Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆயத்த நியமம்

    இது சாக்கிரமெந்து ஆராதனைக்காக கிறிஸ்து நியமித்த ஆயத்த நியமம். தலைமைப் பதவி அடைவதற்காக உள்ளத்தில் மேட்டிமையையும், மாறுபாட்டையும், சண்டையையும் பேணி வைத்திருக்கும் பொழுது, இருதயம் கிறிஸ்துவுடன் ஐக்கியத்திற்குள் பிரவேசிக்க முடியாது. அவருடைய சரீரம் இரத்தம் இவற்றின் ஐக்கியத்தைப் பெற்றுக்கொள்ள நமக்கு ஆயத்தம் இல்லை. அதனால் தமது தாழ்மையின் ஞாபகத்தை முதன் முதல் ஆசரிக்கும்படி இயேசு அதை நியமித்தார்.CCh 336.2

    கடவுள் மக்கள் இந்த நியமித்திற்காக வந்திருக்கும் பொழுது, ஜீவனுக்கும், மகிமைக்கும், அதிபதியாய் இருக்கின்றவருடைய திருவாய் மொழிகளைத் தங்கள் ஞாபாத்திற்கு கொண்டு வரவேண்டும்:----------நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருகிறீர்களா? நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். ஆண்டவரும் போதகரும் ஆகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவன் அல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவன் அல்ல, நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள். (யோவான் 13:12-17).CCh 337.1

    மனிதனுக்குள்ளே தன் சகோதரர் அனைவரிலும் தன்னையே உயர்வாக மதித்து, தனக்காகவே அலுவல் செய்து தனக்கு உயர் பதவியை தேடுகின்ற ஒரு வகை மன நிலைமை இருக்கின்றது. அதன் பலன் பெரும்பாலும் தீமையைப் பிணைக்கும் குணமும் கசப்பின் ஆவியுமே. கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு முந்திய நியமம், மனிதனை தன்னலத்தை விட்டு வெளியேற்றி, தற்புகழ்ச்சியாகிய பொய்க் குதிரையிலிருந்து இறங்கப்பண்ணி; தங்கள் சகோதரருக்குத் தொண்டு செய்யும்படி வழி நடத்துகின்ற மனத்தாழ்மைக்குக் கொண்டு வந்து, இத்தகைய தவறான கருத்துக்களை நீக்கி வைப்பதே.CCh 337.2

    பரலோகத்திலிருந்து பரிசுத்த காவலாளர் இறங்கி வந்து அந்த நல்ல தருணம் ஒவ்வொருவரும் ஆத்தும பரிசோதனை பண்ணவும், பாவத்தை உணரவும், பாவ மன்னிப்பின் நிச்சய மாகிய ஆசீர்வாதத்தைப் பெற்றிக்கொள்ளவும் பயன் படுமாறு செய்கின்றார். கிறிஸ்து தமது கிருபையின் நிறைவுடன் அங்கே பிரசன்னமாகி, தன்னலமாகிய வாய்க்கால்களில் ஓடுகின்ற சிந்தனைகளாகிய நீரோட்டங்களைத் திருப்பி விடுகிறார். பரிசுத்த ஆவியானவர் தங்கள் ஆண்டவருடைய மாதிரியைப் பின்பற்றுவோர் உணர்ச்சிகளை உயிர்ப்பிக்கின்றார். நம் இரட்சகர் நமக்கு உணர்த்திய தாழ்மையை நினைவு கூரும் பொழுது, சிந்தனையோடு சிந்தனை சங்கிலித் தொடர் போல் வந்து இணைந்து, கடவுள் நமக்குச் செய்திருக்கிற மகா பெரிய நன்மையும், பூலோக நணபர்களின் தயவும், உருக்கமும் எல்லாம், உள்ளத்தில் காட்சி அளிக்கின்றன்.CCh 337.3

    இந்த நியமம் தகுதியான முறையாய் ஆசரிக்கப்படும் பொழுதெல்லாம், கடவுள் மக்கள் பரிசுத்த உறவு முறையில் வந்து, உட்படுகின்றார்கள். இது ஒருவருக்கொருவர் செய்யும் ஊழியமாக மட்டும் நில்லாமல், அவர்கள் உழைப்பின் பிரதேசம் அவர்கள் தலைவருடைய பிரதேசம் போல் விரிவடைகின்றது. நம் ஊழியம் தேவைப்பட்டோர் உலக முழுவதும் நிறைந்திருக்கின்றனர். ஏழைகளும், திக்கற்றவர்களும், அறிவில்லாத மக்களும் எப்பக்கமும் இருக்கின்றார்கள். கிறிஸ்துவுடனே மேல் வீட்டு அறையில்ல் ஐக்கியப்பட்டோர் அவர் செய்தது போல் ஊழியஞ் செய்யப் புறப்பட்டுப் போவார்கள்.CCh 338.1

    எல்லாராலும் சேவை செய்யப்பட்ட இயேசு எல்லாருக்கும் சேவை செய்ய வந்தார். அவர் எல்லாருக்கும் சேவை செய்தபடியால், மறுபடியும் எல்லாரும் அவருக்கு சேவை செய்து, அவரைக் கனம் பண்ணுவார்கள். அவர்கள் அவரது தெய்வ சுவாவத்தில் பங்கு பெற்று, ஆத்துமாக்கள் மீட்கப் படுவதைக் கண்டு மகிழும் மகிழ்ச்சியை அவரோடு பகிர்ந்து அனுபவித்து, தன்னலமற்ற சேவையின் அவரது மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.CCh 338.2