Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    முழு ஓய்வும், தன்னல இன்பமும்

    தங்களுக்குக் கிடைத்த சகல சிலாக்கியங்களால் தங்கள் காலத்தை ஆதாயப்படுத்துவது, தங்கள் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்துவது ஆகியவைகளைக் குறித்து கணக்கு கொடுக்க வேண்டுமென்பதை வாலிபர் நினைத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்குக் கேளிக்கைகளும், விடுநேரப் போக்கும் அவசியமில்லையா? சதா வேலை, வேலை, வேறு மாறுதலின்றி ஓயா வேலை தானா? என்று அவர்கள் சிந்திக்கலாம். C.T.337.CCh 450.4

    தங்கள் வேலை மிக ஊக்கமாயும் சித்திகரமாயும் செய்வதற்குத் தங்கள் கடின சரீர உழைப்பிலிருந்து ஒரு விடுமுறை சிறிது காலம் அவசியப்படலாம். முழு ஓய்வு எடுக்க அவசியப்படாமலே சரியான கவனஞ் செலுத்துவதினால், சரீரம் மிகச் சிறந்தப் பயன் அடையக் கூடும். ஒருதரப்பட்ட வேலையினால் சிரமப்படுவதைவிட்டு அவர்கள் தங்கள் விலையேறப் பெற்ற நேரத்தை வீணாக்க அவசியமில்லை. தங்களுக்குச் சிரமமில்லாத முறையில் தங்கள் தாய்க்கும், சகோதரிக்கும் ஆசீர்வாதமாயிருக்கும்படியான தொன்றைச் செய்யலாம். இவ்விதம் தாங்கள் சுமக்கும் கரடு முரடான பளுவை சுமந்து அவர்கள் கவலையைக் குறைப்பதினால் மெய் இலட்சியத்தைக் கையாடி, அதிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியையடைவார்கள். காலமும் சுயநலத்தினால் வீணாக்கப்படாது. அவர்களுடைய நேரம் சதா நல் முறையில் செலவிடப்படும். அவர்களும் இடையறாமல் பலதரப்பட்ட அலுவல்களைச் செய்து, நல்ல காரியங்களை எவருக்காவது செய்வதினால், ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்தி மீட்பார்கள். 3T. 223.CCh 451.1

    ஆரோக்கியத்தைப் பேண சுயநல கேளிக்கைகள் அவசியமென அனேகர் வாதம் பண்ணுகிறார்கள். சரீரம் நன்கு விருத்தியடைய புதுமைகள் அவசியமென்பது சரி தான். ஏனெனில் புதுமைகளால் மனசும், சரீரமும் ஆரோக்கியமடைந்து, புதுப் பலமடைகின்றன; ஆனால் புத்தியீனமான கேளிக்கைகளில் ஈடுபடுவதினாலும், வாலிபர்கள் செய்ய வேண்டியவைகளாகிய தினக் கடமைகளை அலட்சியம் செய்வதினாலும் இந் நோக்கம் நிறைவேறுகிறதில்லை. A. H. 508.CCh 451.2

    கேடுள்ளதும் செயற்கையுமான குதிரைப் பந்தயம், சீட்டாடுகள், லாட்டரிப் போடுதல், சூதாட்டம், குடிவெறி, புகைப்பிடித்தல், புகையிலையை உபயோகித்தல் ஆகியவைகளைப் புறக்கணிக்கும் போது, சுத்தமும், கண்யமுள்ளதும் உயர்த்த கூடியதுமான உல்லாசம் அருளும் காரியங்களைக் கொடுக்க வேண்டும். A.H.499.CCh 451.3

