Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-16

    தரித்திரர் துன்பப்படுவோர் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனப்பான்மை

    மனிதர் தங்கள் உடன் மனிதரிடத்தில் அன்பு கூறுகிறார்களா வென்று காண்பிக்கும் பொருட்டு கடவுள் இக்காலத்தில் அவர்களுக்கு சந்தர்ப்பங்களை அளிக்கிறார். திக்கற்றவர்களுக்கும், துன்பமடைகிறவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மரண வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கும் கருணை காண்பிக்கிறவன் மெய்யாகவே தேவனிடமும், பிறனிடமும் அன்பு கூறுகிறான். மனிதர் யாவரும் தாங்கள் நெகிழவிட்ட கடமைகளை நிறைவேற்றவும் தாங்கள் இழந்த சிருஷ்டிகரின் சாயலைத் திரும்பவும் அடைய முயலவும் கடவுள் அவர்களை அழைக்கினறார். N.M.49.CCh 237.1

    பிறருக்காகச் செய்யப்படும் இவ்வேலை, முயற்சி, சுய வெறுப்பு, தற்தியாகம் இவைகளால் நடைபெற வேண்டும் என்ற போதிலும் தம்முடைய ஒரே பேறான குமாரனில் தெய்வம் நமக் களித்திருக்கும் ஈவுடன் ஒப்பிடத் தக்கதாக நாம் எந்தத் தியாகத்தைச் செய்து விடமுடியும்? 6.T.283.CCh 237.2

    நித்திய ஜீவனை அடைவதற்கான நிபந்தனைகள் நமது இரட்சகரால் மிகவும் தெளிவாகவும் எளிய நடையிலும் கூறப்பட்டுள்ளன. கள்ளர் கையில் அகப்பட்டு, காய மடைந்து, கொள்ளையிடப்பட்ட மனிதன் (லூக் 10.30-37) நமது அனுதாபத்திற்கும், அன்பிற்கும், கவனத்திற்கும் பாத்திரமாக வேண்டியவர்களைக் குறிக்கின்றான். நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படும் வறியோரையும் துர்ப் பாக்கியரையும் நாம் அசட்டை செய்வோமானால் நாம் எவராயினும் சரி, நம் நித்திய ஜீவனைப்பற்றிய உறுதி மொழி நமக்கு இராது. ஏனெனில் அவ்வாறு செய்யும் பொழுது நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிற காரியங்களுக்கு நாம் விடையளிக்கிறதில்லை. பாடடைகின்றவர்கள் நமக்கு உறவினரல்ல என்பதினாலே மனித வர்க்கத்தின் மீது நாம் கருணையும், பரிதாபமும் கொள்ளுகிறதில்லை. கடைசி ஆறு கற்பனைகளால் விளக்க மடைகின்ற இரண்டாம் பெரிய கற்பனையை மீறுகிறவர்களாக நீங்கள் காணப்படுகிறீர்கள். ஒருவன் ஒன்றிலை தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். மனிதரில் வறியோருக்கும், துன்பமடைந்தவர்களுக்கும் தங்கள் இருதயக்கதவுகளைத் திறக்காதவர்கள் பத்துக் கற்பனைகளில் முதல் நான்கு பிரமாணங்களில் காணப்படும் தேவ உரிமைகளை அங்கீகரிக்கவுமாட்டார்கள். விக்கிரகங்கள் இருதயத்துள் நிறைந்திருந்து அதின் ஆசாபாசங்களை ஆட்கொள்ளுகின்றன. இருதயம் முற்றுமாகக் கடவுளால் ஆளப்படாததால் அவர் கனவீனமடைகிறார். 3T.524.CCh 237.3

    மனச்சாட்சியின் மேல் கல்வெட்டுப் போல் பதியத்தக்கதாக பின்வருமாறு எழுதப்பட வேண்டும் கருணை, பரிதாபம், நீதியுமற்று எளியோரை அசட்டை செய்கிறவனும், துன்பமடைகிறவர்களின் தேவைகளைப் பொருட்படுத்தாதவனும், பட்சமும் மரியாதையுமில்லாதவனும் தன்னுடைய குணநலம் வருத்தியடைவதற்கு கடவுள் சகாயத்தைப்பெறக் கூடாமற் போகிறான். பிறர் பொருட்டு நாம் அத்தியாவசியமானவைகளுக்காக பயன்படுமாறு நமது நலன்களையும், சிலாக்கியங்களையும் அளிக்கும்போது மனதும் இருதயமும் இலகுவில் பண் பாடடைகின்றது. கிடைப்பதை யெல்லாம் நமக்காகவே சேர்த்து வைத்துக்கொள்ளும் பொழுது நம்முடைய ஆத்துமா வறுமையடைகின்றது. கிறிஸ்துவின் குண நலன்கள் யாவும், கடவுள் தங்களுக்கு நியமித்த வேலையைக் கிறிஸ்துவைப்போல் செய்கிறவர்களுக்கே கிட்டும். 6T.262.CCh 238.1

    குலங்கள், ஜாதிப்பிரிவினை, கனம், செல்வம் ஆகியவற்றை கிறிஸ்து அசட்டை செய்கிறார். குண நலமும், திருச்சித்தத்துக்கென நேர்ந்துகொள்ளுதலுமே கடவுள் பார்வையில் பெருமதிப்புக்குளியன. பலவான்களோடும் உலக தயவைப் பெற்றவர்களோடும் அவர் சார்ந்திருப்பதில்லை. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய அவர் விழுந்தவர்களைக் கை தூககுமாறு பணிகின்றார். இழக்கப்பட்டு அழிவடைந்து கொண்டிருக்கும் ஆத்துமாவை வாக்குத்தத்தங்களினாலும், உறுதி மொழிகளாலும் தம்மிடம் சேர்த்துக்கொள்ளவே, உறுதி மொழிகளாலும் தம்மிடம் சேர்த்துக்கொள்ளவே அவர் விரும்புகிறார். அவருடைய பின்னடியார்களில் யார் உருக்கமான இரக்கத்தையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்களென்பதை பரம தூதர்கள் கவனிக்கின்றனர். கடவுள் மக்களிலே எவர் இயேசுவின் அன்பை வெளிப்படுத்துபவரென்றும் கவனிக்கின்றனர். 6T.268.CCh 239.1

    தெய்வம் உங்கள் தியானம் மட்டுமல்லாது உங்களுடைய மலர்ந்த முகங்களும், நம்பிக்கையூட்டும் பேச்சும், அனல் பொருந்திய அன்பும் வேண்டுமென்கிறார். வெந்துயரடைந்த கர்த்தருடையவர்களை நீங்கள் சந்திக்கும்பொழுது அவர்களுள் ஒரு சிலரில் நம்பிக்கை அற்றுபோயிருக்கக் காண்பீர்கள். கிறிஸ்துவின் ஒளியை மீண்டும் அவர்களிடத்தில் கொண்டுவாருங்கள். அவர்கள் நடுவிலே ஜீவ அப்பத்திற்காக பசியாயிருக்கிறவர்களும் உண்டு. தேவ வசனங்களை அப்படி பட்டவர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள். அவர்களுக்குள்ளே பூமிக்குரிய எவ்வித தைலத்தாலும், வைத்திய உதவியினாலும் சுகம்பெறக்கூடாத ஆத்தும நோயுள்ளவர்களுமுண்டு. இவர்களுக்காக ஜெபம் பண்ணி அவர்களை கிறிஸ்துவண்டை அழைத்துவாருங்கள். 6T.277.CCh 239.2