Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கவனிப்பதில் மென்மையுள்ள அன்பின் ஒழுங்கு முறை

    பிள்ளைகள் பெற்றோரிடம் தேவனால் கணக்குக் கேட்கப்படும்படி ஒப்புவிக்கப்பட்ட ஒரு மதிப்புள்ள பொறுப்பு, அவர்களைப் பழக்க நாம் அதிக நேரம் செலவிட்டு, அதிகக் கவனம் செலுத்தி, அதிக ஜெபம் செய்ய வேண்டும்.CCh 407.1

    பிள்ளைகளின் சுகவீனத்திற்குக் காரணம் தப்பான முறையில் அவர்கள் நடத்தப்பட்டிருப்பதே என்று காணலாம். ஆகாரம் அருந்துவதில் ஒழுங்கீனம். குளிர்ந்த வேளைகளில் ஆடை போதாதிருத்தல், தகுந்த அளவ்ல் இரத்தம் ஓடும்படி உதவும் அப்பியாசங்கள் போதாமை, அல்லது இரத்த சுத்திக்கு அவசியமான ஆகாரமின்மை முதலியன காரணங்களாகலாம். வியாதிக்குரிய காரணங்களைப் பெற்றோர் ஆராய்ந்து துரிதமாக அத் தவறான நிலைகளை மாற்ற வேண்டும்.CCh 407.2

    குழந்தைகள் தொட்டிலிருந்தே தங்கள் விருப்பதைப் பேணவும், சாப்பிடவே ஜீவிப்பதாகவும் கற்பிக்கப் படுகிறார்கள். குழந்தைகள் சிறு பிராய முதலே நற் குணங்கட்டதாய் தன் பிள்ளைகளுக்கு அதிகம் உதவி செய்கிறாள். அவர்கள் தங்கள் தேட்டங்களை அடக்கவோ, அல்லது அவர்கள் மனம் போல் நினைத்த நேரமெல்லாம் உண்டு பெருந்திண்டிகளாக பழக்குவிக்கவோ தாயால் ஆகும். பகலில் செய்ய வேண்டியவைகளை தாய் அடிக்கடி திட்டப்படுத்துகிறாள். குழந்தைகள் தன்னை தொந்தரவு செய்வதைத் தடுக்க அவர்களைச் சாந்தப்படுத்தி, துக்கத்தை மாற்றுவதற்குப் பதிலாக ஏதாவது தின்னும்படி கொடுத்து சிறிது தடுக்கிறார்கள். அது பெருங் கெடுதி. அவர்களுக்கு ஆகாரம் கொஞ்சமும் வேண்டா வேளையில் குழந்தைகளின் வயிறு ஆகாரத்தால் பாரமாக்கப் படுகிறது. ஆனால் வேண்டியிருந்ததெல்லாம் தாயின் சிறிது கவனமும் காலமுமேயாகும். அவளோ தன் குழந்தைகளைச் சற்று சாந்தி பண்ண எடுக்கும் வேளையை அதிக விலையேறப் பெற்றதாக எண்ணிவிட்டாள். ஒரு வேளை விருந்தாளிகள் விரும்பத் தக்க முறையில் வீட்டை ஒழுங்கு படுத்துவதும், ஆகாரத்தை மிக டம்பமான முறையில் தயாரிப்பதும் தன் குழந்தைகளின் ஆனந்தம் ஆரோக்கியம் முதலியவைகளுக்கு மேலானவை என அவள் கருதுகிறாள்.CCh 407.3

    குழந்தைகளின் ஆடைகளை ஆயத்தப்படுத்துவதில் வசதி, ஆரோக்கியம் ஆகியவை, டம்பம், ஆச்சரியத்தை பிறப்பிக்க விரும்புதல் ஆகியவைகளை விட முதலிடம் பெற வேண்டும். சிறிய ஆடைகளை பல வித சித்திரத் தையல்களால் அழகுபடுத்தும் அனாவசிய வேலைக்குச் சமயம் எடுப்பதினால் அவள் தன் ஆரோக்கியத்தையும் தன் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பங்கப்படுத்துகிறாள். தனக்கு இளைப்பாறுதலும் இனிய அப்பியாசங்களும் தேவைப்பட்ட சமயத்தில் அவள் தன் கண்களையும், நரம்புகளையும், தையல் வேலையினால் பலயீனமாக்குகிறாள். தனக்கு அவசியமான பலத்தைப் பேண வேண்டும். A.H. 255-267.CCh 408.1