Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-56

    விசுவாசத்தில் வேறுபட்டவருடன் நம் உறவு

    உலகினருடனே நாம் எத்தகைய ஐக்கியமும் கொள்ளுவது கூடாதோவென்ற கேள்வி எழலாம். திருவசனம் நம்முடைய வழிகாட்டியாக விருக்கின்றது. நாஸ்திகருடனும், அவிசுவாசிகளுடனும் நம்மை ஒன்றுபடுத்திக் காட்டும் உறவுகள் யாவையும் தெய்வத் திருமுறை தடை செய்கின்றது. நாம் அவர்கள் மத்தியிலிருந்து பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருக்கவே கட்டளை பெற்றிருக்கிறோம். அவர்களுடைய அலுவல் திட்டங்கள் எதிலும் நாம் பிணைக்கப்படக் கூடாது. நாம் துறவிகள் போல வாழ வேண்டியதில்லை. நாம் செய்ய கூடிய நன்மைகள் யாவையும் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டியதே.CCh 658.1

    கிறிஸ்துவானவர் இவ்விதமாகச் செய்வதற்கு நமக்கு முன்மாதிரி காண்பித்திருக்கிறார். ஆயக்காரரோடும், பாவிகளோடும் போஜனம் பண்ணுமாறு அழைக்கப்பட்ட பொழுது அவர் மறுத்தரைக்கவில்லை. ஏனெனில் இந்த வகுப்பினருடனே கலந்துறவாடினாலன்றி, இவர்களைக் கவர்ந்து கொள்வதற்கு வேறு வழி கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுடைய மனதிலே நித்திய காரியங்களைப் பற்றிய சிரத்தையூட்டும் பொருட்களைக் குறித்து அவர் சம்பாஷித்தார். அவர் கூறும் ஆலோசனை இதுவே: “இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத். 5 : 16.GW 394.CCh 658.2

    அவிசுவாசிகளுடைய செல்வாக்கினால் பாதிக்கப்படாத அளவிற்கு ஆவிக்குரிய பலமுடையவர்களாயும் அவர்களைத் தேவனுடனே பிணைக்கும் நோக்கத்துடனே நாம் அவர்களுடனே உறவு கொள்ளுவோமானால் அவர்களுடைய சகவாசம் நம்மைக் கெடுத்துப் போடாதிருக்கும்.CCh 659.1

    தவறிப்போன மனிதனை முடிவற்ற தெய்வத்துடனே பிணைக்கு மாறும் உலகை இரட்சிக்கவுமே கிறிஸ்துவானவர் வந்தார். கிறிஸ்துவைப் பின் செல்லுகிறவர்கள் வெளிச்சம் வழிச் செல்லும் கருவிகளாக விளங்கவேண்டும். தெய்வத்துடனே இருக்கும் உறவை நிலைப்ப்டுத்திக் கொண்டு, இருளிலும், தவறிலும் இருப்போருக்கு பரலோகத்திலிருந்து அவர்கள் பெறுகின்ற விசேஷித்த ஆசிர்வாதங்களை அளிக்க வேண்டும். தனது காலத்தில் காணப்பட்ட அக்கிரமங்களின் நடுவே ஏனோக்கு கறைப்படாது தன்னைக் காத்துக்கொண்டார். நம்முடைய நாளில் நாம் கறைப்பட வேண்டிய அவசியமென்ன? நமது எஜமானைப் போலவே துன்பப்படும் மனித வர்க்கத்தின் பேரில் உருக்கமான இரக்கமும், நிர்ப்பாக்கியமடைந்தோரின் மீது பரிதாபமும், தேவையுடையோர், கலக்கமடைந்தோர், நம்பிக்கை யிழந்தோரிடத்தில் உதாரத்துவமும் உள்ளவர்களாய் இருக்கலாம். 5T 113.CCh 659.2

    மூன்றும் தூதனின் தூதானது நம்மைப் பொறுத்த மாத்திரத்தில் எவ்வளவோ பொருளடங்கியது என்றும், கடவுளைச் சேவிக்கிறவர்களையும் அவரைச் சேவிக்காதவர்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது ஓய்வு நாளே என்றும் என் உடன் சகோதரர் உணர்ந்து கொள்ளுமாறு ஜெபிக்கின்றேன். இக்காரியத்தில் நித்திரை மயக்கமும் அசட்டையுமாக இருப்பவர்கள் விழித்து எழுவார்களாக.CCh 659.3

    நாம் பரிசுத்தமாக வாழுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது விசுவாசத்தின் தனிப்பட்ட பண்புகளை நாம் பெற்றிருப்பதும் அவர்கள் பெறாமலிருப்பதும் ஒன்று போலவே தான் என்று பிறர் எண்ணாதபடி நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சத்தியத்திற்காகவும், நீதியின் பொருட்டும் நாம் நின்றிருந்த நிலையினின்றும் அதிக திட்டமான நிலையை நாம் கொள்ள வேண்டியதாகும். இது நமது மேல் உள்ள பக்தி வினயமான பொறுப்பு. தேவனுடைய கற்பனைகளைக் கைகொள்ளுகிறவர்களுக்கும், கைக்கொள்ளாதவர்களுக்குமிடையே திட்டமான எல்லைக்குறி சந்தேகத்திற்கிடமில்லாத வகையிலே போடப்படும். நாம் மனச்சாட்சியின் உணர்வினாலே தேவனைக் கனம் பண்ணி, அவரோடே உடன் படிக்கை செய்ததால் உண்டாகிய உறவை சுறுசுறுப்புடனே பாதுகாத்து, கடுமையான பரீட்சைகளுக்குட்படவேண்டிய தான ஒரு ஜனத்திற்கு அத்தியாவசியமான ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ வேண்டும். நம்முடைய விசுவாசமும், மார்க்கமும் நம்முடைய வாழ்வை ஆண்டுகொள்ளும் சக்தியல்ல என்று பிறர் எண்ணுமாறு செய்வது தெய்வத்திற்கு பெருங்கனவீனமாகும். இவ்வாறு நாம் நமது ஜீவனாகவிருக்கின்ற தெய்வ கற்பனையை விட்டுத்திரும்பி, அவர் நம்முடைய தெய்வமாயிருப்பதையும் நாம் அவருடைய ஜனமாயிருப்பதையும் மறுதலிக்கின்றோம். 7T 108.CCh 659.4