Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பொறாமைக்காரன் பிறரின் நலம் காண்பதில்லை

    நமது கலக்கங்களும் ஏமாற்றங்களும் நம் ஆத்துமாக்களை பட்சித்து நம்மை வெடுவெடுப்பும் பதஷ்டமுமுள்ளவர்களாக்கவிடக்கூடாது. நாம் தேவனும்மு விரோதமாய்ப் பாவஞ் செய்யும்படி, சண்டையும் கெட்ட எண்ணங்களும், அவதூறான பேச்சுகளும் காணப்படாதிருப்பதாக. என் சகோதரனே, நீ உன் இருதயத்தில் பொறாமைக்கும், தீய சிந்தைகளைப் பேணவும் இடங்கொடுப்பாயானால் பரிசுத்த ஆவி உன்னில் தங்க முடியாது. CCh 471.1

    கிறிஸ்துவிலுள்ள பரிபூரணத்தை அடைய நாடு. அவர் ஒழுங்குத் திட்டங்களில் பாடுபடு. ஒவ்வொரு சிந்தையும், பேச்சும், கிரியையும் அவரை வெளிப்படுத்துவதாக். அப்போஸ்தலர் நாட்களில் யாவரையும் ஒன்றாக்கிய அன்பின் ஸ்நானம் தினமும் உனக்குத் தேவை. இந்த அன்பு சரீரம், மனசு, ஆவிக்குரிய ஆரோக்கியத்தைத் தரும். உன் ஆவிக்குரிய ஜீவியத்தைப் பலப்படுத்தும் சூழ்நிலை உன் ஆத்துமாவைச் சுற்றியிருக்கட்டும். விசுவாசம், நம்பிக்கை, தைரியம், அன்பு ஆகியவைகளை அப்பியாசி. தேவ சமாதானம் உன் இருதயத்தை ஆளட்டும். 8T. 191.CCh 471.2

    பொறாமை என்பது மன அமைதியின் திரிவுபட்ட நிலை, ஆனால் ஓர் அமைதியற்ற நிலை எல்லாத் திறமைகளையும் ஒழுங்கீனப்படுத்தும். அது சாத்தானிடம் ஆரம்பித்தது. அவன் பரலோகத்தி தலைமை ஸ்தானத்தை ஆசித்தான், அவன் விரும்பிய சகல வல்லமையையும் மகிமையையும் அடைய முடியாமற் போனபடியால் தேவனுடைய ஆளுகைக்கு விரோதமாய்க் கலகஞ் செய்தான், நம் ஆதிப் பெற்றொரிடம் பொறாமைகொண்டு, அவர்களைச் சோதித்துப் பாவத்திற்குட்படுத்தி இவ்விதமாக அவர்களையும் எல்லா மனுக்குலத்தையும் நாசப்படுத்தினான்.CCh 471.3

    மற்றவர்களுடைய நற் குணங்களையும், பெருமித செயல்களையும் காணக்கூடாதபடி பொறாமைக்காரன் தன் கண்களை மூடுகிறான். மிகச் சிறந்தவைகளைக் குறை கூறி, தப்பெண்ணங்கொள்ளச் செய்ய எப்போதும் ஆயத்தமாயிருக்கிறான். அடிக்கடி மனிதர் தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, இதரக் குறைகளை விட்டு விடுவர். ஆனால் பொறாமைக்காரனைப்பற்றிக் கடுகளவும் நம்பிக்கை கொள்வது கூடாத காரியம். ஒருவனைப் பொறாமைப்படுவதினால் அவன் தன்னிலும் மேலானவன் என்பதே ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகையால் அகந்தை அப்படி ஒப்புக்கொள்ள இடம் தருவதில்லை. தென் பாவத்தைக் குறித்து பொறாமைக்காரனை உணர்த்த முயன்றால் அவன் அந்த விஷயத்தில் அதிகப் பிடிவாதமாகி ஆரோக்கியமடையக் கூடாதவனாகிறான்.CCh 472.1

    பொறாமையுடையவன் எங்கு சென்றாலும் நஞ்சு கலந்து, மித்துருக்களை சத்துருக்களாக்கி, பகையைக் கிளப்பி, தேவனுக்கும் மனிதனுக்கும் விரோதமாகக் கலகம் உண்டாக்குகிறான். வாழ்க்கையில் சிறந்து விளங்க தன் வீரிய, சுயநலமற்ற முயற்சிகளைக் கையாடாமலிருந்து, தான் நிற்கிற இடத்திலிருந்து கொண்டே பிறர் முயற்சிகளுக்கு வரவேண்டிய கண்யத்தைக் குறைத்துத் தன்னை மிகச் சிறந்தவன், மகரப் பெரியவன் என எண்ணச் செய்யும்படி அவன் வழி வகைகளைத் தேடுகிறான்.CCh 472.2

    குறும்புத்தனத்தில் மகிழ்ச்சி பெறும் நாவைப்பற்றி, நீ சொல்லு, நானும் சொல்லுவேன் பார் என்னும் பிதற்றுகிற நாவைப்பற்றி யாக்கோபு அப்போஸ்தலன் நரகாக்கினியைக் கொளுத்தும் நாவு எனக் கூறுகிறார். அது எப்பக்கமும் நெருப்புக் கொள்ளிகளை சிதறியடிக்கிறது. மாசற்றவனைக் கேவலப்படுத்துகிறோம் என்பதாக கோள் சொல்லித்திரிபவன் எங்கே சிந்திக்கப் போகிறான்? தங்கள் பாரத்தினால் நம்பிக்கையும் தைரியமும் இழந்து தவிப்பவர்களையும் தன் தீயச் செயல்களால் இப்படிப்பட்டவன் நாசஞ்செய்கிறான். நிந்தைகளைப் பேசும் கெட்ட சுபாவத்தைப் பேணுவதே அவன் கவலை. கிறிஸ்தவர்களாகப் பாராட்டுகிறவர்களும் பரிசுத்தம், உண்மை, கண்ணியம், புகழ்ச்சியானவைகளுக்குத் தங்கள் கண்களை முடிக்கொண்டு, கண்டனத்துக்கேதுவானவைகளையும் விரும்பப்படத் தகாதவைகளையும் சேகரித்துக் கொண்டு உலகத்திற்கு அதை பறை சாற்றுகிறார்கள். 5T. 56,57.CCh 472.3