Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவன் அங்கீகரித்தாரென்ற நிச்சயத்தை தேடுகிறவர்களுக்கு ஆலோசனை

    நீ தேவனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறாயென நீ எப்படி அறிந்துகொள்வாய்? அவருடைய வசனத்தை ஜெபத்தோடு படி. அவர் புத்தகம் பாவத்தைச் சுட்டி காட்டுகிறது. மிகத்தெளிவுடன் அது இரட்சணிய வழியை வெளிப்படுத்துகிறது. அது ஒரு பிரகாசமும், மகிமையும் பொருந்திய பிரதிபலன் உண்டெனக் காட்டுகிறது. அது பூரண இரட்சகரை உனக்கு வெளிப்படுத்தி, அவருடைய மட்டற்ற இரக்கத்தினால் மட்டுமே இரட்சிப்பை நீ எதிர் நோக்க முடியும் என கற்பிக்கிறது.CCh 189.1

    தனி ஜெபத்தை அசட்டை பண்ணாதே; ஏனெனில் அதுவே பக்தி மார்க்கத்தின் உயிர். ஆத்தும சுத்தத்திற்காக ஊக்கமாய், வல்லமையோடு ஜெபி. உன் ஜீவன் அழியப் போகையில் எப்படி அதைக் காக்கும்படி ஊக்கமாயும் ஆர்வமாயும் வேண்டிக்கொள்வாயோ அப்படிச் செய். வாய்விட்டு சொல்லக்கூடாத பேராவல்கள் உன்னில் உருவாகுமளவும், பாவ மன்னிப்பின் இனிய நிச்சயம் கிடைக்குமளவும் நீ தேவனிடம் தரித்திரு. 1T. 163.CCh 189.2

    உனக்கு வரும் துன்பம் துயரங்களைக் குறித்து நீ பிரமிப்படையும்படி உன்னை அவர் விட்டுவிடவில்லை. அவை யாவையும் பற்றி உனக்குச் சொல்லி, துன்பங்கள் நிமித்தம் நீ அதைரியப்படவோ, கலங்கவோ கூடாதென அறிவித்திருக்கிறார். உன் மீட்பராகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, மகிழ்ந்து ஆர்ப்பரி. நம் சொந்த சகோதரர், நெருங்கிய நண்பர்களிடமிருந்து வரும் துன்பங்கள்தான் சகிப்பதற்கு மிகக் கஷ்டமானவை; ஆனால், இவைகளையுங்கூட பொறுமை யோடு சகிக்க முடியும். கிறிஸ்து இன்னமும் யோசேப்பின் புதிய கல்லறையிலில்லை. அவர் உயிர்த்து, பரமேறி, நமக்காக பரிந்து பேசுகிறார். நம்மை நேசித்து, நமக்காக மரித்த இரட்சகர் நமக்குண்டு; எனவே, அவர் மூலம் நமக்கு நம்பிக்கையும், பலமும், தைரியமுமுண்டு; அவருடன் இருக்க, அவருடைய சிம்மாசனத்தில் நமக்கோர் இடமுமுண்டு. நீ அவரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் அவர் உனக்கு உதவிச் செய்யவல்லவராயிருக்கிறார்.CCh 189.3

    நீ வகிக்கும் பொறுப்பான வேலையில் நீ உன் குறைவை உணருகிறாயா? இதற்காக நீ தேவனுக்கு நன்றி சொல்லு. உன் குறையை எவ்வளவாய் உணருகிறாயா, அவ்வளவாய் நீ உனக்கு ஒரு உதவியாளரைத் தேடுவாய். தேவனிடத்தில் சேருங்கள்; அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். யாக். 4:8. நீ சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்கவே இயேசு ஆசிக்கிறார். தேவன் உனக்கருளிய திறமையைக் கொண்டு நீ மிகச் சிறப்பாய்ச் செய்யும்படி அவர் விரும்புகிறார், பின்பு கர்த்தர் உனக்கு உதவி செய்யவும், உன் பாரத்தைத் தாங்கி உனக்கு உதவியாயிருக்கும்படி பலரை எழுப்பவும் அவரை நம்பு.CCh 190.1

    மனிதருடைய பட்சமற்ற வார்த்தைகள் தன்னைத் துக்கப்படுத்த வேண்டாம். இயேசுவைப் பற்றி மனிதர் பட்சமற்ற காரியங்களைப் பேசவில்லையா? நீ தவறுகிறாய், பட்சமற்ற விதமாய்ப் பேசும்படியான செயல்களை நீ செய்திருக்கலாம்; ஆனால் இயேசுவோ ஒருபோதும் அப்படி எதுவும் செய்ததில்லை. அவர் சுத்தமும், கறைதிரை யற்றும், களங்கமற்றுமிருந்தார். மகிமையின் அரசன் அடைந்ததைவிட மேலான வாழ்க்கையை நீ எதிர் நோக்காதே. உன்னைத் துக்கப்படுத்த கூடும் என உன் சத்துருக்களும், சாத்தானும் காணும்போது அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இயேசுவை நோக்கிப் பார்த்து, அவருடைய மகிமைக்கென ஒரே நோக்கத்துடன் உழை. தேவ அன்பில் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்து. 8 T. 128, 129.CCh 190.2