Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனதின் தேவைகளை அசட்டை செய்ய வேண்டாம்

    தேவ பயத்தை தங்கள் முன்னே வைத்திருக்கிற பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடக்கியாளும் பொழுதும் அவர்களுடைய தன்மையையும் சுபாவத்தையும் ஆராய்ந்து, அவர்களுடைய தேவைகளை அளிப்பதற்கு வகைதேட வேண்டும். பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளைன் சரீரப் பிரகாரமான தேவைகளைக் கருத்துடனே பூர்த்தி செய்கிறார்கள். பட்சத்துடனும் உண்மையுடனும் வியாதியில் அவர்களை பராமரிப்பதோடு கடமை தீர்ந்ததென்று எண்ணுகிறார்கள். இது தவறு. அவர்களுடைய அலுவல் அப்பொழுதே ஆரம்பமாகின்றது. மனதின் தேவைகள் பூர்த்தியாக வேண்டும். காயம்பட்ட மனதைக் குணமாக்குவதற்கு சாதுரியம் அவசியமாகின்றது.CCh 520.1

    பிள்ளைகளுக்கு பெரியோரைப் போலவே சகிப்பதற்கு கடினமானதும் வேதனையளிப்பதுமான பரீட்சைகள் இருந்து வருகின்றன. பெற்றோர் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களுடைய மனது அடிக்கடி கலங்குகின்றது. தவறான நோக்குடனும் உணர்ச்சியுடனும் அவர்கள் கிரியை நடப்பிக்கின்றார்கள். சாத்தான் அவர்களைப் பலமாகத் தாக்குகின்றபொழுது, அவர்கள் அவனுடைய சோதனைகளுக்கு இணங்குகின்றார்கள். அவர்கள் கோபத்துடனும் பிள்ளைகளிடம் சினத்தை எழுப்பும் விதமாகவும் பேசிப் பலவந்தமும் வெடுவெடுப்புமுடையவர்களாயிருக்கின்றனர். வேறு போக்கு இல்லாத பிள்ளைகளும் அத்தகைய ஆவியை பகிர்ந்து கொள்ளுகின்றார்கள். பெற்றோர் அவர்களுக்கு ஒத்தாசையளிப்பதற்கு கூடுவதில்லை. ஏனெனில் பெற்றோரே இதற்கு ஆரம்பஞ் செய்தனர். சில வேளைகளிலே யாவும் தவறாக நடந்து வருவதாகக் காணப்படுகிறது. அனைவரும் வெடுவெடுப்பைக் காண்பிக்கின்றனர். எல்லோரும் நிர்ப்பாக்கியமாக, சந்தோஷமில்லாது வாழுகின்றனர். தங்கள் ஏழைப் பிள்ளைகளை பெற்றோர் குற்றவாளிகளாக்குவதுடனே, பிள்ளைகள் மிகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் அடங்காதவர்களாகவும் உலகிலேயே மிகவும் மோசமான பிள்ளைகளாகவும் இருப்பதாக அவர்கள் தங்களை எண்ணுகின்றனர். இத்தொல்லை ஏற்பட பெற்றோரே காரணம்.CCh 520.2

