வருவது சாத்தானின் வல்லமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நாம் அனைவரும் வெற்றி வீரராவோம்.1T 301.CCh 701.2