Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உயரிய ஆவிக்குரிய தேர்ச்சிகளை அடையுங்கள்

    சுத்த இருதயத்திலெ பிறக்கும் அன்பு உயர்வான ஆவிக்குரிய தேர்ச்சிகளை அடைவதற்கும், தெய்வ காரியங்களை அறிந்துணருதற்கும் கூடும் முறையில் ஆத்துமாவை விரிவடையச் செய்கின்றது. அப்பொழுது பூரண தேர்ச்சிக்குக் குறைவான எதிலும் ஆத்துமா திருபதி கொள்ளாது. அனேக பேர்க் கிறிஸ்தவர்கள் திருப்தியளிக்காத அழிந்து போகும் இவ் வுலக இன்பங்களை அடைவதற்கு ஆவலும் வைராக்கியமும் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் முயற்சியைத் தெய்வ காரியங்களைப் பற்றின அறிவை அடைவதில் செலவிட்டால், தாங்கள் எத்தகைய ஆன்ப பலம் அடையக் கூடுமென்று உணராதிருக்கின்றனர். பேர்க் கிறிஸ்தவர்களாகிய பெருங் கூட்டம் ஆவிக்குரிய வளர்ச்சியில் குள்ளவரகளாக விருப்பதில் பரம திருப்தி அடைந்துள்ளனர். தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடி அடைவது அவர்களுடைய மனோ விருத்தியின் நோக்கம் அல்ல. எனவே தேவ பக்தியானது அவர்களுக்கு மறை பொருளாக இருக்கின்றது. அவர்கள் அதை அறிந்து கொள்ளக் கூடுவதில்லை. கர்த்தர் நல்லவர் என்பதை அவர்கள் ருசித்தறியவில்லை.CCh 495.1

    தங்களுடைய குறுகிய, முடமான ஆவிக்குரிய வளர்ச்சியிலும், தெய்வ காரியங்களைப் பற்றிய அத்தகைய அறிவிலும் பரம திருப்தி கொண்டுள்ளவர்கள் திடீரென்று பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு வினாடி நேரம் அங்கு நிலவும் உயரிய பரிசுத்தமான பூரணத்துவத்தையும், அன்பினால் நிறைந்திருக்கும் ஆத்துமாக்களையும், பேரின்பத்தினால் ஒளிவீசும் முகங்களையும் கண்டு, தெய்வத்தையும் ஆட்டுக்குட்டியானவரையும் துதிக்கும் இன்பமயமான இனிய சங்கீததத்தையும் கேட்டு, சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்தினின்றும், ஆட்டுக்குட்டியானவரிடத்தினின்றும் பரிசுத்தவான்களின் மேல் நீங்காமல் பிரகாசிக்கும் ஒளியின் மாட்சியையும் காணக்கூடுமானால், தாங்கள் இன்னமும் அடங்கவேண்டிய உயரிய பேரின்பம் உண்டென்று உணருவார்கள். கர்த்தரை இவர்கள் ருசித்தறியும் அளவின்படியே நித்தியமானது, உயரியதுமான இன்பங்களை அனுபவிப்பதற்குரிய அவர்களுடைய சக்தியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் வற்றாத மகிமையும், விவரிக்கவொண்ணாத சந்தோஷத்தின் ஊற்றுக்களிலுமிருந்து புதியதும் பெரியது மானவற்றை அடைந்து கொண்டேயிருப்பார்கள். ஆவிக்குரிய வளர்ச்சியில் குறுகியவர்கள் பரலோக வாசிகளுடனே சேர்ந்து, அவர்கள் பாடும் இசையில் இவர்களும் கலந்து கொண்டு, பரிசுத்தமும் மேன்மையும் பரவசப்படுத்துவதுமான தேவனும், ஆட்டுக்குட்டியுமானவர்களின் மகிமையைத் தாங்குவதர்குக் கூடுமோ? கூடவே கூடாது. பரலோக மொழியைப் பயிலுமாறு அவர்களுடைய தவணை காலம் வருடக்கணக்கில் நீடிக்கப்பட்டது. இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டிற்குத் தப்பி, திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகும்படி மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. 2 பேது. 1:4. ஆயினும் தங்கள் மனம், உடல் ஆகியவற்றின் சக்திகளைத் தங்களுக்குத் தோன்றியபடியே சுய நலமான அலுவல்களில் பயன்படுத்தினார்கள். கடவுளை முற்றுமாகச் சேவிப்பதைத் தங்கள் முழு அலுவலாகக் கொள்ள அவர்களால் கூடவில்லை. உலக முயற்சிகள் அவர்களுடைய பெருஞ் சக்திகளை ஆக்கிரமித்துக்கொண்டன. நிலையில்லாத நினைவுகளே கடவுளுக்கென்ற அர்ப்பணமாயின. பரிசுத்தமாயிருக்கிறவன் பரிசுத்தமாயிருக்கட்டும். அசுத்தமாயிருக்கிறவன் அசுத்தமாயிருக்கட்டும் என்று கூறியறிவிக்கும் முடிவான தீர்மானம் வெளியாகிய பிறகு அத்தகையோரின் மனம் புதிதாகக் கூடுமா?CCh 495.2

    ஆவிக்குரிய அப்பியாசங்களில் பூரிபடைவதற்கு மனதைப் பயிற்சி செய்தவர்களே மறு ரூபம்டையும், மறு ரூபமடையும் பொழுது பரலோகத்தின் தூய்மையினாலும், தாங்க முடியாத மகிமையினாலும் பாரம் அடையாதிருக்கவும் கூடும். கலைகளை நீங்கள் நன்கு பயின்றிருக்கலாம். சங்கீதக்கலை வல்லோனாகி, விஞ்ஞானத்தில் தேர்ச்சியடைந்து, எழுத்தாளனாக விளங்கலாம். நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தினால் உங்களுடைய உடன் ஊழியருக்கு உங்களிடத்தில் பிரியமுண்டாகலாம். ஆயினும் பரலோகம் செல்ல ஆயத்தமாவதற்கும் இக்காரியங்களில் நீங்கள் சேர்ந்திருப்பதற்கும் என்ன தொடர்புய் உண்டு? தேவனுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நீங்கள் நிற்பதற்கு இத்தேர்ச்சிகள் உங்களைத் தகுதியாக்குமா? 2T 266, 267.CCh 497.1