Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சன்மார்க்க சீர்கேட்டின் விளைவு

    மிகுந்த பக்தியுடையவரென்று எண்ணப்படும் ஒரு சிலர் சுய புணர்ச்சியாகிய பாவத்தையும் அதினால் விளையும் திட்டமான பலனையும் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள். நீண்ட கால பழக்கம் அவர்களுடைய அறிவைக் குருடாக்கியது. தேக வலுவைக் குன்றச் செய்து, மூளை நரம்பு ஆகியவற்றின் சக்தியை அழித்துப் போடும் இந்த ஈனமான பாவத்தின் சக்தியை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. உறுதிப்பட்ட பழக்கத்தை எதிர்க்கையில் சன்மார்க்க லட்சியம் மிகுந்த பலட்சமுடையதாயிருக்கிறது. கீழ்த்தரமான இந்தப் பாவ ஈடுபாட்டிற்கு எதிராகப் பலப்படுத்தப்பட்டிராத இருதயத்தில் பரத்திலிருந்துவரும் பக்திவினயமான தூதுகள் பதியாது. உணர்ச்சி மிகுந்த மூளையின் நரம்புகள் சுபாவத்திற்கு ஒத்திராத மாமிச இச்சையின் ஈடுபாட்டைத் திருப்தி செய்ய இயற்கையோடு இசைவில்லாத பிரகாரமாகக் கிளர்ச்சி அடைந்தபடியால் ஆரோக்கியமிழந்தன. 2T 347.CCh 633.1

    வேறெந்த தீங்கைப்பார்க்கிலும், மனித ஜாதி ஷீணிப்பதற்கு சன்மார்க்க கேடு காரணமாயிருந்திருக்கிறது. நாம் அச்சமுறும் அளவிற்கு அது பயிலப்பட்டு, எல்லா வகையான வியாதிகளையும் பிறப்பிக்கின்றது.CCh 633.2

    இந்தப் பாவத்தைக் குறித்து தங்கள் பிள்ளைகள் அறிந்துவுடையவர்களாயிருப்பதைப் பொதுவாகப் பெற்றோர் சந்தேகப்பதேயில்லை. இக்குற்றத்தில் பெற்றோர் அனேகர் முன்னர் ஈடுபட்டிருந்ததால் அவர்களே பிள்ளைகளின் பாவத்திற்கும் காரணர். தங்களுடைய இல் வாழ்க்கையின் சிலாக்கியங்களை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி, மிதமிஞ்சின ஈடுபாட்டினால் மிருக இச்சைகளைப் பலமடையச் செய்தனர். இவை பலமடைந்த பொழுது, சன்மார்க்கமும் மூளைத் திறனும் பலட்சயமடைந்தன. மிருக சக்தியினால் ஆவிக்குரிய சக்தி வீழ்ச்சியடைந்தது. விருத்தியடைந்த மிருக இயல் புடையவர்களாக பிள்ளைகள் உற்பவமாகின்றார்கள். பெற்றோருடைய குணத்தின் முத்திரை அவர்களுக்கும் தரிப்பிக்கப்படுகின்றது. இத்தகைய பெற்றோருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தடையின்றி இயற்கையின்படியே அருவருப்பான இரகசியமான பாவப்பழக்கங்களில் ஈடுபடுவர். பெற்றோர் தங்களுடைய சொந்த இச்சையின் இயல்பாகிய முத்திரையை அவர்களுக்கு அளித்தார்கள். பெற்றோரின் இத்தகைய பாவத்தினால் பிள்ளைகள் நியாய்ந்தீர்க்கப்படுகிறார்கள்.CCh 633.3

    ஆன்மாவையும் சரீரத்தையும் அழித்துப் போடும் இப்பாவத்தில் முழுவதுமாக உறுதிப்பட்டவர்கள் இரகசிய பொல்லாங்காகிய தங்களுடைய மனதின் பாரத்தில் தங்களுடனே தோழமை கொள்ளுகிறவர்களையும் பழகச் செய்தாலன்றி அமர்ந்திருக்கமாட்டார்கள். அவர்களுடைய ஆரவம் உடனடியாக மூட்டப்படுகின்றது. பாவத்தைப் பற்றின அறிவு இளவயதினடமிருந்து இளவயதினருக்கும், குழந்தைப் பிராயமுடையவர்களிடமிருந்து குழந்தைப் பிராயமுடையவர்களுக்கும் பரிமாறப்பெற்று, இந்தக் கீழ்த்தரமான பாவப் பழக்கத்தைப் பற்றின அறிவில்லாத ஒருவர் கூட மீதமாக இராமல் அனைவரும் அதை அறிந்து கொள்ளுகின்றனர். 2T 391, 392.CCh 634.1

    இரகசியமான பழக்கங்களை உடையவராயிருப்பது நிச்சயமாக உடலின் ஜீவசக்திகளை அழித்துப் போடுகிறது. அவசியமற்ற ஜீவசக்தியின் வெளிப்பாடு அவசியமில்லாத சோர்வைக் கொண்டு வரும். இளைஞரின் பெரும் மூலதனமாகிய மூளையின் திறன் இளம்பிராயத்திலேயே கடுமையான அழிவை அடைந்து, திறமைக் குறைவும் பெரும் சோர்வும் உண்டாகி, பல நோய்களுக்கு உடலை ஆளாக்குகின்றது. பதினைந்து பிராயத்திலிருந்தும் அதற்கு அப்பாலுமிருந்தும் இப்பழக்கம் அப்பியாசிக்கப்பட்டால், இயற்கை தான் அடைந்த அழிவையும், அடைந்து கொண்டிருக்கும் அழிவையும் குறித்து முறையிட்டு, உடலில் எண்ணிக்கையற்ற வேதனைகளையும், பல நோய்களையும், அதாவது பித்தீரல் நோய், நுரையீரல் நோய், நரம்பு வலி, வாதம், முதுகெலும்பு ஷயம் மூத்திரக் காய்களில் வியாதி, புற்று நோயினால் சதை வளர்தல், ஆகியவற்றைப் பிறப்பித்து, குறிப்பாக 30 முதல் 45 பிராயமட்டாக தன் பிரமாணங்களை மீறியதற்காக அவர்களைத் தண்டிக்கும். இயற்கையின் மிக மெல்லிய இயந்திரமானது உடைந்து, பிற அவயங்கள் அதிகக் கடினமான வேலை செய்ய விட்டுவிடப்படுகின்றன. இது இயற்கை செய்திருக்கும் நேர்த்தியான ஏற்பாட்டைக் கலைக்கின்றது. சில வேளைகளில் உடல் திடீரென்று தளர்ந்து விழுந்து போய், மரணமும் விளைகின்றது.CCh 634.2

    ஒருவர் தன்னுயிரை படிப்படியாக ஆனால் நிச்சயமாக அழிப்பதானது உடனடியாகத் தற்கொலை செய்து கொள்ளுவது போன்றே தெய்வ சந்தியில் பெரும்பாவமாகும். தவறு புரிவதால் திட்டமாகத் தங்களை கெடுத்துப் போடுகின்றவர்கள் அதற்குரிய தண்டனையை இவ்வுலகிலேயே பெறுவதுமன்றி, பூரணமான மனத்திரும்புதலை அடைந்தாலன்றி, கொலையாளியாகக் கருதப்பட்டு, பரலோகப் பிரவேசமும் அடையப்பெறார். தெய்வ சித்தம் ஒவ்வொரு செய்கைக்குமுரிய விளைவை உறுதிப்படுத்தியுள்ளது. CCh 635.1

    பலட்சயமாக இருக்கும் இளவயதினெரெல்லாம் தவறான பழக்கங்களும், குற்றங்களும் உடையவரென்று நாம் கூறுவதில்லை. சுத்த மனதும் மன சாட்சியின் உணர்வுமுடையவர்களாயிருந்து, தாங்கள் சம்பந்தமுடியவர்களாயிராத வெவ்வேறு காரணங்களினால் துன்பமடைகிறவர்களமுண்டு.CCh 635.2

