Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-6

    இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்

    திருடன் இரவில் நிசப்தமாகவும், இரகசியமாகவும், காணப்படக்கூடாத் பிரகாரமாகவும் வருகிறதுபோல, முடிவு நெருங்கி வருகின்றது. மற்றவர்கள் தூங்குகிறது போல் நாம் தூங்காமல், தெளிந்த புத்தியுள்ளவர்களாக விழித்திருக்கும்படி தேவன் அருள் புரிவாராக. சத்தியம் சீக்கிரம் மகத்துவமாக வெற்றிபெறும். இப்பொழுது தேவனோடேகூட ஊழியக்காரராயிருக்கத் தெரிந்துகொள்ளுகிற யாவரும் வெற்றிபெறுவர். காலம் நெருங்கி விட்டது; ஒருவரும் வேலை செய்யக்கூடாத இராக்காலம் சீக்கிரம் வருகிறது. நிகழ்கால சத்திய ஒளியில் மகிழ்ச்சியாயிருக்கின்றவர்கள், சத்தியத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க இப்பொழுது துரிதப்படுவார்களாக. யாரை நான் அனுப்புவேன்? எனக் கர்த்தர் கேட்கிறார். சத்தியத்திற்காக தியாகஞ்செய்ய விரும்புவோர்; இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்பார்களாக.CCh 121.1

    நமது நண்பர்களுக்குள்ளும் அயலகத்தாருக்குள்ளும் தேவன் விரும்புகிற அளவுக்கு மிகக் குறைந்த அளவே நாம் ஊழியஞ் செய்திருக்கிறோம். சத்தியத்தை அறியாத அனேகர் நமது நாட்டின் ஒவ்வொரு நகரிலும் இருக்கிறார்கள். அகன்ற இவ்வுலகில் கடல்களுக்கப்பாலுள்ள நாடுகளில் நாம் உழுது பண்படுத்தி விதைக்கவேண்டிய அனேக புது இடங்கள் இருக்கின்றன. An Appeal to the Ministers and Church Officers.CCh 121.2

    நாம் ஆபத்துக் காலத்தக் கிட்டிவிட்டோம், நாம் கனவிலும் நினையாத மா பெரும் ஆபத்து நமக்குமுன் இருக்கிறது. பாதாளத்திலிருந்து வரும் ஒரு வல்லமை மனிதரைப் பரத்துக்கு விரோதமாகப் போராடத் தூண்டுகிறது. தேவ கற்பனையை வீணாக்க மனிதர்கள் சாத்தானின் செயற்குழுக்களோடு ஆலோசிக்கிறார்கள். பரத்திலிருந்து அக்கினி வந்து பட்சித்த சோதோமியரைப்போலவும், ஜலப்பிரளயம் வாரிச் சென்ற நோவாவின் காலத்து மக்களைப்போலவும் தற்காலத்தவர்கள் ஜீவிக்கிறார்கள். நித்திய தத்துவங்களை மறக்கும்படி சாத்தானின் வல்லமை மனிதர் உள்ளங்களில் கிரியை செய்கிறது. தன் நோக்கங்களுக்குத் தக்கவாறு சத்துரு விஷயங்களை ஒழுங்குபடுத்தி இருக்கிறான். உலக ஜோலி, விளையாட்டுகள், தற்கால டாம்பீகங்கள் ஆண், பெண் இருபாலாருடைய மனதையும் அலைக்கழிக்கின்றன. சிற்றின்ப சிந்தைகளும், பலனற்ற வாசிப்புகளும் புத்தியைக் கெடுக்கின்றன. நித்திய அழிவுக்குச் செல்லும் நீண்ட விசாலமான பாதையில் பெரும் பவனி சென்றுகொண்டிருக்கிறது. மீறுதல்களினாலும், களியாட்டுகளினாலும், குடிவெறியாலும் உலகம் நிரம்பு சபையையும் வெறுபடச்செய்கிறது. தெய்வீக நீதித்திட்டமான தேவகற்பனைகள் அனாவசியமென கூறப்படுகின்றன. 9T. 42,43.CCh 122.1

    தீர்க்கதரிசனங்களைப்பற்றி பேசுவதற்குமுன் அவைகள் நிறைவேற வேண்டுமென நாம் காத்திருக்க வேண்டுமா? பின்பு பேசுவதினால் நம் வாக்குக்கு என்ன மதிப்புண்டு? பாவத்தை ஒழுக்கும்படி எச்சரிக்க, தேவ கோபாக்கினை பாவி மேல் செலுத்தப்படும் வரை காத்திருப்போமா? தேவ வசனத்தின் மேலுள்ள நமது விசுவாசம் எங்கே? அவர் சொன்னவைகளை விசுவாசிக்கு முன், அவைகள் நிறைவேற நாம் காத்திருக்க வேண்டுமா? இதோ வாசலருகே நமது கர்த்தருடைய நாள் வந்துவிட்டது எனக் காட்டும் தெளிவான, திட்டமான ஒளி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது: காலம் கடந்து போகுமுன் நாம் அதை வாசித்து விளங்கிக் கொள்வோமாக. 9T. 20.CCh 122.2

    இதோ, அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்CCh 123.1