Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-32

    தாய் சேய்

    வெறுமனே வீட்டு ஜோலிகளுக்குள் மூழ்கிக்கிடப்பதற்குப் பதிலாக மனைவியும் தாயுமாயிருக்கிறவள் வாசிக்கவும், அறிவைப் பெருக்கவும் தன் புருஷனுக்கு நல்ல துணையாக இருக்கவும், மனசு விருத்தியடையும் தன் குழந்தைகளுடன் நன்கு உறவாடவும் வேளை எடுத்துக்கொள்ள வேண்டும். தனக்கு அருமையான அவர்கள் மேலான வாழ்க்கைக்கு ஆயத்தப்படும்படி அவள் தன் செல்வாக்கை பயன் படுத்துவாளாக. அருமை இரட்சகரைத் தன் தினசரி வாழ்க்கையில் நண்பராகவும் நெருங்கிய அன்பராகவும் ஆக்க வேண்டும். அவருடைய வசனத்தை ஆராயவும், தன் பிள்ளைகளோடு வயல் வெளிக்குச் சென்று கடவுளைப் பற்றி அவருடைய படைப்பின் அழகு மூலம் கற்றுக்கொள்ளவும் சமயம் எடுப்பாளாக.CCh 401.1

    களையுடன் முகமலர்ச்சி சதா அவளில் திகழ்வதாக. நேரம் முழுவதையும் தையலில் செலவிடாமல், சகல கடமைகளையும் முடித்துகொண்டு மாலையில் சல்லாபமாக குடும்பம் கூட வேண்டும். இப்படிச் செய்வதினால் குடும்பத் தலைவர் மாலை வேளையில் வேறு காட்சிகளுக்கும் பொழுது போக்கு இடங்களுக்கும் செல்வது தடைப்பட ஏதுவாகும். பையன்கள் தெருக்களில் வீணாக அலைய மாட்டார்கள். சிறுமிகள் தவறான சகவாசங்கள், சம்பாஷணைகளில் ஈடுபடார்கள். குடும்பச் செல்வாக்கு பெற்றோர் பிள்ளைகளுக்கு கடவுள் நியமித்தபடி வாழ்க்கை முழுவதும் பெரும் ஆசீர்வாதமாகும்.CCh 401.2

    “ஒரு மனைவிக்கு தன் சித்தப்படி நடக்க இடமில்லையா?” என அடிக்கடி கேட்கப் படுவதுண்டு, புருஷனே குடும்பத் தலைவன் என வேதம் தெளிவாகக் கூறுகிறது. மனைவிகளே, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். ஆலோசனை இத்துடன் முடிந்து விட்டால் மனைவியாயிருப்பதில் யாதொரு விரும்பப்படத்தக்க காரியமும் இல்லை எனலாம்; ஆனால், மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். (கொலோ 3:18) என்று எழுதி இருக்கிறது.CCh 401.3

    நமக்குத் தேவ ஆவி வேண்டும்; இல்லாவிடில் குடும்பத்தில் அந்நியோந்நியம் காணப்பட முடியாது. மனைவிக்குக் கிறிஸ்துவின் ஆவியிருந்தால், தன் வார்த்தைகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருப்பான். தன் ஆவியை அடக்குவான்; அடிமைத்தன ஆவியோடில்லாமல் கீழ்ப்படிதலோடு தன் புருஷனிடம் நல் வாழ்க்கைத் துணைவியாக நடந்து கொள்வாள். புருஷனும் தேவ மனுஷனாகவிருந்தால் தன் மனைவியிடம் அதிகாரம் காட்டி, கண்டிப்பு கட்டாயமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்ளான். குடும்ப அன்பை நாம் அதிகக் கவனமாய்ப் பேண வேண்டும்; ஏனெனில் அங்கே தேவ ஆவி வசித்தால் குடும்பம் பரலோக சின்னமாகும். ஏனெனில் ஒருவர் பிழை செய்தால் அலட்சியமாக விட்டு விடாமல் கிறிஸ்தவ ஆவியோடு, பொறுமையோடு சகிப்பர். A.H. 10-18.CCh 402.1