    தங்களிடத்திலே தன்னடக்கமில்லாததால் சில பெற்றோர் அனேக புசல்கலை எழுப்புகின்றனர். பட்சமாக பிள்ளைகளிடம் இதையோ அதையோ செய்வதற்கு ஏவுவதற்குப் பதிலாகத் திட்டுகின்ற தோரணையிலும் பிள்ளைகள் பெறுவதர்கு அவசியமற்ற கண்டனம் அல்லது கடிந்து கொள்ளுவதுடனும் வேலையிடுகின்றனர். பெற்றோரே, உங்கள் பிள்ளைகளிடம் இவ்வாறு நடந்து கொள்ளுவது அவர்களுடைய உற்சாகத்தையும் ஆவலையும் அவித்துப் போடுகிறது. அவர்கள் உங்கள் கட்டளையை அன்பினால் செய்து நிறைவேற்றாமல், நிர்ப்பந்தத்தினிமித்தமாக நிறைவேற்றுகின்றனர். அவர்களுடைய இருதயம் அதிலே இல்லை. அவ்வாறு செய்வது இன்பமாகவிராமல் கடினமாக கானப்படுகின்றது. இன்பமாகவிராமல் கடினமாக காணப்படுகின்றது. இதினிமித்தமே உங்கள் கட்டளைகளை அவர்கள் மறக்க ஏதுவாகின்றது. அதினால் நீங்கள் பின்னும் கோபங் கொள்ளுகிறீர்கள். பிள்ளைகள் பாடு முன்னிலும் மோசமாகின்றது. நீங்கள் அவர்கள் பேரில் மீண்டும் குற்றஞ் சுமத்தி, அவர்கள் தப்பிதத்தை அவர்களுக்கு முன்பாக விவரித்துக் காண்பிக்கிறீர்கள்.CCh 521.1

    உங்கள் பிள்ளைகள் முகத்தில் மேக மந்தாரத்துடனே உங்களைப் பார்ப்பதற்கு இடம் வைக்காதீர்கள். அவர்கள் சோதனைக்கு இடம் கொடுத்து, பின்னால் அவர்களுடைய தவற்றை உணர்ந்து மனந்திரும்புவார்களாகில், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமென்று நீங்கள் நம்புகிறது போலவே, பிள்ளைகளிடம் உங்களுக்கு மன்னிப்பு உண்டென்று எண்ணி, அவர்களையும் மன்னியுங்கள். அவர்களுக்குப் போதனை செய்து, அவர்களை உங்கள் இருதயங்களுடனே பிணைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு அது இக்கட்டான வேளை. உங்களை விட்டு அவர்களைப் பிரிக்கத்தக்கதான செல்வாக்குகள் அவர்களைச் சூழ ஏற்படும். அத்தகைய செல்வாக்கை நீங்கள் செல்லுபடியாகாதபடி செய்ய வேண்டும். அவர்கள் உங்கள் பேரில் பூரண நம்பிக்கை வைப்பதற்கு போதியுங்கள். அவர்களுடைய கஷ்டங்களையும் இன்பங்களையும் கொண்டு வந்து அவர்க?ள் உங்கள் காதுகளில் ஓதட்டும். இவ்வாறு செய்வதற்கு ஊக்கமளிப்பதால், அவர்களுடைய பழக்கப்படாத பாதங்களுக்கென்று சாத்தான் ஆயத்தப்படுத்தியிருக்கும் அனேக கண்ணிகளுக்கு அவர்களை தப்புவிப்பீர்கள். அவர்கள் சிறுவர்கள் என்பதையும், உங்களுடைய பிள்ளைப் பிராயத்தையும் மறந்து அவர்களிடம் கடுமையாக மட்டுமே நடந்து கொள்ளாதிருங்கள். அவர்கள் உடனடியாக பூரண மனுஷராகவும் ஸ்திரீகளாகவும் மாறிவிட வேண்டுமென்று நோக்க வேண்டாம். அவ்வாறு செய்யும்பொழுது, அவர்கள் இருதயங்களண்டையில் வேறு விதமாக நீங்கள் நெருங்குவதற்கு திறந்து வைக்கப்பட்டுருக்கு வழியை அடைத்துப் போடுகிறீர்கள். அன்றியும் அவர்களுக்குத் தீங்குண்டாக்கும் செல்வாக்குகளுடைய வேறு வாசலை அவர்கள் தேடித் திறந்துகொள்ளவும், அவர்களுக்கு வரும் ஆபத்தை நீங்கள் அறிந்துணருவதர்கு முன்பாகப் பிறர் அவர்கள் மனதிலே நஞ்சூட்டவும் வழி செய்வீர்கள். 1T 384, 387.CCh 521.2