    இன்பந் தேடுபவைகளில் மிக நாசகரமானது காட்சி சாலை, சன்மார்க்கத்துக்கும் நற்பண்புக்கும் பள்ளிக் கூடமாக இருப்பதாகப் பாராட்டிக் கொள்ளப்பட்ட போதிலும் அது சன்மார்க்க சீர்கேட்டை வளர்க்குமிடமாயிருக்கிறது. துன்மார்க்கப் பழக்க வழக்கங்களும், பாவ சுபாவங்களும் இவ் வித்க் கேளிக்கைகளால், பலமாக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன. கீழ்த்தரமான பாட்டுகளும், கற்பில்லா அபிநயங்களும், வார்த்தைகளும், மனப்பான்மைகளும் மனத் தோற்றங்களைப் பாழாக்கி சன்மார்க்கத்தைத் தாழ்த்துகின்றன. அப்படிப்பட்ட சாட்சிகளை வழக்கமாகக் காணப்போகும் ஒவ்வொரு வாலிபனும் இலட்சியத்தில் அதனால் கறைப்படுகிறான். மனத் தோற்றங்களை நஞ்சாக்குவதிலும், மார்க்க சீந்தனைகள் அழிப்பதிலும், சாந்தமான இன்பங்களின் மேலுள்ள வாஞ்சையையும் ஜீவியத்தின் சாங்கோபாங்கமான மெய்த் தத்தவங்களை மழுங்கச் செய்வதிலும் காட்சி மேடைகளை விட அதிக நாசகரமான செல்வாக்குள்ள சக்திகள் நம் நாட்டில் வேறில்லை. மது அருந்த அருந்த, வெறி ஆசை அதிகப்படுவது போல்வே, இவ் விதக் காட்சிகளின் மோகமும் அதிகரிக்கும். காட்சிசாலைகளையும், சர்க்கஸ்களையும் மற்றும் கேவலமான சகல கேளிக்கைகளையும் வெறுப்பது ஒன்றே பாதுகாப்பாகும். C. T. 334, 335.CCh 452.1

    பக்தி வினயமாய் கர்த்தருக்கு முன் சந்தோஷமாய் தாவீது ஆடியதை டம்பமான தற்கால நடனத்தோடு சிற்றின்பப் பிரியர்கள் ஒத்திட்டு தாங்கிப் பேசுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட வியாக்கியானத்திர்கு இடமே இல்லை. நமது காலத்தில் நடனம் மடமையோடும் நடுச்சாம களியாட்டுகளோடும் சேர்ந்து போகிறது. ஆரோக்கியமும், சன்மார்க்கமும் சிற்றின்பத்துக்குப் பலியாகின்றன. நடனசாலைகளுக்கு அடிக்கடி செல்பவர் கடவுள் சிந்தனைக்கும் பக்திக்கு மூரியவர் ஆவதில்லை; இப்படிப்பட்ட கூட்டங்களில் ஜெபமும் தோத்திர கீதமும் பொருத்தமில்லையென ஒதுக்கப்படுகின்றன. இப்பரீட்சையே முடிவு கட்டப் போதுமானது. பரிசுத்த காரியங் களிலுள்ள வாஞ்சையை பலவீனப்படுத்தும் தன்மையுடைய கேளிக்கைகளையும் தேவ பணிவிடையிலுள்ள சந்தோஷத்தைக் குறைக்கும் பொழுது போக்குகளையும் கிறிஸ்தவர்கள் நாடக் கூடாது. உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்ற போது, கர்த்தருக்கு முன் ஆரவாரமாய்த் துதியுடன் ஏறெடுத்த சங்கீதத்துக்கும் நடனத்துக்கும், தற்கால துர்நடத்தையுள்ள நடனம் எள்ளளவும் ஒப்பனையாகாது. ஒன்று கடவுளை நினைப்பூட்டி, அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்தினது. மற்றது கடவுளை மறந்து, அவரைக் கனவீனம் பண்ணச் செய்யும் சாத்தானுடைய கருவியாகும். PP.707.CCh 452.2

