Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    புதிய தம்பதிகளுக்கு அறிவுரை

    எனக்கு அருமையான சகோதரனே, சகோதரியே, நீங்கள் ஆயுள் கால உடன்படிக்கையினால் இணைக்கப் பெற்றிருக்கின்றீர்கள். உங்கள் மண வாழ்க்கையின் கல்வி தொடங்கியுள்ளது. மண வாழ்க்கையின் முதல் ஆண்டு அனுபவ சோதனை ஆண்டு. அந்த ஆண்டில் சிறு குழந்தை பள்ளியில் பாடங்கள் படிக்கிறது போல, கணவனும் மனைவியும் ஒருவர் அடுத்தவர் குணத்தின் வெவ்வேறு தனித்தன்மைகளைப் படிக்கின்றார்கள். இதில், உங்கள் மண வாழ்க்கையின் முதல் ஆண்டில், உங்கள் எதிர் கால சந்தோஷத்தைக் கறைப்படுத்தும் எந்த அத்தியாங்களும் காணப்பட வேண்டாம்.CCh 375.3

    மனவுறவின் தன்மையைப் பகுத்தறியும் அறிவைப் பெறுவதே ஆயுள்கால அலுவல். மணஞ்செய்து கொள்ளு கிறவர்கள் இம்மையில் ஒருகாலும் கல்விப் பட்டம் பெறக்கூடாத கலைக்கூடத்தில் பிரவேசிக்கின்றார்கள். என் சகோதரனே, உன் மனைவியின் காலமும், பலமும், இன்பமும் உன்னுடன் பிணைக்கப்படுகின்றன. அவன் மேலுள்ள உன் செல்வாக்கு வாழ்க்கைக்கு ஜீவ வாசனையோ மரண வாசனையோ ஆகலாம். அவன் வாழ்க்கையைக் கெடுத்துப் போடாதபடி மிகவும் கருத்துடையவனாய் இரு.CCh 375.4

    என் சகோதரியே, நீ இப்பொழுது தான் மண வாழ்க்கையின் பொறுப்புகளைப் பற்றிய உன் முதல் அனுபவ பாடங்களைப் படிக்கப் போகின்றாய். நீ ஒவ்வொரு நாளும் இந்தப் பாடங்களை உண்மையாகப் படித்துக்கொள்ள உறுதி உள்ளவளாய் இரு. அதிருப்திக்கு, மனத் தடுமாற்றத்திற்கும் இடங்கொடாதே. சுக போகமும் சோம்பலுமுள்ள வாழ்க்கைக்கு ஆசைப்படாதே, தன்னலத்திற்கு இடங்கொடாமல் எப்பொழுதும் உன்னைக் காப்பாற்றிக்கொள்.CCh 376.1

    உங்கள் வாழ்க்கைக் கூட்டுறவில் உங்கள் ஆசாபாசங்கள் ஒருவருடைய அடுத்தவர் மகிழ்ச்சிக்கு ஏதுவாவனைகளாய் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சிக்காகப் பணி புரிதல் வேண்டும். உங்களைக் குறித்து கடவுள் சித்தம் இதுவே. நீங்கள் இருவரும் ஒருவரைக் கலந்து வாழும் பொழுது, அவரவர் தம் தம் தனி தன்மையை அடுத்தவரால் இழந்து போகக்கூடாது. உங்கள் தனி தன்மைக்கு உரிமையாளர் கடவுளே. அவரிடத்தில் நீங்கள்; எது தகுதி? எது தவறு? நீர் என்னைப் படைத்த நோக்கத்தை நான் உத்தமமாய் 0நிறைவேற்றுவது அல்ல; கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்கள். ஆகையால் தேவனுக்குடைய வகைளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும், தேவனை மகிமைப் படுத்துங்கள். (1 கொரிந்தியர் 6:19, 20) மனிதத் தன்மைக்குரிய உங்கள் அன்புக் கடவுள் மேலுள்ள உங்கள் அன்பிற்கு இரண்டாம் தரமுள்ளதகவே இருக்க வேண்டும். உங்கள் பற்றுறுதி என்னும் பெருஞ் செல்வம் உங்களுக்காகத் தமது உயிரைக் கொடுத்தவரிடம் பெருகி யோட வேண்டும். கடவுளுக்கென்று வாழ்க்கை நடத்துவதினால் ஆத்துமா தன் உத்தமும் உன்னதமுமான ஆசாபாசங்களை அவரிடம் செலுத்துகின்றது, உங்கள் மாபெரும் அன்பு வெள்ளம் உங்களுக்காக மரித்தவரிடம் கரை புரண்டு ஓடுகின்றதோ? அப்படியானால் உங்களில் ஒருவர் மேலோருவருக்கு இருக்கிற அன்பு பரலோக ஒழுங்கைப் பின்பற்றி இருக்கும்.CCh 376.2

