Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாட்சியாகமங்களை அறியாதிருத்தல் சாக்குப்போக்காகாது

    தெய்வம் தந்தருளிய ஒளி, ஜாக்கிரதைப் படுத்தும் ஞானம், கடிந்து கொள்ளுதல், சீர்திருத்தல், எச்சரிப்புகள் ஆகியவை அடங்கியுள்ள புத்தகங்களைப் படிக்காததால், தெய்வ மக்களுக்கு அருளப்பட்ட ஒளிக்கு நேர் மாறான வழியில் அனேகர் செல்லுகின்றனர். உலகக்கவலை, நவநாகரீக மோகம், மார்க்கப் பற்றின்மையாவும் கடவுள் கிருபையாகத் தந்தருளிய ஒளியினின்று மக்கள் மனதை அகற்றியிருக்க, தவறுகள், அசத்தியமுமடங்கிய புஸ்தகங்களும், பத்திரிகைகளும் தேசமெங்கும் செல்லுகின்றன.....சந்தேகமும் அவிசுவாசமும் எங்கும் பெருகுகின்றன. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து புறப்பட்ட பெரும் ஒளி மரக்காலும் கீழ் மறைத்து வைக்கபடுகின்றது. இவ்விதமான அசிரத்தை குறித்து தெய்வம் தமது மக்களை உத்திரவாதிகளாக்குகிறார். நமது பாதையில் பிரகாசிக்கத்தக்கதாக் அவர் அருளிய ஒளிக்கதில் ஒவ்வொன்றையும் குறித்து, தெய்வ காரியங்களில் அவற்றைப் பயன்படுத்தினேமோ, அன்றி அவற்றைத்தள்ளி, நம்முடைய மனச்சார்பின்படியே நடந்தோமோவென்று அவருக்கு நாம் கணக்கொப்புவிக்க வேண்டும்.CCh 281.1

    ஓய்வுநாள் ஆசரிக்கும் ஒவ்வொரு வீட்டாரும் சாட்சியாக மங்கள் கிடைக்கப் பெற்று, அவற்றின் மதிப்பை அறிந்து, அவற்றை வாசிக்குமாறு சகோதரர்கள் தூண்ட வேண்டும். இவற்றைச் சிறிய எண்ணிக்கையில் வெளியிட்டு ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரே ஒரு தொகுப்பு வைத்திருப்பது ஞானமற்ற ஒழுங்கு. ஒவ்வொரு வீட்டாரும் மறுபடியும் மறுபடியும் அவற்றை வாசிப்பதற்குக் கூடுமான வகையில் அந்தந்த குடும்ப நூல் நிலையத்தில் இவை இருக்க வேண்டும். பலரும் எடுத்து வாசிக்கக்கூடிய விதத்தில் அவைகளை வைக்கப்படுவதாக். 5T. 681.CCh 281.2

    எச்சரிபையும், ஊக்கத்தையும், கடிந்துகொள்ளுதலையும் உடைய இந்த சாட்சியாகமங்களின் பேரில் தெய்வ மக்கள் அவிசுவாசம் கொண்டிருப்பதால், அவர்கள் ஒளியைக் காணாதிருக்கின்றனர் என்று நான் கண்டேன். அவிசுவாசம் அவர்கள் கண்களை மூடியிருப்பதால் தங்கள் நிலையை உள்ள படியே அவர்கள் உணராதிருக்கின்றனர். கடிந்து கொள்ளுதலாக வெளிப்பட்டிருக்கும் தேவ ஆவியின் சாட்சியின் வசனங்கள் அவசியமல்லவென்றும், தங்களை அவை சுட்டிக் காட்டவில்லை என்றும் எண்ணுகின்றனர். இவ்வாறு எண்ணுகிறவர்களுக்கே மிகுந்த தேவக் கிருபையும் ஆவிக்குரிய பகுத்தறிவும் அவசியமாகின்றது. இவை அவர்களுக்கு இருந்தால் ஆவிக்குரிய ஞானத்தில் தாங்கள் சூன்யமாக இருப்பதை உணருவார்கள்.CCh 282.1

    த்தியத்தின்று பின்வாங்கி இருக்கின்ற அனேகர் தங்களுக்கு சாட்சியாகமங்களில் நம்பிக்கையில்லாதிருப்பதே தாங்கள் சத்தியத்தை விட்டு விலகியதற்கான காரணமென்று கூறுகின்றார்கள். கடவுள் கண்டனம் செய்கின்ற தங்கள் விக்கிரகத்தை அவர்கள் விட்டுவிடுவார்களா? அன்றி அவர்களுடைய தவறான இச்சையைத்தொடர்ந்து அவர்கள் செய்வதற்கு நாட்டங்கொள்ளும் காரியங்களைக் கடிந்துரைக்கும் கடவு ஒளியைத்தள்ளி விடுவார்களா? என்பதே கேள்வியாகும். என்னுடைய பாவங்களைக் கடிந்துரைக்கும் சாட்சியாகமங்களைப் பெற்றுக் கொள்ளுவதற் கென்று நான் என்னை வெறுப்பதா? அன்றி என்னுடைய பாவங்கள் கடிந்து கொள்ளப்படுவதால் நான் சாட்சியின் வார்த்தைகளைத் தள்ளிவிடுவதா? இதுதான் அவர்கள் தங்களுக்குள்ளே தீர்த்துக் கொள்ளும் பிரச்சினையாகும். 5T. 674, 675.CCh 282.2