    மேன்மையான தீர்மானத்தையும் வாஞ்சையுள்ள முயற்சியையும், ஆவிக்குரிய நற்குணத்தையும் உருவாக்குவதற்கு அவசியமான சித்த பலத்தையும் இரகசிய பாவம் அழித்துப் போடுகிறது. கிறிஸ்துவானவரின் சீஷர்கள் போன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகிற அனைவரும் தங்களுடைய இச்சைகளையும் சரீர சக்திகளையும் மனதின் திறனையும் அவருடைய சித்ததிற்கு முழுவதுமாக கீழடக்குவது கடமையென்றும், கிறிஸ்துவ இலட்சணம் யாதெண்ரும் உண்மையாக அறிவர். தங்களுடைய இச்சைகளைப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. தங்களுடைய சீர் கேடுடைய பழக்கங்களை விட்டு தீமைக்கெல்லாம் காரணனாகிய தங்கள் எஜமானின் ஊழியத்திற்கு அவர்கள் தங்களை ஒப்புவித்திருப்பதால் கிறிஸ்துவைச் சேவிக்க முடியாது. CG 444-446.CCh 635.3

    தங்களுடைய ஆவி பசுமையாயிருக்கையிலே தானே கேடுள்ள பழக்கங்களை அப்பியாசிக்கிறவர்கள் சரீர, மானத, சன்மார்க்க குணத்தைத் திருத்தமாகவும் பூரணமாகவும் அடைவதற்குரிய வல்லமையை ஒரு போதும் பெறமாட்டார்கள். 2T 351.CCh 636.1

    பாவப் பழக்கங்களைப் பயில்கிறவர்களின் ஒரே நம்பிக்கை அவற்றை விட்டுவிடுவதே. இவ்வுலகில் ஆரோக்கியத்தையும், பரலோகத்தில் இரட்சிப்பையும் பெற விரும்பினால் அவர்கள் இதைச் செய்வர். இந்தப் பழக்கங்களை பல வருடங்களாகப் பழகிவிட்டவர்கள் உறுதியான முயற்சியுடனே சோதனையை எதிர்த்துச் சீர் கேட்டை தொடர்ந்து செய்ய மறுக்க வேண்டியதாகும். CG 464.CCh 636.2

    கிறிஸ்துவானவரின் மந்தையில் சேர்க்கப்பட்டு, மெய்யான நல் மேய்ப்பனின் பாதுகாப்பினுள் அடங்கியிருக்க நாடுவதே நம்முடைய பிள்ளைகளை சகலவித பாவ பழக்கங்களினின்று தற்காக்கும் ஒரே நிச்சய பாதுகாப்பாகும். அவர்கள் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தால், அவர்களை எல்லா ஆபத்துகளிலுமிருந்து பாதுகாத்து, எல்லாத் தீமையினின்றும் விலக்கிக் காப்பார். “என்னுடைய ஆடுகள் என் சத்தத்துக்கு செவிகொடுத்து... என்னை பின் செல்லுகின்றது” என்று அவர் கூறுகிறார். கிறிஸ்துவிலே அவர்கள் மேய்ச்சலைக் கண்டடைந்து, பலத்தையும் நம்பிக்கையையும் பெற்று, அமர்ந்திருக்கக் கூடாததும், மனதை வழிவிலகச் செய்து இருதய திருப்தியை அழிப்பதுமான ஆசை இச்சை களினால் கலங்காதிருப்பார்கள். அதிக விலையேறப் பெற்ற முத்தை அவர்கள் கண்டுபிடித்தால் அவர்களுடைய மனது சமாதானமாகிய இளைப்பாறுதலை அடைந்திருக்கும். அவர்களுடைய இன்பங்கள் பரிசுத்தமும் சாந்தமும் உன்னதமும் பரலோக தன்மையும் உடையதாயிருக்கும். அவற்றினிமித்தம் பின்னால் அவர்கள் துக்கித்து, மன வேதனைப்பட வேண்டியதிராது. ஏனெனில் அவ்வின்பங்கள் உடலாரோக்கியத்தைக் கெடுத்து மனதைக் கீழ்ப்படுத்துவதாயிராமல், ஆரோக்கியத்திற்கு ஏற்றவைகளாக இருக்கும். CG. 467CCh 636.3