    உங்கள் பாசம் பளிங்குமேல் தெளிவாகவும் அதன் அழகு புனிதமாகவும் இருந்தாலும், அது பரீட்சிக்கப்படாததினால் ஆழமில்லாதிருக்கலாம். கிறிஸ்துவையே எல்லாக் காரியத்திலும் ஆதியும், அந்தமும், முதன்மையும், ஆக்கிக்கொள்ளுங்கள். இடைவிடாமல் அவரையே நோக்கிப் பாருங்கள். அப்படியானால் அவர்மீதுள்ள உங்கள் அன்பு பரீட்சைக்கும் பரிசோதனைக்கு உட்படுவதினால் நாள்தோறும் முன்னிலும் ஆழமும் உறுதியும் அடையும். அவர்மீதுள்ள உங்கள் அன்பு பெருகும் பொழுது, உங்களில் ஒருவர் மேலொருவருக்குள்ள அன்பு முன்னிலும் ஆழமும் உறுதியுமாய் வளரும். நாம் எல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, மகிமையின் மேல் மகிமை அடைந்து மறு ரூபப் படுகிறோம் (11 கொரிந்தியர் 3:18) திருமணத்திற்கு முன் செய்யாத கடமைகளை நீ இப்பொழுது செய்ய வேண்டியிருக்கிறது; ஆதலால் தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12) கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்தது போல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள் (எபேசியர் 5:2) பின்வரும் போதனையைக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்:-- மனைவிகளே கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாய் இருக்கிறதுபோல புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான்... ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்பு கூறுங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்பு கூர்ந்து ... தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் (எபேசியர் 5:22-27).CCh 377.1

    திருமணம் வாழ்நாள் முழுவதிற்குமுள்ள ஐக்கியம்; அது கிறிஸ்துவுக்குக் அவருடைய சபைக்கும் உள்ள ஐக்கியத்திற்கு அடையாளம். கிறிஸ்து சபைக்குக் காண்பிக்கிறது சிந்தையே கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் காண்பிக்கின்ற சிந்தையாய் இருக்க வேண்டும்.CCh 378.1

    கணவனாவது மனைவியாவது அதிகாரம் பண்ணுகிறதற்காக வழக்குப் பேசலாகாது. இந்தக் காரியத்தில் வழி நடத்துகிறதற்கு ஆண்டவர் கொள்கை வகுத்திருக்கின்றார். கிறிஸ்து சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறது போல், கணவன் தன் மனைவியைப் போஷித்துக் காப்பாற்ற வேண்டும்; மனைவியும் தன் கணவனை கனம் பண்ணவும் நேசிக்கவும் வேண்டும், தம்பதிகள் ஒருவரையொருவர் வருத்தப்படுத்திக் தீங்கு செய்ய வேண்டுமென்று தீர்மானம் பண்ணாமல் தயவுள்ள சிந்தையைப் பண்படுத்த வேண்டும்.CCh 378.2

    என் சகோதரனே, என் சகோதரியே, உங்கள் இருவருக்கும் உறுதியான மன வலிமை யுண்டு. நீங்கள் இந்த வலிமையை உங்களுக்கும், உங்களோடு பழகுகின்ற மக்களுக்கும், பெரிய ஆசீர்வாதமோ, அல்லது பெரிய சாபமோ ஆக்கிக் கொள்ளலாம். நீங்கள் விரும்புகின்ற வண்ணமே பிறர் எவரும் செய்ய வேண்டுமென்று காட்டாயப்படுத்த முயலாதிருங்கள். நீங்கள் இப்படிச் செய்து, ஒருவர் மேலொருவர் கொண்ட அன்பை நிலை நிறுத்த முடியாது. தன் விருப்பத்தையே பெரிதாகப் பாராட்டுவதனால், வீட்டில் சமாதானமும் சந்தோஷமும் ஒழிந்துபோம் உங்கள் திருமண வாழ்க்கை எதிர்த்துப் போராடுகின்ற வாழ்க்கையாய் இருக்க வேண்டாம். நீங்கள் அவரவர் விருப்பதின்படியே செய்தால், இருவரும் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. அவரவர் விருப்பத்தை விட்டு விட்டு, அன்புள்ள பேச்சும் அமைதியுள்ள செய்கையும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் வார்த்தைகளைக் குறித்து மிகவும் விழிப்பாய் இருங்கள். அவை நன்மையோ, அல்லது தீமையோ செய்வதற்கு, வலிய செல்வாக்குடையவை. உங்கள் குரலில் கடுமை தோன்ற இடங்கொடாதேயுங்கள். உங்கள் ஐக்கிய வாழ்க்கையில் கிறிஸ்துவின் நறுமணம் கமழ வேண்டும்.CCh 378.3

