Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-40

    வாசிக்கத்தக்கவை

    ஜீவியக் கடமைகளை மிகச் சிறந்த முறையில் செய்ய சரீரமானத, ஆவிக்குரிய சக்திகளாஇ ஆயத்தப்படுத்துவதே கல்வி. தாங்கும் சக்திகளும், மூளையின் பலமும் அலுவலும் குறைவதும் கூடுவதும் அவைகளைக் கையாளும் முறையைப் பொருத்ததாகும். அதன் சக்திகள் யாவும் நிரந்தரமாய் விருத்தியடையும்படி தக்க முறையில் மனசு பரிபாலிக்கப்பட வேண்டும்.CCh 458.1

    இளைஞர் பெரும்பாலோர் புத்தகப் பிரியர்கள். தங்களுக்குக் கிடைப்பதை யெல்லாம் ஒன்று விடாமல் வாசிக்க ஆசிப்பர். தாங்கள் வாசிப்பதையும் கேட்பதையும் குறித்து அவர்கள் வெகு ஜாக்கிரதையாக இருப்பார்களாக. தகாத வாசிப்பினால் அவர்கள் கறைப்படுவதற்கேதுவாக பெரிய ஆபத்திலிருக்கிறார்களென நான் உணர்த்தப்பட்டேன். வாலிபருடைய மனசுகளை நிலைகுலைக்கச் செய்யும் ஆயிரம் வழி வகைகள் சாத்தானிடம் உண்டு. ஒரு விநாடியும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. சத்துருவின் சோதனைக்குட்படாதபடி இருக்க அவர்கள் தங்கள் மனசுகளில் ஒரு காவல் வைக்க வேண்டும். M. Y. P. 271.CCh 458.2