Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பொறாமையும் குற்றங் கண்டு பிடித்தலும்

    அடங்கா நாவுகள் சபையாரிடையே இருப்பதைக் கண்டு நான் வருந்துகின்றேன். குறும்புதனத்தில் வளரும் பொய் நாவுகள் இருக்கின்றன. பிதற்றுதல்களும், வீண் அலப்புதல்களும், அவசியமில்லாத தலையிடுதல்களும் கைதேர்ந்த அல்லது சமர்த்தான வக்கணைப் பேச்சுகளும் காணப்படுகின்றன. வம்பு அளப்பு விரும்புகிறவர்களில் சிலர் ஏதோ நவீன ஆசையோடும், சிலர் எரிச்சலோடும், அனேகர் தங்களைக் கடிந்து கொள்ள தேவன் உபயோகித்தவர்களுக்கு விரோதமாயுள்ள பகைமையினாலும் ஏவப்படுகிறார்கள். இப்படிப்பட்ட குழப்பமான சத்துவங்கள் வேலை செய்கின்றன. சிலர் தங்கள் உள்ளான நோக்கத்தை மறைக்கிறார்கள், மற்றவர்கள் பிறரைப் பற்றி தீமையாக தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள் சந்தேகிக்கும் யாவையும் பறை சாற்ற தீவிரிக்கிறார்கள்.CCh 473.1

    சத்தியத்தைப் பொய்யாகவும், நன்மையைத் தீமையாகவும், குற்றமில்லாமையை குற்றமாகவும் மாற்றும் பொய் ஆவி கிரியை நடப்பிக்கிறதை நான் கண்டேன். தேவனுடைய ஜனங்களென்று தங்களைப் பாராட்டிக்கொள்பவர்களின் நிலையைக் கண்டு சாத்தான் மகிழ்ச்சி யடைகிறான். தங்கள் சொந்த ஆத்துமாக்களை அனேகர் அலட்சியஞ் செய்து கொண்டு பிறரைக் குறைகூறி கண்டனஞ் செய்யும் வாய்ப்புக்காக வெகு ஆவலோடு காத்திருக்கிறார்கள். யாவருக்கும் குணக் குறைகள் உண்டு, எனவே பொறாமையினால் அவர்களுடைய தீமைக்கென அர்த்தப்படுத்தும் காரியங்களைக் கண்டுகொள்வது சிரமம் அல்ல. தங்களைத் தாங்களே நீதிபதிகளாக ஏற்படுத்திக்கொள்ளுகிற இவர்கள் இப்பொழுது நமக்கு அத்தாட்சிகள் உண்டு. அவர்கள் தங்களைத் தப்புவித்துக் கொள்ளக்கூடாத அளவில் ஒரு குற்றத்தில் யாட்டி வைப்போம் என்கிறார்கள். தக்க வாய்ப்புக்காக காத்திருந்து, தங்கள் வம்பளப்புக்களின் மூட்டை முடிச்சுகளைக் கொண்டு வந்து, தங்கள் துண்டு துக்கடாக்களை வெளிப்படுத்துகிறார்கள்.CCh 473.2

    ஒரு கருத்தை ஸ்தாபிக்கும்படி, பலமான மனக் கற்பிதம் உடையவர்கள் தங்களையும் பிறரையும் ஏமாற்றக்கூடிய ஆபத்திலிருக்கிறார்கள். ஒருவன் கவனமின்றி பேசியைகளைப் பத்திரப்படுத்தி, பேசியவரின் ஆத்திரத்தில் அவர் கருத்து ஒன்றாக இருப்பினும், வெடெறு பொருட்படும்படி இவர்கள் திரிப்பார்கள். கவனிக்கப்படாத கூடாத அச் சிறிய காரியத்தைச் சாத்தானுடைய பூதக் கண்ணாடியில் வைத்து, ஆலோசித்து, துரும்பைத் தூணாக்கி விடுவர்.CCh 474.1

    வெளி வரும் வதந்திகளை யெல்லாம் சேகரித்து, பிறனுடைய குணத்தைச் சந்தேகிக்கச் செய்யும் ஒவ்வொன்றையும் தோண்டி எடுத்து, அவனுக்கு கேடுண்டாகும்படி உபயோகித்து மகிழ்ச்சியடைவதா? கிறிஸ்துவின் தொண்டன் ஒருவனுக்குப் புண்ணுண்டாக்கவும், அவகீர்த்தியுண்டாக்கவும் கூடுமானால் சாத்தான் சந்தோஷப்படுகிறான். அவன் சகோதரர் மீது குற்றஞ் சாட்டுகிறவன். கிறிஸ்தவர்கள் அவனுடைய வேலையில் அவனுக்கு உதவலாமா?CCh 474.2

    சகலத்தையும் நோக்கும் தேவனுடைய கண்கள் எல்லாருடைய பலவீனங்களையும், ஒவ்வொருவரையும் ஆளும் ஆசைகளையும் அறிந்திருக்கும் அவர் தம் தவறுகளைப் பொறுத்து நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கிறார். தம் ஜனங்களும் அதே விதமான நீடிய பொறுமை, இரக்கம் காட்ட விரும்புகிறார். மெய்க் கிறிஸ்தவர்கள் பிறருடைய குறைகளையும் தவறுகளையும் பகிரங்கமாக்குவதில் பூரிப்படைவதில்லை. துன்மார்க்கம், குறைகளிலிருந்து விலகி, நன்மையும் விரும்பப்படத்தக்கதுமான காரியங்களில் தங்கள் மனதைச் செலுத்துவார்கள். குற்றஞ்சாட்டும் ஒவ்வொரு செய்கையும், நிந்தையான அல்லது கண்டனமான ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கிறிஸ்தவனுக்கு வருத்தமாயிருக்கும். 5T. 94-96.CCh 475.1