Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்-42

    குறைகூறுதலும் அதன் பலன்களும்

    தங்கள் வார்த்தைகளைக் குறித்து கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் நண்பர்களுள் விசேஷமாக ஐக்கியக் குறைவு காணப்படுகையில், தாங்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்களிடம் அனுகூலமில்லாத செய்திகளைக் கொண்டு போகக்கூடாது. பிறர் அறியாத அந்த நண்பர். அந்த உறவினர் ஆகியவர்களைப்பற்றி நிரம்பத் தெரிந்தவர்கள் போல் ஜாடையாகவும் குறிப்பாகவும் ஏதும் சொல்லுவது மகா குரூரமாகும். அப்படிப்பட்ட குறிப்புகள் பிரதிகூலமான எண்ணங்களை உண்டாக்குவது மட்டுமல்ல, உண்மையை மிகைப்படுத்திக் கூறுவதைப் பார்க்கிலும் அதிக தூரம் செல்லுகிறது. இப்படிப்பட்டவைகளினால் கிறிஸ்துவின் திருச்சபை என்னென்ன கேடுகள் அனுபவித்திருக்கிறது! சபையினருடைய பொருத்தமற்ற கவனமில்லாத நெறியினால் சபை நீரைப்போல் பலவீனப்பட்டிருக்கிறது. ஆயினும் குற்றவாளிகள் குறும்பு செய்யத் திட்டமிட்ட தில்லை. சம்பாஷணைக்குரிய விஷயம்பற்றி ஞானமற்றிருந்தபடியால் அதிக கேடுகள் உண்டாயிருக்கின்றது.CCh 468.1

    சம்பாஷணை ஆவிக்குரிய தெய்வீக காரியங்களைப்பற்றியிருக்க வேண்டும்; ஆனால் அது நேர்மாறாக இருந்திருக்கிறது. மனம் இருதயம் வளரும்படியான முறையில் கிறிஸ்தவ நண்பர்களுடன் சகவாசஞ் செய்தால், பின்பு வருந்த அவசியமிருக்காது; பின்பு அவர்கள் மன மகிழ்ச்சியுள்ள திருப்தியோடு இருக்கலாம். ஆனால் மூடப் பேச்சுகளிலும், வீண் பேச்சுகளிலும் நேரத்தைச் செலவிட்டு, பிறர் வாழ்க்கைகளை யும், குணங்களையும் பற்றி குறை கூறிப் பேசியிருந்தால், அந்த நண்பர்களுடைய உறவு தீமைக்குக் காரணமாகவும், உன் செல்வாக்கு சாவுக் கேதுவான சாரம் பொருந்தியதாகவும் தெரிய வரும். 2T. 186, 187.CCh 468.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents