Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    முகவுரை

    கிற்ஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுதல்

    உங்களுக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் வந்து உங்களை அழைத்துப் போவேன் எனக் கூறிச்சென்ற இயேசு வரும் நாள் எந்நாளோ என்று ஏழாம் நாள் அட்வென்டிஸ்டர் அனைவரும் ஆவலோடு எதிர் பார்க்கின்றனர். ஆண்டவர் ஆயத்தம் பண்ணும் அப்பரம வாசஸ்தலத்தில் பாவம், பிணி, துன்பம், பசி, வறுமை, ஏமாற்றம், மரணம் இவை அணுகமாட்டா. உண்மையுள்ளோர் அடையவிருக்கும் சிலாக்கியங்களை சிந்தித்துப் பார்த்து அபோஸ்தலனாகிய யோவான் பிரமித்து: நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப்பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்..... இப்பொழுது எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவர் வெளியிடும் போது... அவருக்கு ஒப்பாய் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம் (1 யோவான் 3:1, 2) என்றார்.CCh 13.1

    மக்கள் இயேசுவைப் போல் இருக்க வேண்டும் என்பதே கடவுள் நோக்கம். தேவ சாயலாக உண்டான மனிதன் ஆரம்பமுதல் தெய்வீக சுபாவத்தை விருத்தி செய்வதற்கு அவர் திட்டம் வகுத்தார். அத்திட்டம் நிறைவேறுதற்குறிய போதனைகளை நமது ஆதிப்பெற்றோர், ஏதேன் பூங்காவில் கிறிஸ்துவிடமிருதும், தேவ தூதர்கள் மூலமாயும் முகமுகமாய் அவர்களோடு உரையாடிப் பெற்று வந்தனர். ஆனால் அவர்கள் பாவம் செய்தபின் பரலோக வாசிகளுடன் முகமுகமாய் உரையாடும் உரிமையை இழந்தனர்.CCh 13.2

    அதுமுதல் தமது திருவுள்ளத்தை மக்களுக்கு வேறுவிதமாய்க் காட்டுவது அவசியம் என்று கண்டார். கடவுள் அதற் காகத் தெரிந்து கொண்ட முறைகளில் சிறந்தது தீர்க்கதரிசிகளே. தீர்க்கதரிசிகள் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளைக் கடவுளிடம் பெற்றனர். அதைக்குறித்து கர்த்தர் கூறுகின்றார். என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். எண். 12:6.CCh 13.3

    கடவுள் மக்கள் தாங்கள் வாழுகின்ற கால நிகழ்ச்சிகளை மட்டும் அறிந்து கொள்வது போதாது என்றும், வரப்போகிற காரியங்களையும், காலங்களையும் அவர்கள் அறிய வேண்டும் என்றும் கடவுள் திருவுளம் கொண்டு, அவைகளையும் வெளிப்படுத்தினார். கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல், ஒரு காரியத்தையும் செய்யார் ஆமோ. 3:7. இவ்வாறு தேவ இரகசியங்களை அறிந்து கொள்வதால் அவர்கள் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறார்கள். (1 தெச. 5:5).CCh 14.1

    தீர்க்கதரிசியின் வேலை வருங்காரியங்களை முன்னறிவிப்பதோடு மட்டும் நின்று போவதில்லை, மோசே ஒரு பெரிய தீர்க்கதரிசி. திருமுறை நூலின் ஆரு ஆகமங்கள் அவர் வரைந்துள்ளவை. அவர் அவைகளில் வருங்கால நிகழ்ச்சிகளைப் பற்றி மிகுதியாக எழுதவில்லை எனினும் ஓசியா தீர்க்கதரிசி மோசேயைப் பற்றி விரிவான கருத்தில் பின் வருமாறு எழுதியிருக்கின்றார்: கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப் பட்டான். ஓசி. 12:13.CCh 14.2

    தீர்க்கதரிசி எவரையும் உடன் மனிதர்கள் நியமிப்பதில்லை. சுயமாகவும் அவர் தம்மை நியமித்துக் கொள்ளமுடியாது. இருதயத்தை ஆராய்ந்து அறியும் கடவுளால் தெரிந்து கொள்ளப் பெற்றவரும், தம்மை முற்றிலும் அவர் சித்தத்துக்கு ஒப்புக் கொடுத்து அவருக்கு அடங்கி நடப்பவருமே மெய்யான தீர்க்கதரிசி. தேவனுடைய மக்களின் சரித்திரத்தை அவர் திருவருளால் அறிந்து அவற்றை மக்களுக்கு அறிவித்த ஆண்களும் பெண்களும் அவரால் தெரிந்தெடுக்கப் பெற்ற மக்கள் என்பது நாம் அறிய வேண்டிய முக்கியமான காரியம்.CCh 14.3

    ஒப்பற்ற தேவ திருவசனம் தீர்க்கதரிசிகளுடைய தூதுகளால் நிரம்பியுள்ளது. ஆத்துமாக்களுக்காக கிறிஸ்துவும், அவர் தூதர்களும், சாத்தானோடும் அவன் தூதர்களோடும் செய்யும் போரைப்பற்றிய அறிவு மக்களுக்கு தீர்க்கதரிசிகள் மூலமாகவே அளிக்கப்பட்டது. இந்த உலகத்தின் கடைசி நாட்களில் அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் நாம், அவர்களுக்குள் நடைபெறும் போரைப்பற்றி அறிந்துகொள்ளவும், அவருடைய வேலையைப் பாதுகாத்து நடத்தவும், நமது குணங்களைச் சம்பூரணமாக்கவும் போதுமான வழிகளைக் கடவுள் வகுத்திருக்கிறார்.CCh 15.1

    வேத நூலின் கடைசி எழுத்தாளர்களாகிய அப்போஸ்தலர் கடைசி நாட்களின் சம்பவங்களைத் தெளிவாக வரைந்துள்ளனர். பவுல் இந்நாட்களைக் கொடிய காலங்கள் என்கிறார். தங்கள் சுய இச்சையின்படி நடந்து, அவரு வருவார் என்று சொல்லும் வாக்குத்தத்தம் எங்கே எனக் கேட்கும் பரியாசக்காரரைப் பற்றி பேதுரு எச்சரிக்கிறார். இக்காலத்தில் சாத்தான் கடைசி சபையாகிய மீதமானவர்களுடன் யுத்தம் பண்ணப் போனான் என்று யோவான் அப்போஸ்தலர் தமது தரிசனத்தில் கண்டார்.CCh 15.2

    இயேசு பெருமான் வருகைக்கு முன்னே உலகில் இருக்கும் தமது மக்களுக்குச் சிறப்பான ஒளியை அருளி, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது கடவுள் திருவுள்ளம் என்பதைத் திருமறை எழுத்தாளர் கண்டனர்.CCh 15.3

    கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்க்கும் சபை-அட்வெந்து சபை ஆவிக்குரிய வரங்களில் குறைவுபடாது எனப்பவுலார் கூறுகிறார். (I கொரி, 1:7, 8.) இச்சபை ஐக்கியப்பட்டும் பூரண வளர்ச்சியடைந்தும் சிறந்த தலைவர்களுடைய ஆசீர்வாதமும் தீர்க்கதரிசன ஆவியின் வரங்களையும் உடையதாகவும் இருக்கும். இதில் அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் சுவிசேஷகரும் போதகரும் உபாத்திமாரும் இருப்பார்கள். (எபே.4:11)CCh 15.4

    அப்போஸ்தலனாகிய யோவான் கடைசி காலச் சபையை மீதியான சபை என்றும், இச்சபையைச் சேர்ந்தவர்கள் தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்கிறவர்கள் (வெளி. 12:17) என்றும் கூரி, இந்தச் சபை தேவனுடைய கற்பனைகளைக்காக்கும் சபை என்று இதை அடையாளம் காட்டுகிறார். இந்தச் சபையில் இயேசுவைப் பற்றின சாட்சி அதாவது தீர்க்கதரிசன ஆவி இருக்கும். (வெளி. 19:10.)CCh 16.1

    அப்படியானால், கடவுள் இட்ட திட்டப்படி ஏழாம் நாள் அட்வெந்து சபை எழும்புகையில், அதில் தீர்க்கதரிசன ஆவி இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தோன்றுகிறது. சென்ற நூற்றாண்டுகளில், மக்களுக்கு விசேஷ தேவைகள் ஏற்பட்ட காலங்களில் கடவுள் அவர்களோடு பேசினது போல, பூவுலகின் கடைசி நாட்களில்-போர் தீவிரமாக வளர்ந்து வருகின்ற கொடிய நாட்களில் இருக்கும் மக்களோடு அவர் பேசுவது நியாயம்தான்.CCh 16.2

    தீர்க்கதரிசன வரம்பெற்ற இந்த ஏழாம் நாள் அட்வெந்து சபை, தீர்க்கதரிசனத்தில் குறிக்கப்பட்ட அதே காலத்தில் சுமார் நூறு வருஷங்களுக்கு சற்று மின் ஆரம்பமானது. கடவுள் தரிசனத்தில் எனக்குக் காண்பித்தார் என்ற குரல் எழும்பியது அதே காலத்தில் தான்.CCh 16.3

    இவை தற்புகழ்ச்சியான பேச்சு அல்ல; கடவுளுக்காக பேசுமாறு அவரால் அழைக்கப் பெற்ற பதினேழு வயதுள்ள கன்னிகையின் குரல், இக் கன்னிகைதான் பிற்காலத்தில் எலன் ஜி.உவைட் என்று அறியப்பட்ட எலன் ஹார்மன். எழுபது ஆண்டுகளாக அக்குரம் உண்மையுடன் வழிநடத்தியும் சீர் திருத்தியும், அறிவுறுத்தியும் வந்தது. தேவன் தெரிந்து கொண்ட அவருடைய தூதாளாகிய அந்த உவைட் அம்மையாரின் குரல் அவர்கள் எழுதி வைத்துள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய நூல்கள் வாயிலாய், நமக்கு இன்னமும் தொனித்துக் கொண்டிருக்கிறது.CCh 16.4