Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒருவனுக்குக் கடன் படாதிருங்கள்

    கிடைத்தவுடனே செலவழிப்பதே அனேகக் குடும்பங்கள் வறுமையாயிருப்பதற்குக் காரணமாகும்.CCh 432.1

    சம்பாதிக்கும் முன்னமே பணத்தை வாங்கி, எதற்கும் செலவழிப்பது ஒரு கண்ணி. AH. 392.CCh 432.2

    வேதக் கிறிஸ்தவர்களாயிருப்பவர்கள் மிக நேர்மையாய் நடக்க வேண்டுமென எதிர் நோக்க உலகத்திற்கு உரிமையுண்டு. ஒருவன் தன் கொடுக்கல் வாங்கலில் நிர்விசாரமாயிருப்பின் நம்மவர்கள் யாவரும் அப்படியே நம்பப்படத்தக்கவர்கள் அல்லவென கருதப்பட இடமுண்டு.CCh 432.3

    தேவ பக்தியுடையவர்களாகக் காட்டுபவர்கள் தங்கள் எண்ணமற்ற போக்கினால் சத்தியம் நித்திக்கப்பட இடங்கொடாமல், தாங்கள் நம்பும் வேத கோட்பாடுகளைத் தம் நல் நடத்தையால் அலங்கரிக்க வேண்டும். ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் என்கிறார் அப்போஸ்தலன் - 5T, 179-182.CCh 432.4

    தங்கள் வருவாயுக்குள் சிக்கனமாய் அனேகர், ஆம், திரளான பேர் வாழும்படி கற்றுக்கொள்ளவில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு வாழக் கற்றுக்கொள்ளாமல், கடன் கடன், மீண்டும் மீண்டும் கடன் வாங்கி கடனில் அமுங்கிக் கிடப்பதினால், என்ன செய்வதென்று அறியாமல் மிக அதைரியமும் சோர்வும் அடைகிறார்கள். A.H. 374.CCh 432.5

    ஒருவனும் கடனுக்குட்படும்படி தன் காரியங்களை நடத்தாதிருக்கக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒருவன் கடன் படுவதினால் ஆத்துமாக்களைப் பிடிக்கச் சாத்தான் வீசும் வலைகள் ஒன்றில் சிக்கிக்கொள்கிறான்.CCh 432.6

    இனி கடன் படாதிருக்க தீர்மானித்துக்கொள். கடன்படுவதைப் பார்க்கிலும் ஆயிரம் காரியங்களை நீ மறுத்து ஜீவி. வைசூரியை விட்டு விலகி வாழ்வது போல் விலகிக்கொள். A. H. 392, 393.CCh 432.7