    ஒருவர் விவாக சம்பந்தம் போன்ற ஐக்கியத்தில் பிரவேசிக்கு முன்னமே, அவர் தம்மை அடக்கி நடத்துவது எப்படி என்றும், பிறருடன் நடந்துகொள்வது எப்படி என்றும் கற்றுக் கொள்ள வேண்டும்.CCh 379.1

    என் சகோதரனே, தயவும், பொறுமையும், சாந்தமுமாய் இரு. உன் மனைவி உன்னைக் கணவன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான்; நீ தன் மேல் அதிகாரம் செலுத்துவதற்கு அவள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் நீ அவளுக்கு உதவியாளனாய் இரு. ஒரு போதும் வீறாப்புக் காட்டிச் சர்வாதிகாரம் பண்ணாதே. நீ எதை விரும்புகிறாயோ அதையே உன் மனைவியும் விரும்ப வேண்டுமென்று அவளைக் கட்டாயப்படுத்துகிறதற்காக உன் பெரிய மன வலிமையைப் பிரயோகம் பண்ணாதே. அவளுக்கும் மன சித்தம் இருக்கிறதென்றும், நீ உன் மனப் போக்கின்படி அவள் செய்ய விரும்புகிறது போலவே அவளும் தன் மனப் போக்கின்படி நீ செய்ய விரும்புவான் என்றும், மனத்தில் வைத்துக் கொள். அவளுக்கு இருக்கிறதைக் காட்டிலும் விரிவான அனுபவம் உனக்கு அனுகூலமாய் இருக்கிறதென்பதையும் நினைத்துக்கொள். அவள் கருத்தை மதித்து அவளை மரியாதையாக நடத்து. பரத்திலிருந்து வருகிற ஞானம் முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற் கனிகளாலும் நிறைந்ததாயும், பட்ச பாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது. (யாக் கோபு 3:17).CCh 379.2

    என் அருமைச் சகோதரனே, சகோதரியே, கடவுள் அன்பாகவே இருக்கின்றார் என்றும் நீங்கள் திருமண உடன்படிக்கையில் நடந்துகொள்ள வாக்களித்த வண்ணம், அவருடைய கிருபையினால் ஒருவருக்கொருவர் மன மகிழ்ச்சி உண்டாகும்படி நடந்து கொள்வதில் சித்தி பெறக்கூடும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நம் மீட்பருடைய உதவியினால் நீங்கள் எந்தக் கோணலான வாழ்க்கையையும் கடவுளுக்குள் நேர்மையாக்கிக் கொள்ளும்படி, ஞானமும் வல்லமையும் பெற்று நடந்து கொள்ளக்கூடும். கிறிஸ்துவினால் செய்யக்கூடாதது எது? அவர் ஞானத்திலும், நீதியிலும், அன்பிலும், பரிபூரணமுள்ளவர். உங்கள் ஆர்வம் அனைத்தையும் நீங்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் பொழிவதினால் திருப்தி அடைந்து, உங்களை உங்களுக்குள்ளே தானே அடைத்து வைத்துக்கொள்ளாதேயுங்கள். உங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி, உங்கள் ஆர்வத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்வதில், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளுங்கள். பட்சமுள்ள வார்த்தையும், அனுதாபமுள்ள பார்வையும், ஊக்கம் உண்டாக்கும் பேச்சும், வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னக் தனிமையாய்ச் சிக்குண்டவர் பலருக்கு, தாகமுள்ள ஆத்துமாவுக்கு ஒரு கலசம் தண்ணீர் கிடைப்பது போல் நன்மை அளிக்கும். மகிழ்ச்சி தரும் வார்த்தையும் பட்சமுள்ள செயலும், தளர்ந்த தோளின் மேல் தாங்க முடியாத சுமையை சுமந்து கொண்டு போகின்ற மக்களுக்கு எவ்வளவோ இலகுவும் ஊக்கமும் தரும். இது தன்னலமற்ற பணி; இதில் மெய்யான இன்பங் காணலாம். ஒவ்வொரு வார்த்தையினாலும் செய்கையினாலும் இயற்றுகின்ற இவ்வகைத் தொண்டுகள், கிறிஸ்துவுக்கே செய்தவை போல், பரலோக புத்தகங்களில் பதிவாகின்றன; மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர் களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்தேயு 25:40).CCh 380.1

    இரட்சகரது அன்பாகிய கதிரவன் வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்துங்கள். அப்பொழுது உங்கள் செல்வாக்கு உலகத்திற்கு வாழ்வு அளிக்கும். கிறிஸ்துவின் ஆவி உங்கள் அடக்கி ஆளுவதாக, அன்பு வீதி எப்பொழுதும் உங்கள் உதடுகளில் விளங்குவதாக, நீடிய பொறுமையும், தன்மையற்ற தன்மையும் கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கை நடத்தும்படி மறுபடியும் பிறந்தவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் அடையாளங்கள் ஆகும். 7T 45-50.CCh 381.1