Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்த ஆவியின் வரமளிக்க தேவன் விரும்புகிறார்

    அனுபவம் முதிர்ந்த ஊழியர்கள் ஓரிடத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும்பொழுது, கர்த்தருக்கு வழிகளைத்திறக்கும்படி, தங்கள் சக்திகளோட்ய் வேலை செய்யும் ஒரு பொறுப்பு அங்குள்ள விசுவாசிகள் மேலிருக்கிறது. அவர்கள் தங்கள் இருதயங்களை ஜெபத்தோடு ஆராய்ந்து தேவனோடும், சகோதரரோடும் இசைந்து உழைக்க இடையூறாகவிருக்கும் சகல பாவத்தையும் அகற்றி ராஜ பாதையை செவ்வை பண்ண வேண்டும்.CCh 124.2

    இராத் தரிசனங்களில், தேவனுடைய ஜனங்கள் மத்தியில் நடக்கும் சீர்திருத்த இயக்கம் பற்றி காட்சிகள் எனக்கு காட்டப்பட்டது. அனேகர் தேவனைத் துதித்தனர். வியாதியஸ்தர் சுகமடைந்தனர். மற்றும் பல அற்புதங்கள் செய்யப்பட்டன. பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் செய்யப்பட்ட அதேவித்ய ஊக்கமான பரிந்து பேசும் ஆவி காணப்பட்டது. நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் விசுவாசிகள் குடும்பங்களைச் சந்தித்து, தேவ வசனத்தை மற்றவர்களுக்கு உபதேசிப்பதாகக் காணப்பட்டனர். பரிசுத்த ஆவியினால் இருதயங்கள் உணர்த்தப்பட்டு, மெய்யான மனந்திரும்புதல் கானப்பட்டது. சத்தியத்தைக் கூறியறிவிக்க எல்லா இடங்களிலும், கதவுகள் விரிவாய்த் திறக்கப்பட்டன. பரம செல்வாக்கினால் உலகமே பிரகாசமடைந்ததாகத் தென்பட்டது, உண்மையும், தாழ்மையுமுள்ள கடவுள் மக்கள் பேராசீர்வாதங்கள் அடைந்தனர். 1844-ல் காணப்பட்டது போன்ற சீர்திருத்தம் உண்டானது போலிருந்தது; துதியும், தோத்திரமும் செலுத்தும் சத்தங்களைக் கேட்டேன். 9T. 125, 126.CCh 124.3

    தேவன் தமது பிள்ளைகளுக்கு ஆவியின் வரத்தை அருளி, தமது அன்பினால் அவர்களைப் புதிதாக்க விரும்புகிறார். சபையில் பரிசுத்த ஆவியைப் பெறக்கூடா வரட்சியிருக்க அவசியமில்லை. கிறிஸ்துவின் பரமேறுதலுக்குப் பின் ஜெபித்து, விசுவாசித்து, காத்துக்கொண்டிருந்த சீஷர்கள் மேல் நிறைவோடும், வல்லமையோடும், பரிசுத்த ஆவி இறங்கினார். உலகம் கிருபையினால் நிரப்பப்பட வேண்டும். பரிசுத்த ஆவி மனித இருதயங்களில் கிரியை செய்து, தேவகாரியங்களை மனிதருக்கு எடுத்துக் காட்டுகிறார். 9T. 40.CCh 125.1

    அவரை உண்மையாய் விசுவாசிக்கிற ஓவ்வொருவருக்குள்ளும் பெரிய வேலை செய்ய கர்த்தர் சித்தமாயிருக்கிறார். சபை அங்கத்தினர் ஊழியத்தில் தங்களாலானதைச் செய்ய எழும்பி, தங்கள் சொந்த பொறுப்பில் போராடி, இயேசுவுக்காக ஆத்துமாக்களை ஆயத்தம் பண்ணுவதில் தாங்கள் எவ்வளவு செய்யக் கூடுமென உணர்ந்தால், அனேகர் சாத்தா னுடைய அணிகளை விட்டு, கிறிஸ்துவின் கொடியின் கீழ் வருவதை நாம் காணலாம். இந்த சுருக்கமான உபதேச வார்த்தைகளை நம் ஜனங்கள் கவனித்து நடப்பார்களாகில், (யோவா. 15:8) நிச்சயமாய் நாம் தேவனுடைய இரட்சிப்பைக் காண்போம். அதிசய எழுப்புதல்கள் தொடரும், பாவிகள் மனந்திரும்புவார்கள். அனேக ஆத்துமாக்கள் சபையில் கூட்டப்படுவார்கள். நமது இருதயங்களை கிறிஸ்துவோடு ஐக்கியப் படுத்தி நமது ஜீவியத்தை அவருடைய ஊழியத்தில் இசையச் செய்தால், பெந்தேகோஸ்தே நாளில் சீஷர்கள் மேல் ஆவி ஊற்றப்பட்டது போல் நம்மீதும் ஊற்றப்படும். 8T.246.CCh 125.2