Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தகுதியான தீர்மானம் செய்வதற்கு ஜெபமும் வேத ஆராய்ச்சியும் வேண்டும்.

    திருமணம் கடவுள் ஏற்படுத்தியது. ஆதலால் அது ஒரு பரிசுத்த நியமம். அதில் ஒரு போதும் தன்னலச் சிந்தையுடன் பிரவேசித்தல் தகாது. இந்த வழியில் அடி எடுத்து வைக்க நினைப்போர் அதன் முக்கியத்தைப் பயபக்தியோடும், ஜெபசிந்தையோடும் கருத்தாய் ஆராய்ந்து பார்த்து, தாங்கள் செல்ல விரும்பும் வழி தெய்வசித்தத்திற்கு இசைந்ததோ இல்லையோ என்று அறியும்படி, அவரது ஆலோசனையத் தேடவேண்டும். இந்தக் காரியத்தைக் குறித்துத் தேவவசனத்தில் சொல்லியிருக்கிற போதனையைக் கவனித்து உணர வேண்டும். வேதவசனங்களில் தெரிவித்திருக்கிற கட்டளைகளுக்கு இணங்க ஆவலும் விருப்பமுமாக ஆராய்ந்து பண்ணிய திருமணத்தை ஆண்டவர் உவமையுடன் கண்ணோக்குகின்றார்.CCh 350.3

    அமர்ந்த பகுத்தறிவோடும், ஆத்திரப்படாத நிதானத்தோடும், கருத்தாய் ஆராய்ந்து பார்க்க வேண்டிய காரியம் யாதாவது உண்டானால், அது விவாக காரியமே. எப்பொழுதாவது வேதாகமம் அறிவுரை கூறுகிறதற்கு அவசியமுள்ள தருணம் உண்டானால் அது தம்பதிகளை வாழ் நாள் முழுவதும் ஒன்றாகச் சேர்த்துக் கட்ட முயற்சி செய்கிறதற்கு முந்திய தருணமே. ஆனாலும் இக்காலத்தில் மக்கள் நடுவே பரவி வருகின்ற கருத்து யாதெனில், இந்தக் காரியத்தில் உணர்ச்சியே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது. மிகபெரும்பான்மையோர் காரியங்களில், காதல் நோயின் உணர்ச்சிக் கோட்பாடே அவர்கள் மரக்கலத்தில் சுக்கானைப் பிடித்து, அழிவிற்கு நடத்திக் கொண்டு போகின்றது. இங்கேதான் வாலிபர் மற்ற எந்தக் காரியத்தைப் பார்க்கிலும் குறைந்த அறிவு உடையவர்கள். ஆனால் இங்கேதான் அவர்கள் நியாய வாதத்தைக் கேளாமல் மறுக்கின்றார்கள். திருமணப் பிரச்சினை மந்திரசக்தி போல் அவர்களை மயக்கி மேற் கொண்டிருக்கின்றத் என்று தோன்றுகின்றது. அவர்கள் கடவுளுக்கு அடங்கி கீழ்ப்படிகிறதில்லை. அவர்களுடைய பொறிபுலன்கள் கட்டுண்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் திட்டங்களில் எவரேனும் தலையிட்டு விடுவார்களோ என்று அஞ்சுவது போல், மறைவிடங்களில் அலைந்து திரிகின்றனர்.CCh 351.1

    பலர் அபாயமுள்ள துறைமுகத்தில் கப்பலோட்டுகின்றனர். அவர்களுக்கு மாலுமி அவசியம்; எனினும் தங்களுக்கு மிகவும் அவசியமான உதவியை ஏற்றுக்கொள்ளாமல் இகழுகின்றார்கள். தங்கள் தோணியைத் தாங்களே நடத்திக்கொள்ளத் தங்களுக்குத் திறமையுண்டு என்பது அவர்கள் நினைப்பு. மறைந்திருக்கின்ற பாறையில் மோதி, தங்கள் திடநம்பிக்கையும் மகிழ்ச்சியுமாகிய மரக்கலத்திற்குச் சேதமுண்டாக்கு மென்பதை அவர்கள் உணரார். அவர்கள் வசனத்தைக் (வேதாகமத்தை) கருத்தாய் ஆராய்கின்ற மாணக்கராய் இருந்தால் அல்லாமல், கடுந்துயரம் விளைக்கும் பெருந்தவறு செய்வார்கள். அதனால் இம்மை மறுமை வாழ்க்கை இரண்டிலும் தங்கள் இன்பநலத்திர்கும், பிறர் நலத்திற்கும் பெருந்தடை குறுக்கிடும்.CCh 351.2

    ஆடவரும் மகளீரும் பரிசுத்த விவாகத்தைக் குறித்து சிந்திப்பதற்கு முன்னே, நாள் தோறும் இரண்டு தடவை ஜெபிக்கிற வழக்கமுடையவர்களாயிருந்தால், அதற்காக முயற்சி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்க்கிற பொழுது, நான்கு தடவை ஜெபிக்க வேண்டும். திருமணம் இம்மையிலும் மறுமையிலும் நம் வாழ்க்கையில் செல்வாக்குப் பெற்று, அதில் மாறுதல் விளைக்கும் ஒருவகைக் காரியம்.CCh 352.1

    நம் காலத்தில் நடைபெறுகின்ற பெருமான்மை விவாகங்களும், அவற்றை நடத்துகின்ற முறையும், கடைசி கால அடையாலங்களில் ஒன்று. ஆடவரும் மகளீரும் கடவுளைப் புறக்கணித்துத் தள்ளி விட்டு மணம் செய்து கொள்வதில் உறுதியும் முரட்டுப் பிடிவாதமும் உடையவர்களாய் இருக்கின்றார்கள். பயபக்தியும் முக்கியமுமான இந்தக் காரியத்தில் சமய நெறிக்கு இடம் இல்லை என்பது போல், அதை ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.CCh 352.2