    இரக்கம் இருக்கையில், தவணையின் காலம் ஏதோ தங்கள் சொந்த வேடிக்கை விளையாட்டுக்கென கொடுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் போல், பொதுவாக வாலிபர் எண்ண் விடுகிறார்கள். உலக உல்லாசங்களில் அவர்கள் இன்பங்காணும்படி விசேஷ முயற்சி சாத்தான் எடுக்கிறான். மேலும் இவ்வித கேளிக்கைகள் தீங்கற்றதும், மாசற்றதும் மட்டுமல்ல, ஆரோக்கியத்திர்கு அவசியமுமென அவர்கள் முயன்று ரூபிக்கவும் தூண்டுவான். 1T. 501.CCh 453.1

    தேவ வசனம் தடுக்கும் உலகப் பிரகாரமான சன்மார்க்கக் கேடுடைய நேரப்போக்குகளில் பலர் ஊக்கமாய் பங்கெடுக்கிறார்கள். இவ்விதம் அவர்கள் கடவுளிடமிருந்து பிரிந்து, உலக நேசத்தாரோடு சேர்ந்துகொள்கிறார்கள். ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ளவர்களையும் சமவெளிப் பட்டணத்தாரையும் அழிக்கக் காரணமாயிருந்த பாவங்கள் புறமதஸ்தரிடமும் கிறிஸ்தவர்களெனச் சொல்லிக் கொள்ளுகிரவர்களிடமுமட்டுமல்ல. மனுஷகுமாரனுடைய வருகைக்கு எதிர் பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறவர்களிடத்தினும் காணப்படுகிறது. இப் பாவங்கள் அவர் பார்வையில் இன்று காணப்படுகிறபடியே உங்களுக்குக் காட்டுப்படுமாகில், நீங்கள் வெட்கமும், நடுக்கமும் அடைவீர்கள். 5T. 218.CCh 453.2

    சிற்றின்ப வேட்டைகாரனைத் தம்மைப் பின்பற்றுகிறவனாக கடவுள் ஒப்புக்கொள்ளுவதில்லை. தன்னொறுப்பு, தன்னடக்கம், தாழ்மை, பரிசுத்தம் உடையவர்களே இயேசுவின் மெய்த் தொண்டர்கள் ஆவர். அப்படிப்பட்டவர்கள் உலகப் பிரியருடைய வீணும் வியர்த்தமுமுள்ள பேச்சுகளைரஸிக்க முடிவதில்லை. CT. 325, 328.CCh 454.1

    நீங்கள் மெய்யாகவே கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களானால் அவருக்காக சாட்சி பகர வாய்ப்பு உண்டாகும். நீங்கள் மெய்க் கிறிஸ்தவர்களாயிருந்தால் வரக்கூடாமைக்கு சாக்கு போக்குகள் சொல்லாமல், நீங்கள் தேவனுடைய பிள்ளையென்றும், கர்த்தருடைய பிரசன்னத்தை அழைக்கக்கூடாத எந்த இடத்திற்கும் ஒரு தடவையாகிலும் போவது உங்கள் உயர் இலட்சியத்திற்குப் பொருந்தாதெனத் தெளிவாகவும், வணக்கமாகவும் கூறிவீர்கள். A. H. 519.CCh 454.2

    கிறிஸ்தவ நேரப்போக்குகளுக்காக கிறிஸ்தவர்கள் கூடுவதற்கும், உல்லாச கேளிக்கைகள் ஆகிய உலகப்பிரகாரமான கூட்டத்திற்கும் பெரும் வித்தியாசமுண்டு. ஜெபம், கிறிஸ்துவின் நாமத்தைப் பற்றியும், பரிசுத்த காரியங்களைக் குறித்து பேசுவதற்கு பதிலாக வரட்டுச் சிரிப்பும் இழிவான சம்பாஷணைகளும் காணப்படும். மாபெரும் உல்லாச வேளையாயிருக்கவேண்டுமென்பது அவர்கள் எண்ணம். அவர்கள் நேரப்போக்குகள் மடமையில் ஆரம்பித்து மாயையில் முடிவடையும். A. H. 512.CCh 454.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents