Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தேவனுடைய ஜீவன் நம்மில் இருப்பதொன்றே நமது நம்பிக்கை

    வேதாகமத்தில் போதிக்கப்படுகின்ற மார்க்கம் சரீரத்தின் ஆரோக்கியத்திற்கோ மனதின் ஆரோக்கியத்திற்கோ கேடானதல்ல. தேவ ஆவியின் செல்வாக்கே சரீர, மனோ வியாதிகளுக்கு மிக நல்ல ஒளடதம். பரலோகம் முற்றும் ஆரோக்கியமானதே. பரலோக சக்திகள் எவ்வளவு அதிகமாக உணரப்படுகிறதோ அவ்வளவாக விசுவாசிக்கிற பிணியாளி குணமைகின்றன. கிறிஸ்து மார்க்கத்தின் மெய்யான இலட்சியங்கள் அனைவர் முன்பாகவும் அளவிறந்த சந்தோஷத்தின் ஊற்றென்று பாய்ந்தோடச் செய்யும். மார்க்கமானது வற்றாத ஊற்றுகவிருக்கின்றது. தேவையான பொழுதெல்லாம் கிறிஸ்தவன் அதில் அள்ளிப் பருகலாம். அது குறையாது.CCh 567.1

    மனநிலை சரீரத்தின் ஆரோக்கியத்திப் பாதிக்கின்றது. நன்மை செய்கிறதும் பிறருக்குச் சந்தோஷத்தை அளிக்கிறதுமான உணர்வுகளால், மனதில் பளுவில்லாமல், அதில் ஆனந்தம் குடிகொள்ளும் பொழுது, அதினால் உண்டாகும் பூரிப்பு உடல் முழுவதும் பரவி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, உடல் முழுவதையும் நலமடையச் செய்கின்றது. தேவ ஆசீர்வாதம் ஆரோக்கியமளிக்கும் வல்லமையே. பிறருக்கு நன்மையளிக்கும் விதமாக அதில் வளமடைந்தவர்கள் இருதயத்தில் வாழ்விலும் அவ்வதிசய ஆசிர்வாதத்தை அறிந்துணருவார்கள்.CCh 567.2

    தவறான வழக்கங்களிலும் பாவமுள்ள பழக்கங்களிலும் ஈடுபாடுடையவர்களாகவிருந்த மனிதர் தெய்வ சத்தியத்தின் வல்லமைக்குத் தங்களை ஒப்புவிக்கிற பொழுது, சத்தியமானது இருதயத்திலே கிரியை செய்து, திமிர் பிடித்ததாகக் காணப்படுகின்ற சன்மார்க்க சக்திகளைப் புதுப்பிக்கின்றது. அதைப் பெறுகின்றவன் தன் ஆத்துமாவை நித்திய கன்மலையின் மேல் இறுகப் பிணிப்பதற்கு முன்பு தனக்கு இருந்தைப் பார்க்கிலும் பலம் பொருந்தியதும் தெளிவுடையதுமான அறிவை அடையப் பெறுக்கின்றான். கிறிஸ்துவில் தனக்குப் பாதுகாப்பு உண்டென்ற உணர்வினால் அவனுடைய சரீர ஆரோக்கியம் அபிவிருத்தி அடைகின்றது. CH 28.CCh 567.3

    மனிதர் கிறிஸ்துவின் கிருபையை அடையப்பெறும் பொழுதே கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்களை முழுநிறைவுடன் அடைய்வர் என்றுணர வேண்டும். அவருடைய கிருபையே தெய்வ கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு மனிதனுக்கு வல்லமையை அளிக்கின்றது. தீய வழக்கமாகிய அடிமைத் தனத்தை அகற்றுவதற்கு இதுவே பலமளிக்கின்றது. இது ஒன்றே அவனுடைய குணத்தை உருவாக்கிச் செவ்வையான பாதையில் அவனை நிலைப்படுத்துகின்றது. சுவிசேஷத்தை அதின் தூய்மையுடனும் வல்லமையுடனும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, பாவத்தில் உற்பவமான நோய்கள் அனைத்திற்கும் அது மாற்றாக விளங்கும். தம்முடைய செட்டைகளிலே ஆரோக்கியமுடையவராக நீதியின் சூரியன் எழும்புகிறார். இவ்வுலகம் அளிக்கக்கூடிய யாவும் ஓர் உடைந்த இருதயத்தை சொஸ்தமாக்கவோ அதற்கு மனச் சமாதானத்தை அளிக்கவோ, மன கவலையை அகற்றவோ பிணியைப் பரிகரிக்கவோ கூடாது. புகழ், சிறந்த திறமை, தாலந்து அனைத்தும் துக்கமுள்ள இருதயத்தை சந்தோஷிப்பிக்கவோ பாழாகிய வாழ்வைப் புதுப்பிக்கவோ கூடாது. தேவனுடைய ஜீவன் நம்மில் இருப்பதொன்றே நமது நம்பிக்கை.CCh 568.1

    கிறிஸ்துவானவர் நம்மில் வியாபிக்கச் செய்கின்ற அன்பு ஜீவன் நிறைந்தது. மூளை, இருதயம், நரம்புகள் ஆகிய ஜீவன் மிகுந்த உறுப்புக்கள் அனைத்தையும் அது சொஸ்தம் செய்கின்றது. அதினால் உடலின் வலிமை வாய்ந்த சக்திகள் வேலை செய்யுமாறு இயக்கப்படுகின்றன. அது ஆத்துமாவை ஜீவ சக்திகளை ஒடுக்கிப் போடுகின்ற குற்றவுணர்வினின்றும் துக்கத்தினின்றும் மன சஞ்சலத்தினின்றும் விடுவிக்கின்றன. அத்துடனே கலங்காத சிந்தையும் அமைவும் தோன்றிவிடுகிறது. பூமிக்குரிய யாதொன்றும் அழித்துப்போடமுடியாத சந்தோஷத்தை, ஆரோக்கியமும் ஜீவனும் அளிக்கும் ஆனந்தத்தை ஆத்துமா பெறுகின்றது.CCh 568.2

    வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே; நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறும் நமது இரட்சகரின் வார்த்தைகள் நமது சரீர, ஆத்தும, மனோவியாதிகௗக்கு மருந்தாகும். மனிதர் தங்களுடைய தவறான செய்கைகளினால் தங்கள் பேரில் துன்பத்தைச் சுமத்தின்க்கொண்டு விட்ட போதிலும், அவர் அவர்களைப் பரிதாயத்துடனே கடாட்சிக்கின்றார். அவர்கள் அவரிடத்திலே ஒத்தாசையைக் கண்டடையலாம். அவர் பேரில் நம்பிக்கையாயிருக்கிறவர்களுக்கு அவர் பெரிய காரியங்களைச் செய்வார். MH 115.CCh 569.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents