Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-34

    கிறிஸ்தவ வீடு

    குடும்பம் வாழுவதற்கு இடத்தை தெரிந்துகொள்ளும் போது நம்மையும் நம் குடும்பத்தையும் சூழக்கூடிய சன்மார்க்க, மத செல்வாக்கு8 என்னமாயிருக்குமென முதலாவது ஆராய வேண்டுமென்பது கடவுள் சித்தம்.CCh 420.1

    எனவே வாழுமிடத்தை தேடும் போது இந் நோக்கம் இருக்கட்டும். ஐசுவரியம், ஆடம்பர வாழ்க்கை அல்லது சமுதாய் பழக்க வழக்கங்களின் ஆசை வழி நடத்தக் கூடாது, சாமான்யம், பரிசுத்தம், ஆரோக்கியம், மெய் மதிப்பு எவைகளோ அவைகளையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.CCh 420.2

    அடிக்கடி தீய காட்சிகளும் சத்தங்களும் இருக்குமிடங்களையும், களைப்பையும் அமைதியின்மையையும் கொண்டு வரும் குழப்பமும் துன்பமும் நிறைந்த ஸ்தலங்களி விட்டு விட்டு, கடவுள் கிரியைகளைக் காணக்கூடிய ஸ்தலங்களுக்குப் போங்கள், இயற்கையின் சாந்தி, அமைதி, அலங்காரமுமுள்ள இடத்தில் ஆவியின் முசிப்பாறுதல் காணுங்கள். பச்சைப் பசேலென விளங்கும் வயல் வெளிகளையும், தோப்புகளையும், மலைகளையும் கண்கள் நோக்குவதாக, நகரப் புகை, தூசிகளால் மறைக்கப்படாத நீல வானத்தை நோக்கி பார்த்து, புத்துயிர் ஊட்டும் பரிசுத்த ஆகாயத்தைச் சுவாசியுங்கள்.CCh 420.3

    கடவுள் வழி திறக்கும்பொழுது, குடும்பங்கள் நகரங்களை விட்டு வெளியேறுங் காலம் வரும். குழந்தைகள் கிராமங்களுக்கு கொண்டு போகப்பட வேண்டும். தங்கள் வருவாய்க்கு தக்க இடத்தை பெற்றோர் வாங்க வேண்டும். இடம் சிறிதாகவிருந்தாலும் பண்படுத்தக் கூடிய நிலமும் இருக்க வேண்டும்.CCh 420.4

    தந்தை தாய் இருவரும் நிலமும் வசதியான வீடும் உடையவர்களாயிருப்பின் அவர்கள் ராஜா ராணிகளே.CCh 421.1

    கூடுமானால், பிள்ளைகள் நிலத்தைப் பண்படுத்தும்படி உதவ வீடு நகரத்திற்கு வெளியே இருக்க வேண்டும். ஒவ்வொரு வருக்கும் ஒரு சிறிய நிலப் பகுதி இருக்கட்டும்; தோட்ட வேலை கற்பிகையில் நிலத்தைப் பக்குவப் படுத்தும் போதும், களைகளைப் பிடுங்கும் போதும், கேடான துர்ப்பழக்கங்களை விட்டு விலகியிருப்பதின் முக்கியத்தையும் கற்பியுங்கள். தோட்டத்திலுள்ள களைகளி ஒழிப்பது போலவே கெட்ட பழக்கங்களையும் ஒழித்து விட கற்பியுங்கள். இப்பாடங்களை கற்பிக்க காலம் பிடிக்கும், ஆயுனும் மிகப் பெரிய ஊதியந் தரும்.CCh 421.2

    தன் பொக்கிஷத்தைத் தோண்டி எடுக்கத் தைரியம், சித்தக், முயற்சியுடையவர்களுக்கு இயற்கை தன் அகத்தே பெரும் ஆசீர்வாதங்களை அடக்கிக் கொண்டிருக்கிறது. விவசாயம் கேவலமென எண்ணும் பல சமுசாரிகள் தங்கள் நிலங்களிலிருந்து தகுந்த அளவு பயன் அடைவதில்லை; தங்களுக்கும் தங்கள் குடும்ப பங்குகளுக்கும் விவசாயம் ஆசீர்வாதமாயிருப்பதை அவர்கிஅள் காண்பதில்லை.CCh 421.3

    தாங்கள் கைக்கொண்டு வரும் சத்தியத்திற்கு உகந்த முறையில் தங்கள் சுற்றுப் புறத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்று தெய்வம் எதிர்பார்க்கின்றார். அப்பொழுது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சரியான பாடங்களை கற்பிக்க முடியும், அவர்களும் பூலோக வீட்டோடு மேலோக வீட்டை இணைத்துக் கற்றுக்கொள்வர். கூடுமான வரையில் இவ்வுலகக் குடும்பம் பரலோகக் குடும்பத்திற்கு மாதிரியாக இருக்க வேண்டும். தாழ்வும் ஈனமுமுள்ள சோதனைகளில் உழன்று கொண்டிருப்பது மிகுதியான வலிமையை இழக்கச் செய்யும். இவ்வுலகில் தாங்கள் வேலை பழகுகிறவர்களென பிள்ளைகள் கற்பிக்கப்பட வேண்டும்; பின்பு கடவுளை நேசித்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறவர்களுக்குக் கிறிஸ்து ஆயத்தம் பண்ணும் உன்னத வாசஸ்தலத்தில் தாங்கள் குடிகளாவதற்கு கற்பிக்கப்பட வேண்டும்க். பெற்றோர்கள் செய்ய வேண்டிய மகா உன்னத கடமை இதுவே. மக்கள் உபயோகிக்கும் எல்லாக் கட்டடங்களும் கூடிய வரை உலர்ந்த மேடான இடங்களில் கட்டப்பட வேண்டும். இதை அடிக்கடி கவனிப்பதில்லை. நீர் தேக்கி சதா ஈரடிப்பட்ட மலேரியாவுள்ள இடங்களில் வசிப்பதினால் தொடர்ந்த சுகவீனம், கொடிய வியாதிகள், பல மரணங்களும் சம்பவிக்கின்றன.CCh 421.4

    முழுவதும் சுத்த ஆகாயம் உலாவவும் போதிய சூரிய ஒளி பிரவேசிக்கவும் தக்க முறையில் வீட்டைக் கட்டுவது மிக முக்கியமாகும். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் போதிய சூரிய ஒளியும் காற்றுப் போக்கும் இருக்க வேண்டும். பள்ளியறைகளில் இராப் பகலாய் காற்று சுற்றி வர வேண்டும். தினமும் காற்றும் ஒளியும் படும்படி திறக்கப்படக்கூடாத எந்த அறையும் நித்திரை செய்ய உபயோகிக்கப்படலாகாது.CCh 422.1

    வீட்டுக்குச் சற்று அப்புறம் பல மரங்களும் செடி கொடிகளும் அலங்காரமாக பின்னிப் பிணைந்து காணப்படின் குடும்ப மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருந்து, நன்கு கவனிக்கப் பட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு செய்யாது. ஆனால் வீட்டை நெருங்கி நிழல் மரங்களும், செடி கொடிகளும் அடர்ந்திருப்பதால் ஆரோக்கியம் பங்கப்படுகிறது; ஏனெனில் அவை காற்றோட்டத்தைத் தடுத்து, சூரிய ஒளியை மறைக்கின்றன. அதன் பலனாக விசேஷமாக மழை காலத்தில் வீட்டைச் சுற்றி ஈரமாயிருக்கும்.CCh 422.2